ராஜ்ஜியம் - 10
அபு வீட்டினுள் நுழைந்து கைக்கால் முகம் கழுவி விட்டு ஃசோபாவில் அமர்ந்தான். வேண்டும் என்றே சன் மியூசிக்கில் ஓடிய அந்தக் காதல் பாடலைச் சத்தமாக வைத்தான்.
“ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா என் சகியே ”
சமையல் கட்டில் நின்றிருந்த சமீராவுக்கு அவளையும் மீறி இதழ்களில் புன்முறுவல் பூத்தது. அவன் நேற்று இரவு எங்குச் சென்றான் என்ற பதைபதைப்பில் அடித்த ஃபோன்கால்கள் நினைவு வர முகம் இறுக்கமானது. தட்டில் ஸ்நாக்ஸ் மட்டும் இட்டுக் காபி கப்பைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தாள் சமீரா. அதைப் பருகியவன் முகம் அந்தக் காபியின் சுவையில் மலர்ந்தது. சமீரா உலகின் மிகச் சிறந்த செஃப் தோற்கும் அளவுக்குச் சமைப்பாள். அதுவும் அபுவுக்கு குழந்தைகளுக்கு என டிவி நிகழ்ச்சியில் பார்க்கும் அத்தனை சமையல் கலையையும் புதுமை புகுத்திச் சமைப்பாள். அன்றும் சிக்கன் பக்கோடா என மிக மிகச் சுவையான ஸ்நாக்ஸ் செய்திருந்தாள். அதைப் புகழ்ந்து பேசுவது போல் சமீயிடம் பேசலாமா அவன் மனம் எண்ணுகையில் ஹோட்டலிலிருந்து கால் வந்தது. அதைப் பேசி முடித்து அவன் அமர்கையில் சமீர் அமீர் இருவரும் அவன் முன் வந்து நின்றனர்.
“பாத்தொழப் போகனும் நேரமாச்சு “
அபு நேரத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். சட்டென்று துணி மாற்றித் தன் மகன்களை அழைத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு சென்றான். அன்று தொழுகையில் தன்னுடைய மது அருந்திய ஹராமிற்காக இறைவனிடம் பிராத்தித்து மன்னிப்பு வேண்டினான். இறைவனிடம் இன்னும் நாற்பது நாட்கள் தன்னுடைய வேண்டுதல்கள் எதுவும் கேட்கப்பெறுவதில்லை எனினும் தன்னுடைய தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினான் அபு.
இரவு வீடு வருகையில் கோதுமையில் பரோட்டா அதற்கு மிகச் சுவையான மட்டன் கிரேவி செய்திருந்தாள் சமீ. அதன் மணம் வீட்டிற்குள் நுழையும் முன்னரே அபு, சமீர், அமீர் மூவர் வயிற்றிலும் பசியைத் தூண்டியது.குடும்பம் முழுவதும் உணவு உண்ண அமர்ந்திருக்க அங்கே நிலவிய அசாத்திய மௌனத்தை நினைத்து எதாவது பேசி உடைத்து விடலாமா என நினைத்தான் அபு. இதுவரை அவள் சமையலுக்கு என்று பாராட்டியதே இல்லை புதிதாக எப்படி பாராட்டுவது அவன் பேச முடிவு எடுப்பதற்குள் அமீர் ஆரம்பித்தான்.
“அம்மா நீங்க மட்டும் ஹோட்டல் ஆரம்பிச்சீங்க அப்பா ஹோட்டல் எல்லாம் குளோஸ் தான் என்ன டேஸ்ட் ”
சமீ புன்னகைத்தாள். அபு எதுவும் பேசாது தன் மனைவியைப் பார்த்தான். ஏனோ அன்று அவன் கண்களுக்கு அவ்வளவு அழகாய் தெரிந்தாள் சமீரா.
