எனை மட்டும் சுடும் குளிரே
நிலா பிரகாஷ்
அத்தியாயம் 1
“ டேனி ..இதில கம்பனிக்கு ஷேர் இல்லனா வர்ற ரிஸ்க் முழுவதும் உன்னுடையது …கம்பனி பொறுப்பு ஏற்காது “ மைக்கேல் தோளை குலுக்கினார்.
டேனி என்கிற டேனியல் சற்றே கூர்மையான கண்களுடன் அவரை கேட்டான்
“அப்ப வர்ற லாபம் முழுவதும் எனக்கானது அப்படி தானே”
“ அதில கம்பெனிக்கு பங்கு உண்டு ..இந்த ப்ராண்ட் நேம் நான் உருவாக்கியது ..அப்பரம் உன் அண்ணன் ..”
மைக்கேல் தொடர்ந்து பேச அனுமதிக்காதது போல் டேனி பேசினான் .
“ என்ன சொல்ல வரீங்க னு புரியுது..பத்து வருஷத்துக்கு முன்னாடி முதுகில் குத்திட்டு போனவனுக்கு இன்னும் பங்கிருக்கு அதானே “
டேனியலின் பேச்சைக் கேட்டு மைக்கேலின் முகம் இறுகியது.
“ அப்பா..ஒ சாரி எம் டி சார் இது அவன் மேல் உள்ள பாசம் எல்லாம் இல்ல ..உங்க கம்பெனி நீங்க சேவர் ஆக்க அவன் ஒரு காரணம் .. நீங்க ஒன்னு மறந்துடீங்க பா ..நான் உங்களை மாதிரியே பக்கா பிஸினஸ் மென் ..வியாபாரத்தில் உணர்ச்சி கோ உறவுகளுக்கோ மதிப்பில்லை னு புரிஞ்சவன் நான்“
“ டேனி ...நீ உன் அப்பா கிட்ட பேசிட்டு இருக்க..எனக்கு அப்பரம் இதெல்லாம் யாருக்கு போக போகுது “
மைக்கேலின் இந்த கேள்விக்கு ஒரு புன்முறுவலுடனே பதிலளித்தப்படி எழுந்தான்..
“ உங்க மூத்த பையனுக்கு ஏன்னா நான் எனக்கென்ற ப்ராண்ட் நேம் ஐ நானே உருவாக்குகிறேன் .வெல் யூ நோ மீ .. நாளைக்கு இதை பத்தின ஃபைல் உங்க டேபிள் ல இருக்கும்”
மைக்கேலின் முகம் உணர்ச்சி களின் வகையறைக்கு அப்பாற்பட்டு இருந்தது. பண ஈட்டும் பெருமை சொந்த இரத்தத்தை யே பகையாளியாக்கும் என்பதன் நிதர்சனம அவரும் அவர் மகன் டேனியலும்.
மைக்கேல் க்கு இரு மகன்கள்.மூத்தவன் வில்லியம்ஸ் எப்பொழுதுமே அவரைச் சார்ந்திருந்தான் .தனக்கான தேவைகளை அழுதோ அடம் பிடித்தோ அவரிடம் நிறைவேற்றிக் கொண்டான்.ஒரு வகையில் மைக்கேலின் ஆளுமைக்கு அது பிடித்திருந்தது . அவரின் திறமையின் கர்வத்திற்கு சம்மட்டி அடியாகவே இளைய மகன் பிறந்திருந்தான்.
டேனியல்.. ஐந்து வயதிலிருந்தே அவனுடைய ஆடை தேர்வு அவனுடையதாக இருந்தது .அவனைச் சார்ந்த அத்தனை முடிவுகளும் அடுத்தவர் கருத்திற்கு அப்பாற்பட்டே இருந்தது .எவரிடமும் எதற்காகவும் மண்டியிட்டு பெற்றதில்லை தன் தந்தையிடம் கூட .மைக்கேல் ஒரு உறையில் இரு கத்தி என உணர்ந்தார். அவருக்கும் அவனுக்குமான இடைவெளிக்கு அதுவே காரணமுமாயிற்று.
டேனியல் அதிகம் பேச மாட்டான்.நண்பர்களின் வட்டம் மிகமிக குறைவு.அதிகப்பட்ச அவனின் வார்த்தைகள் அலுவலகத்தில் அவனின் தொழில் சார்ந்தோ இல்லத்தில் அவன் தாய் சார்ந்தோ இருக்கும்.
பத்து வருடங்களுக்கு முன்பு தொழில் சுணக்கம் ஏற்படுகையில் தான் வளர்த்து வந்த அந்த துணி ஏற்றுமதி நிறுவனம் கைவிட்டு சென்று விடுமோ என மைக்கேல் கையறு நிலையில் நிற்கையில் தன் இரா பகல் பாராத உழைப்பால் தோள் கொடுத்து நின்றான் டேனியல். இருபது வயதில் தறிகளுக்குள்ளும் கடன்காரர்களிடம் பதில் சொல்லி தொழிலை மீட்டு எடுக்க இரவு பகல் பாராது உழைத்திருக்கிறான் .
