அத்தியாயம் 18
யாழினி அவள் தந்தை வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் வீட்டை அடைந்து வேலைக்கு கிளம்பினாள்.சந்திரன் தன் மகளை எதுவுமே சொல்லாது அவள் கிளம்பி நின்றதும் கேள்வி கேட்டார்.
“அம்மு மா .. அப்பாக்கு கோயம்புத்தூர் ல கொஞ்சம் வேலை இருக்கு ..உன்னை ட்ராப் பண்ணிடவா ..”
தன் மகளுக்கு சரியான வழியைச் சொல்லி மட்டும் கொடுத்து விட்டு விலகி நின்று அவளது முடிவுகளை அவளே எடுக்க வைக்கும் சுதந்திரம் . தன் தந்தையை நினைத்து பெருமை தாங்காது கர்வத்தோடு
தன் தகப்பனைக் கட்டிக் கொண்டாள் யாழினி.
“அப்பா …எனக்கு டூ இயர்ஸ் கான்ட்ராக்ட் இருக்கு பா …ஒரு வருசம் ஆக போகுது ..ஜஸ்ட் ஒன் மோர் இயர்..இப்ப நான் வந்துட்டேனா என்னை வைச்சு பேசின அத்தனை காசிப்பும்( வதந்தி) உண்மை னு ஆயிடும் பா ..சோ இந்த ப்ரபோகசன் ப்ரீயட் ஐ முடிச்சுட்டு வேலையை ரிசைன் பண்ண முடிவு பண்ணிருக்கேன்..”
“அர்ஜுன் கதிர் ??”
“எனக்கு ரெண்டு பேர் காதலும் வேணாம் பா .. எனக்கு அர்ஜுன் பிடிச்ச அளவுக்கு கதிர் மேல மரியாதை அன்பு இருக்கு…என்னால கதிருக்கு வலியையும் அர்ஜுனுக்கு காதலையும் கொடுக்க முடியாது பா …”
“அர்ஜுன் கதிர் ரெண்டு பேரும் இதுக்கு பிரச்சினை பண்ணலாம் அதை தைரியமா ஃபேஸ் பண்ணிருவியா…இதனால அவங்க உன்னை ஒதுக்கலாம் …. இல்லை அவமானமப்படுத்தலாம் …அதை தினமும் கடந்து போகனும் ..முடியுமா அம்மு உன்னால…. “
“இட்ஸ் ஓகே பா .. எனக்கு அவங்க ரெண்டு பேரும் என்னை வெறுத்து ஒதுக்கினா நல்லது னு தான் தோணுது “ அதை சொல்லும் போது யாழினியின் வார்த்தைகளில் வலி இருந்தது.
“சரி அம்மு ..உன் லைஃப் உன் டெசிசன்….ஆனா மனசை எப்பவும் தைரியமா வைச்சுக்கனும் ..”
யாழினி சரி எனத் தலையாட்டி தன் தந்தையுடன் கிளம்பி ஆபிஸ் வந்தாள்.அன்று முதல் அவள் அர்ஜுன் கதிர் பற்றிய எந்த ஒரு செய்தியையும் தவிர்க்கத் தொடங்கினாள்.அதற்கேற்றாற் போல் கோவை காந்திபுரம் பகுதியில் அவர்கள் கம்பனியின் புதிதான வணிக கட்டிடம் தொடங்கப்பட இருக்க அதில் முழுப் பொறுப்பு வாங்கிக் கொண்டு கருமமே கண்ணாக வேலை செய்யத் தொடங்கினாள்.அலுவலகத்தில் அவள் வேலைத் திறன் வெகுவாக வே பாராட்டப்பட்டது. பிரேமா பாலு கூட அவளது வேலையை கண்டு இவள் டவுன் டூ எர்த் பர்சனாலிட்டி தான் தங்களை தவறாக கணிக்க வைத்ததோ எனத் தங்கள் தவறுக்கு வருந்தினர்.
ஒரு மாதத்தில் கதிர் அர்ஜுன் இருவரின் ரிசார்ட் தீம் பார்க் திறப்பு விழா வந்தது.அலுவலகத்தில் அனைவருக்கும் அழைப்பு வந்திருக்க யாழினி தன்னுடைய புது வேலையைக் காரணம் காட்டி மிக சாதுர்யமாக அதற்கு செல்வதைத் தவிர்த்தாள். அர்ஜுன் கதிர் இருவருமே தனிப்பட்ட முறையில் யாழினியை அழைக்கவில்லை. உள்ளூர ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது அவளுக்கு இருவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி அழைப்பிதழ் ஆவது வருமென்று.. ம்ஹூம் ஒன்றும் வரவில்லை.தன்னுள் பரவும் வலியை தடம் தெரியாது மறைத்துக் கொள்ள புன்னகை அலங்காரம் செய்துக் கொண்டாள் அவள்.