‘ராட்சசி சண்டை போடும்போது மட்டும் இன்னும் பத்து மடங்கு அழகாகத் தெரிகிறாள்.’
இரவு உணவு முடித்து மகன்கள் இருவரும் உறங்கச் சென்று விட வரவேற்பறையில் டிவியை ஆன் செய்து செய்திகளைப் பார்த்தான் அபு. அவன் அவளாக எதாவது கேட்பாள் என்று காத்திருக்க எதுவுமே பேசாது குளித்து உடை மாற்றி உறங்கச் சென்றாள் சமீரா. அபுவும் அவள்பின் சென்று அறையில் நுழைந்தவன் பின்னிருந்து அவளை இறுக அணைத்தான். சமியின் கண்களில் நீர் துளிர்த்தது. அவன் புறம் திரும்பியவள் விசும்பலுடன் அவன் மார்பில் குத்தினாள்.
“என்னை இப்படி சமாதானம் பண்ண உனக்கு ஒரு வாரம் வேணுமா “
அவள் மேற்கொண்டு பேசும் முன் அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டவன் அவளைத் தூக்கிக் கட்டிலில் கிடத்தினான். அவன் கரங்கள் அவள் ஆடைகளைக் களைய முயற்சிக்க அதைத் தட்டி விட்டு முறைத்தாள் சமீ.
“நேத்து நைட்டு ஒரு ஃபோன் பண்ணிருக்கலாம்ல சூர்யா அண்ணா சொன்னதலா தெரிஞ்சுது எப்படி பயந்து போனேன் தெரியுமா.? ”
அவள் குரல் அழுகையில் முடிய தன் கரங்களுக்குள் கிடந்த அவளை மார்போடு அணைத்துக் கொண்டான்.
“சமீ அழாதடி. எனக்கு உன்னை விட்டா யாருடி இருக்கா.? நீயே பேசலனா எனக்கு என்ன பண்றதுனே தெரியல, அதான் கோபத்தில வார்த்தையை விட்டுட்டேன் சமீமா. “
அவன் குரல் குழைந்திருக்க அவன் இதழ்கள் அவள் நெற்றியில் முத்தமிட்டது. அவன் விரல்கள் மெல்ல அவள் உடல் முழுவதும் வருட அதற்குச் சிலிர்த்து குழையும் தனது உடலைக் கண்டு அவளுக்குக் கோபம் கொள்வதா நாணம் கொள்வதா என அறியாது திணறினாள். அவனது அருகாமையில் தன் பெண்மை எப்பொழுதும் இரும்பு எனப் பிதற்றிக் கொண்டுத் திரியும் மெல்லிறகு தான் என்பதை அவனது சிறு தீண்டல் மெய்ப்பிக்க அன்றைய இரவு அவளது நாணங்களை அதற்குச் சாட்சி கையொப்பம் இட்டு எழுதிக் கொண்டது.
மறுநாள் மிக முக்கியமான மீட்டிங் என்பதால் அறிவுமதி அவசர அவசரமாக வீட்டை விட்டுக் கிளம்பி கதவைச் சாத்துகையில் அன்புமதி அழைத்து இருந்தாள்.
“சொல்லு மதி ”
“மது நீ இந்த வீக் என்ட் வீட்ல இருப்பியா அம்மாவைக் கூட்டிட்டு வரலாம் னு இருக்கேன்”
“மதி நான் ஃப்ரீ தான் நீ கூட்டிட்டு வந்துடு கார் அனுப்பவா?”
“இல்லை மது நான் ஸ்கூட்டில வந்துடறேன்”
“ஒக்கே கால் யூப்பேக் (அப்புறம் கூப்பிடுறேன்) “
அறிவுமதி ஃபோனை வைத்து விட்டுக் கதவைச் சாத்தும்போது தான் அந்தக் கதவு பிடியில் இருந்த சிறு கூடையை கவனித்தாள். மிக அழகாகக் கண்ணாடி போன்ற தாள் சுற்றியிருக்க பூங்கொத்து போன்ற கூடையில் இனிப்புகள் சில நொறுக்குத் தீனிகள் நட்ஸ் சாக்லேட் என இருந்தது. அதன் மேல் இருந்த சிறு கடிதத்தை எடுத்து வாசித்தாள் மது.