ஆனால்அவன் அண்ணண் வில்லியம்ஸ் தனக்கு தொழிலில் அவ்வளவு அனுபவமில்லை என்ற ஒற்றை விளக்கத்தில் அத்தனை பொறுப்புகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டான்.இத்தனைக்கும் அவன் டேனியலை விட ஆறு ஆண்டுகளுக்கு மூத்தவன். இதில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் காதல் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றான்.
மிருகங்களுக்கு தன் குட்டிகளில் போஷாக்கு ஆனவற்றை விடுத்து சற்றே நோஞ்சானை தூக்கி திரியும் பழக்கம் உண்டு இதற்கு மனிதர்கள் விதிவிலக்கு அல்ல போலும். பெற்றோராக அவரவர் கண்களுக்கு நியாயம் இருப்பினும் சரியாக இருப்பதனாலயே மறுதலிக்கப்பட்ட வலி சிலரை , “தான் மட்டும் “என்ற தனி உலகில் மிருகமாக்குகிறது.இதில் டேனி பாசத்திற்கு ஏங்கி ஏங்கி ஒரு கட்டத்தில் அதை வெறுத்து ஒதுக்கும் மிருகமாக வே ஆகி போனான்.
டேனியல் அந்த மூன்றடுக்கு மாடி வீட்டினுள் நுழைந்தான்.
அந்த வீடு கரூரில் நகர மத்தியில் இருந்தது.வீட்டின் முகப்பில் M என்ற வார்த்தையும் அதன் தலைகீழ் வார்த்தையும் செதுக்கியிருந்தது.அதை வெறித்தபடி உள்நுழைந்தான் டேனியல்.
அவன் தாய் ஜெயா என்கிற ஜெயமேரி மகனை பரிவுடன் நோக்கினாள்.வாலிப வயதிற்கான எந்த சுகத்தையும் அவன் அனுபவித்ததே இல்லை நண்பர்கள் கேளிக்கை எதுவுமில்லை கடனை அடைக்க போராட்டம் பின் தொழிலை விரிவுபடுத்த உழைப்பு என ஒரு இயந்திர வாழ்க்கை க்கு உள்ளே உலவும் மகனை மீட்க தெரியாத வருத்தம் அவள் கண்களில் இருந்தது.
“சாப்பாடு எடுத்து வைக்கவா ? “
அவள் கேட்டவுடன் ம் என்ற வார்த்தையுடன் தன் அறைக்குள் சென்றான் டேனி.. அவன் குளித்து முடித்து வருவதற்குள் மைக்கேல் ஃபோன் செய்திருந்தார். டேனி சாப்பிட அமர்ந்தவுடன் ஜெயா மெல்ல கேட்கலானாள்.
“ டேனி ..புது ப்ராஜெக்ட் ல அப்பாவையும் அண்ணனையும் பார்ட்னர் ஆ சேர்த்திக்கலாம் இல்ல டா?”
டேனி அதை எதிர்பார்த்தது போலவே அவளை பார்த்தான்.
“ இல்லடா நாளைக்கு நஷ்டம் அது இது னு வந்துட்டா அப்பா பத்து பைசா சொத்துல தரமாட்டேன் சொல்லிட்டார்..உன்னால எல்லாம் தனியா சமாளிக்க முடியாது டா ..”
ஜெயா முடித்தவுடன் எந்தவித பதட்டமோ கோபமோ இல்லாமல் மறு கேள்வி கேட்டான்.
“ பத்து வருஷத்துக்கு முன்னாடி மட்டும் என்னால மட்டும் தான் தொழிலை காப்பாற்ற முடியும் னு சொன்னீங்க இப்ப மாறிடுச்சா மா ? “
ஜெயா என்ன பேசுவதென்று தெரியாமல் திணறினாள்.
” இந்த ப்ராஜெக்ட் என்னோடது .. இதுக்கு மேல இதில் பேசுவதற்கு ஒன்னுமில்ல ..அப்பரம் மா எனக்கு எப்போதும் இந்த சொத்தில் பங்கில்லை னு தெரியும் ..”
சாப்பிட்டு முடித்து உறங்கச் சென்றான் டேனி .ஜெயா பெருமூச்சு விட்டாள்” அப்பன் புத்தி அடுத்த தலைமுறைக்கு மெருகேற்றி வந்திருக்கிறது மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
டேனி உறங்கச் செல்கையில் மனது பிதற்றியது தன் திறமையை தட்டி வைக்க முயலும் தகப்பன் தனக்கு திறமை இருக்கிறது என்பதையே அறியாத தாய் தன் உழைப்பை மதிக்க தெரியாத அண்ணண் ..என்ன மாதிரியான உறவுகள் இவை ..