திறப்பு விழா பற்றி கோவை எங்கும் சுவரொட்டி விளம்பரங்கள் தொலைக்காட்சி,வானொலி என அனைத்து தொலைத் தொடர்பு சாதனங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.யாழினி வொர்க் சைட் கு செல்லும் திசை எல்லாம் அதை பார்த்து தான் செல்ல வேண்டும்.அன்று ரியாவும் யாழினியும் கடைகளின் இன்டிரீயர் டெக்கரேசனை அனலைஸ் செய்து வெளிவந்து ஸ்கூட்டியில் ஆபிஸ் சென்றனர்.
“நீ நிஜமாவே ஃபங்சனுக்கு வர்றலியா யாழினி..”
“இல்லை ரியா வேலை இருக்கு”
“எல்லார்கிட்டயும் சொல்ற கதையை என்கிட்ட சொல்லாதே “
“ரியா .. எனக்கு அங்க வரப் பிடிக்கல இதுக்கு மேல இதைப் பத்தி பேச வேண்டாமே …”
ரியாவுக்கு அவள் காயத்தில் தான் இன்னும் ஆழமாக கத்திப் பாய்ச்சுகிறோமோ எனத் தோண …
“சரி யாழினி நானும் போல ..”
“ரியா ..”
“நீ நினைக்கிற மாதிரி உனக்காக எல்லாம் போகாம இல்ல …எனக்கு அன்னைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்க ..அதான்..நீ வேற சென்டிமென்ட் டயலாக் எல்லாம் பேசாத …”
தன் தோழியைக் கட்டிக் கொண்டு சிரித்துக் கேட்டாள்
“கல்யாணம் எங்க கேரளா லயாடி ?”
“ஹ ஹ பார்ப்போம் பழபஜ்ஜி என்ன சொல்லுது னு “
ரியா தன் வருங்கால கணவனை பழபஜ்ஜி என்கவும் யாழினி சிரித்தாள் அவளையும் மீறி அவளது செல்ல தடிமாடு மனதில் வந்து நின்றான்.தனது நினைவுகளைக் கடினப்பட்டு வேறு புறம் திருப்பினாள்.
திறப்பு விழா நாளும் வந்தது. அலுவலகத்திற்கு அன்று விடுமுறை என்பதால் யாழினி தன் வீட்டில் இருந்தாள்.தொலைக்காட்சியில் நேரலை கூட ஒளிப்பரப்பானது. பிரபல சினிமா நடிகை அஞ்சனா திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாள்.
விழாவில் இருந்த வெற்றிமாறனுக்கு தன் பேரன்களைக் குறித்த பெருமை அளவிடாத வகையில் இருந்தது. சாந்தமூர்த்தி அவரை நெருங்கி வாழ்த்தினார்.
“வாழ்த்துக்கள் சார் ..பசங்க உங்கள மாதிரியே தொழில் ல கெட்டிக்காரனுகளா இருக்காங்க …உங்க திறமையை அப்படியே ஊட்டி வளர்த்து இருப்பீங்க போல”
“என்ன பண்றது மூர்த்தி ..திறமை இல்லைனா தூக்கி சாப்பிட்டு போய்ட்டே இருக்க கூடவே சுத்தற சல்லிப் பையனுக மத்தியில இல்ல தொழில் செய்ய வேண்டியதா இருக்கு”
சாந்தமூர்த்திக்கு தன்னைத் தான் சொல்கிறாரோ என்று சந்தேகம் வந்தாலும் அதை வெளிக் காட்டாது கைகுலுக்கி நகர்ந்தார். சற்று தொலைவில் சாந்தமூர்த்தி தன் தந்தையுடன் பேசுவதைக் கண்ட மணிமாறன் அவரை நெருங்கி வந்தார்.
“என்னப்பா சொல்லிட்டு போறான் …?”
“அவனை விட்றா அர்ஜுன் அன்னைக்கே அவன் ரிஷிமூலம் நதிமூலம் கண்டு எடுத்து வைச்சு இருக்கான் ..அவனே வைச்சு செய்வான் …ஏன்டா மாறா அந்த புள்ள வரல போலிருக்கு …”
பின்னிருந்து வந்த இளமாறன் அதைக் கேட்டு கொண்டே வந்து சிரித்தார்.
“இதே கேள்வியைத் தான் உங்க மருமகளும் அங்கே கேட்டுட்டு இருக்கா …”
இளமாறன் சொன்னதும் அவர் புன்முறுவல் செய்தார்.
“ரொம்ப ரோசக்கார புள்ள போல..இவனுக கூப்பிடாம வரல …பாண்டியன் சொன்னான் புது ப்ரான்சு ஓப்பனிங் வேலையைக் கேட்டு வாங்கிட்டு இவனுக இருக்கிற திசை நிற்கறதில்லையாம்… சாமர்த்தியமா இவனுகளால வந்த கெட்ட பெயரை வேலையில இருக்கிற திறமையை வைச்சே போக்கிட்டா… “
மணிமாறன் சொல்லவும் வெற்றிமாறன் புருவத்தைச் சுருக்கி யோசித்தார்
“எதுக்கும் அந்த புள்ள குடும்பத்தை விசாரிச்சு வைங்க …”
மகன்கள் இருவரும் தலையாட்ட மீண்டும் கேள்வி கேட்டார் வெற்றிமாறன்.