“சாரி ஃபார் த இன்கவினியன்ஸ் காஸ்ட் எஸ்டர்டே (நேற்று நடந்த தவறுக்கு மன்னித்து விடுங்கள்)”
'யாராக இருக்கும்? என்ன தவறு ? 'மது யோசித்து திரும்புகையில் சமீரா ஒரு மென்முறுவலுடன் நின்றிருந்தாள். நேற்று தன் வீட்டு கதவைத் தட்டிக் கொண்டு நின்றிருந்த ஆணின் மனைவியா இவள்? அவன் இந்தப் பெண் நின்றிருக்கும் வீட்டினுள் செல்வதைச் சில முறை பார்த்து இருக்கிறாள். மதுவின் கேள்விகளை அவள் முகம் பிரதிபலிக்கச் சமீரா சாரி என்பது போல் சைகை காட்டினாள். மதுவுக்கு நேரம் வேற அதிகமானதால் சமீராவை நோக்கி இட்ஸ் ஆல் ரைட் எனச் சைகை செய்து அந்தக் கூடையை எடுத்துக் கொள்வதாக அவளிடம் காட்டி புன்னகைத்து விட்டு அவசர அவசரமாக லிஃப்டினுள் நுழைந்தவள் ஒருவன் மீது மோதி நிற்க அந்தக் கூடையைக் கீழே விழாது பிடித்து நின்றாள்.
அவன் ரசித்தவரை பெண்கள் அனைவரும் குனிந்து நோக்கும் உயரத்தில் இருந்தவர்களே முதன் முதலாக அழகான பெண்ணொருத்தியை கண்களுக்கு நேராகப் பார்க்கும் உயரத்தில் காண்கிறான். ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கிறாள் தான் ஆனால் அது காரணமாகத் தெரியவில்லை பெண்களின் இயல்பான உயரத்திற்கு கூடுதல் தான் அவள் அவள் கால்களை நோக்கியவன் அந்த விரல்களின் நகப்பூச்சு நளினம் தாண்டிச் சாம்பல் நிற பேண்ட் ப்ளேசர் அவள் முகம் காண நிமிர்கையில்
“விஷ்ணு அங்கிள் ”
அமீரின் குரல் ஒலிக்க லிஃப்ட் ல் இருந்து அவன் திரும்பி வெளிவரவும் அந்தப் பெண் லிஃப்ட் கிரவுண்ட் ஃபோள்ர் அழுத்தி அவனைச் சிறிதும் சட்டை செய்யாது நிற்க அந்த லிஃப்ட் இருவரும் சரிவரப் பார்க்கும் முன்னே கதவுகள் சாத்தியது. விஷ்ணு தன் கையில் கொண்டு வந்திருந்த ஃபேக் உடன் ஓடி வந்த அமீரைக் கட்டிக் கொண்டான்.
“அங்கிள் தாத்தா பாட்டி வரலையா.? ”
“அவங்க ராமேஸ்வரம் போயிருக்காங்கடா டூ டேஸ்ஸாகும் வந்தவுடனே உன்னைப் பார்க்க வருவாங்க அப்பா இருக்கானா.? “
“இப்ப தான் கடைக்குப் போனாங்க பக்கத்தில வந்துடுவார்.” அவர்கள் பேசிக் கொண்டே வீட்டில் நுழையச் சமீரா புன்னகையுடன் வரவேற்றாள்.
“வாங்க விஷ்ணு அண்ணா அம்மா அப்பா வரலயா ”
“அவங்க வரல சமீ அவங்க கொடுத்து விட்ட பருப்பு பொடி வந்திருக்கு, இட்லி பொடி வந்திருக்கு ரெண்டு பேரும் ராமேஸ்வரம் டூர் போயிருக்காங்க.