டேனிக்கு தன் தகப்பனின் திட்டம் தெளிவாகவே தெரிந்தது எந்த வகையிலும் உருப்படி ஆகாத பெரிய மகனை இதில் பார்ட்னர் ஆக்கி விட்டால் இறுதி வரை அவனை பற்றிய கவலைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடலாம் உழைத்து கொட்ட ஒருவன் இருக்கிறான் . டேனிக்கு எல்லா உறவுகளுமே சுயநலத்தின் பிம்பங்கள் என்று பதிந்து போன வடுவானது . சிறிது நேரத்தில் உறங்கிப் போனான்.
காலையில் மிக அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தான்.சென்னையில் அவன் எக்ஸ்ப்போர்ட் தொழிலின் பார்ட்னர் ஆக விரும்பும் கனடா நாட்டைச் சேர்ந்த எலன் என்பவருடன் மீட்டிங் இருந்தது.வருவதற்கு நாளையாகும் என்று தாயிடம் கூறி விட்டுச் சென்றான்.
அதே வேளையில் சென்னையில் கனடா எம்பஸிக்கு தான் சமர்ப்பிக்க போகும் கருத்துருவை மிக மிக கவனமாக வாசித்துக் கொண்டு இருந்தாள் ரியா என்கிற ரியா ஏஞ்சல்.
.ரியா இருபத்து நான்கு வயது இளம்பெண். சராசரி பெண்களை விட சற்றே உயரம் பிறை நெற்றி மாநிறத்திற்கு சற்றே அதிக நிறம்.. கொஞ்சம் எடுப்பான மூக்கு இதழ்கள் பெரிதும் இன்றி சிறிதும் இன்றி சிவந்த நிறத்தில் மிளிர்ந்தது எவரையும் மீண்டும் ஒருமுறை திரும்ப பார்க்க வைக்கும் அழகு அவளின் கோவில் சிலையின் வடிவழகு பல சமயங்களில் பெண்களையே அவளை வெறித்து பார்க்க வைத்திருக்கிறது ..மொத்தத்தில் அவளுக்கு அவள் பெயருக்கு ஏற்றாற் போல் அழகை படைத்திருந்தான் இறைவன். அவள் கிளம்ப எத்தனிக்கையில் அவள் செல்பேசி சிணுங்கியது.
“ அப்பா ..!”
அவள் குரலில் இருந்த துள்ளல் அவளின் தந்தை பாசத்தை தெளிவாக காட்டியது.அவளின் தந்தை சாமுவேல் கோவையில் ஒரு சிறிய கம்பெனியின் முதலாளி அவள் ஒரே பெண் என்பதால் அளவிட முடியாத அன்புடன் வளர்க்கப்பட்ட இளவரசி ஆகவே இருந்தாள்.
அவளின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் அலாவுதீன் ஜீனி அவள் தந்தை சாமுவேல்.அவள் கேட்டு எதுவும் அவர் இல்லை என்று சொன்னதில்லை.இப்பொழுதும் அவள் வெளிநாடு சென்று படிக்க விருப்பம் தெரிவித்த போது தாய் மேபல் உடன்படவில்லை அவரோ மனதிற்குள் வலி என்றாலும் வெளிப்படுத்தாது அவளின் நேர்முகத் தேர்வு க்கு புன்முறுவலுடனே அனுப்பி வைத்திருந்தார்.
“ ஏஞ்சுமா ரெடியாயிட்டியா ..? கிளம்ப கார் புக் பண்ணிருக்கேன் .அதிலயே சேவ் ஆ ரிட்டர்ன் வந்துருமா “
“ பா நானே புக் பண்ணிருந்தேன் ..ஏன்பா ? “
அவள் குரலில் தன் அப்பாவின் பாசத்திற்கான பெருமை இருந்தது
“ எப்ப தான் என்னைப் பற்றிய கவலை இல்லாமல் இருப்பீங்க பா ..ஐ ஹேவ் க்ரோன் அப் “ என்றாள்.
அதைக் கேட்டவுடன் அவர் சப்தமிட்டு சிரித்து
“சரி பெரிய மனுசி இந்த ஒரு தடவை அப்பா சொல்றத கேளு ..அப்பரம் நீயே முடிவெடு .. சரியா ..அந்த கால் டேக்ஸி ஓனர் அப்பாவுக்கு தெரிஞ்சவர் அதான் ..ஆல் த பெஸ்ட் ஏஞ்சுமா“
என்றார்.ரியா சந்தோச மிகுதியில் ஃபோனை வைத்தாள்.
அன்றைய நாளின் துவக்கம் அவளுக்கு மிக சிறப்பாக இருப்பினும் அன்றைய இரவு அவளை கண்ணீர் விட்டு கதறி அழ வைக்க காத்திருந்தது.