“ அப்ப உங்க ப்ரண்டுக்கு இனி நான் சட்னி அரைக்கற வேலை மிச்சம்.”
சமீ சிரிப்புடன் சொல்லி விட்டே அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க விஷ்ணு அதை வாங்கி பருகி விட்டுக் கையில் இருந்த ப்ளே ஸ்டேசன் ஸ்நாக்ஸ் என அனைத்து பைகளையும் அமீரிடம் நீட்டினான்.
“எதுக்குனா இத்தனை ?”
“இருக்கட்டும் சமீ ஆமா அபு எங்க ?”
“சமீருக்கு ஏதோ ப்ராஜக்ட் ஆம் திங்ஸ் வாங்கனும்னு பக்கத்தில கடைக்குப் போயிருக்கார் அண்ணா நீங்க முதல சாப்பிடுங்க “
“உன் சமையலை வேணாம்னு சொல்ல முடியுமா.? எடுத்து வைச்சமீ எனக்கும் பசிக்குது என்னடா அமீர் சாப்பிடலாமா? “
“அவன் சாப்பிட்டான்’ணா நீங்கச் சாப்பிடுங்க.” அவன் டைனிங் டேபிளில் அமரச் சமீரா சூடாகச் சப்பாத்தி குருமா பரிமாறினாள்.அவன் சாப்பிட்டுக் கொண்டே சமீராவிடம் கேட்டான்.
“சமீ அபுகிட்ட என்ன சண்டை.? “ அவனின் இந்த நேரடி கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாற அவனேத் தொடர்ந்தான்.
“உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கும்போது சொன்ன அதே வார்த்தைகள் தான் சமீ உனக்கு மூணு அண்ணணுக இருக்கோம். அவன் மேல எதாவது சங்கடம்னா எங்ககிட்ட சொல்லு நாங்களே அவனைச் சட்டையைப் பிடிச்சு கேட்கிறோம். நீயே மனசில வச்சு வருத்தப்படாதே. “
“அப்படி எல்லாம் இல்லண்ணா “சமீராவின் கண்களில் நீர் கோர்க்க விஷ்ணு எழுந்து கைக்கழுவச் சென்றான். அவன் கைக்கழுவி ஹாலில் அமர அபு வந்திருந்தான்.
“டேய் விஷ்ணு எப்படா வந்த? சாப்பிட்டியா.? லன்ச்சுக்கு இருப்பேல.?”
“ஹாய் அங்கிள் பாட்டி வரலயா?” சமீர் கண்கள் துழாவ அவனை அழைத்து அருகில் அமர வைத்தவன். சமீரா கொண்டு வந்து இருந்த காஃபியை அருந்திப் பதில் சொன்னான்.
“இல்ல மருமகனே பாட்டி ஊருக்குப் போயிருக்காங்க உன் ப்ராஜக்ட் என்ன?”
“மினி ரோபோ. ”
“அப்ப அந்த ஃபேக் ல நீயே அசெம்பிள் பண்ற மாதிரி ஒரு ரோபோ வாங்கி வைச்சு இருக்கேன் யூஸ் ஆகுமானு பாரு “
“தேங்ஸ் அங்கிள்” சமீர் ஓட அபு மீண்டும் கேட்டான்.
“சாப்டியா மச்சான் ”
“ம் சப்பாத்தி சாப்பிட்டேன். அந்தக் குட்லைப் டீலிங் நெக்ஸ்ட் வீக் ப்ரோபோசல் போகனும். வேலை இருக்கு, ஆடிட்டர் பார்க்க வந்தேன் அதான் அப்படியே ஒரு விசிட். சமீ கிளம்பறேன். “ அவன் கொண்டு வந்த பேக் ல் ஐனஸ் ஸ்வீட் பாதுசா எனப் பலகாரங்களை நிரப்பி அவனிடம் கொடுத்தாள்.
“ப்ரிஜ்ல எல்லாம் வேணாம்ணா வெளியிலேயே வைங்க பத்து நாள் கெடாம தான் இருக்கும். “
“சரி சமீ கிளம்பறேன். வரேன்டா மாப்ள. ”அவன் சென்றதும் அபு சமீராவைப் பார்த்தான்.
“நான் தண்ணி அடிச்சுட்டு போய் நீ என்னைக் கொடுமைப்படுத்தறனு அழுதா உன் அண்ணணுக தங்கச்சிக்கு என்ன பிரச்சினைனு லைனா விசாரிக்க வந்துடறானுக இவனுகள. “ அவன் சொல்லிக் கொண்டு இருக்கையில் வில்லியம் சமீராவுக்கு ஃபோன் செய்தான்.
“ஹலோ சமீ ”வில்லியமின் தாய் ஜெனிபர் தான் பேசினார்.
“சமீ வர்ற சண்டே வில்லியமுக்கு பொண்ணு பேசி முடிக்கப் போறோம் நீ அபு பசங்க எல்லாம் வந்துடுங்க”
“அம்மா பசங்களுக்கு டேபிள் டென்னிஸ் மேட்ச் இருக்கு டோர்னமென்ட் அவர் தான் கூப்பிட்டு போறார் ”
“சரி சமீ அவன் கூப்பிட்டு போகட்டும் நீ வந்துடு நான் அவன்ட தனியா கூப்பிட்டு க்கறேன் இரு உன் அண்ணன் பேசனுமாம்”
“ஹலோ சமீ ”
“சொல்லுங்கண்ணா”
“நீ சண்டே கிளம்பி இரு நான் கேப் புக் பண்ணிடறேன்”
“சரினா காலையில எத்தனை மணிக்கு னா”
“பத்து மணிக்குக் கிளம்பிடுவோம் ஆவடி தானே ஒன் ஆர் டூ அவர் ஆகும் அப்புறம் சமீ “
“சொல்லுங்கண்ணா”
“நீ நல்லா தானே இருக்கே.? எதுவும் பிரச்சினை இல்லையே? நானே வந்துருப்பேன் நேர்ல, இந்தப் பொண்ணு பார்க்கற வேலையை முடிச்சிட்டு வந்து நேர்ல கேட்கலாம் னு இருந்தேன்.” சமீயின் புன்னகை கண்டே அபுவுக்கு புரிந்தது தன்னைப் பற்றித் தான் தன் நண்பன் விசாரிக்கிறான் என்பது.
‘ கொலைகார பாவிகளா உங்க சகோதர பாசத்துக்கு அளவில்லாம போயிட்டு இருக்குடா டேய். ‘ அவன் மனம் பொறுமலை ரசித்துக் கொண்டே பதில் சொன்னாள் சமீரா.
“இல்லைனா எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை விஷ்ணு அண்ணா நேர்ல வந்தார்.” அதன் பிறகு பரஸ்பர விடைக்கொடுத்தலுடன் உரையாடல் முடிய அபு நக்கலாகக் கேட்டான்.
“ஒண்ணும் கவலைப்படாதேமா நீ என்னைப் படுத்தற கொடுமைக்கு இன்னும் ரெண்டே நாள்ல உன் மூணாவது அண்ணணும் உன் கண்ணு கலங்கி இருக்கானு பார்க்க வருவான். “
“அது சரி குடிச்சீங்களா? ”அவள் கேள்வியில் விழி பிதுங்கி நின்றான் அபு.
சொந்தம் மறந்து சுயம் இழந்து
நின் காதலை எண்ணியே
நித்தம் விடிகிறது பொழுது
சாகும் வரை
இந்தப் போதையிலேயே வைத்திரு என்னை!!!