“இது என்னடா புது பழக்கம் நடிகையைக் கூட்டிட்டு வந்து திறப்பு விழா நடத்தறது”
“உங்க சின்ன பேரன் ஐடியா பா ..இந்த பொண்ணைத் தான் போன வருசம் விளம்பர ஒப்பந்தம் பண்ணப்ப ஒரு பாய்ன்ட் சேர்த்து எழுதிட்டான் ப்ரான்சு ஓப்பனிங் இருந்தா கலந்துக்கனும் னு அதான் இப்ப விளம்பரத்துக்கு வரச் சொல்லிட்டான் “
இளமாறன் கூற அவருக்கு மேலும் புன்னகை அரும்பி முகம் பிரகாசித்தது.
கலைவாணி விக்டரிடம் நிறைய கேள்விகள் கேட்டு விட்டு யாழினி எந்தவிதத்திலும் இருவரின் வாழ்வில் தலையிடுவதில்லை என அறிந்தவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டு விழாவில் சந்தோசமாக கலந்துக் கொண்டார்.
அஞ்சனா சற்று அதிகப்படியாகவே அர்ஜுனிடம் நெருக்கம் காட்டினாள். உண்மையில் அவளை விளம்பர ஒப்பந்தம் செய்ததில் இருந்து இன்று வரை அவளிடம் பேச்சுவார்த்தை நடத்துபவன் அர்ஜுன் என்பதால் வந்த நெருக்கம் அது. விழாவிலேயே சிலர் அவர்கள் இருவரையும் இணைத்து பேசத் துவங்கினர்.
அன்று இரவு விழா முடிந்து பெரிய வீட்டில் அனைவரும் கூடியிருக்க வெற்றி மாறன் பேசினார்.
“இந்த விழா தொடக்கம் மட்டும் தான் இன்னும் ஒரு வருடத்தில் இதோட லாப நட்டக் கணக்கு வரும் போது தான் உங்க ப்ராஜக்ட் வெற்றியா தோல்வியா னு சொல்ல முடியும் ..பாதி கிணறு தான் தாண்டி இருக்கீங்க புத்திசாலி தனமா இருங்க..ஒரு வருசம் கழிச்சு இதே மாதிரி விழா எடுத்து எனக்கு யார் தொழில் வாரிசு னு அறிவிச்சுட்டு ரிட்டையர்டு ஆகிக்கறேன்”
அவர் சொல்லவும் கதிர் தான் கேட்டான்.
“நான் ஜெயிச்சுட்டேனா நான் எது கேட்டாலும் நீங்க மறுக்க கூடாது ..முக்கியமா தோத்ததை இவன் ஒத்துக்கனும்”
அர்ஜுனனுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிய முகத்தில் சினமேற பேசினான்.
“சரி தாத்தா ..நான் ஜெயிச்சாலும் என் கண்டிசன் இதே தான்”
சொல்லி விட்டு அவர்கள் இருவரும் தங்களது அறைக்குச் செல்ல வெற்றிமாறனுக்கு தெளிவாக புரிந்தது இவனுக ஜெயிச்சதும் கேட்கப் போவது நிச்சயம் இந்த கம்பனி பொறுப்புகள் அல்ல …
மறுநாள் ஆபிஸ் முழுக்க அஞ்சனா அர்ஜுன் ஜோடிப் பொருத்தம் தான் பேசுப்பொருள் ஆனது. யாழினிக்கு கோபத்தில் ஒரு சிறு பேப்பரை துணாடு துண்டாகக் கத்தரித்து முடித்து மீண்டும் ஒரு பேப்பர் எடுக்க ரியா கத்தினாள்.
“அடியே அது சன்டே ஸ்டார் ஏஜென்ஸி அக்ரிமென்ட் பேப்பர் டி “
யாழினி அவள் சத்தம் கேட்டு தாளை அப்படியே டேபிளில் போட ரியா எதையோ நினைவுபடுத்தி சிரித்தாள்.
“எதுக்குடி சிரிக்கிற “
“இல்ல இந்த பேப்பருக்கே இந்த நிலைமைனா சம்மந்தப்பட்ட ஆள் உன் கைல கிடைச்சா எதை எதை வெட்டுவீயோ …”
சொல்லி விட்டு மீண்டும் சிரித்த ரியாவை தோளில் அடித்தாள் யாழினி.
மூன்று மாதங்கள் கடந்து போனது.மிதுன் தொண்ணூற்று ஆறு சதவீத மதிப்பெண்களுடன் தேறி கோவை பி எஸ் ஜி கல்லூரியில் பயோடெக்னாலஜி எடுத்து இருந்தான். அவனுக்கு தன் சம்பளத்தில் அவனுக்கு பிடித்த ஃபைக் வாங்கி தருவதாக கூறியிருந்தாள் யாழினி.வாங்கியும் கொடுத்து இருந்தாள்.அன்று ஞாயிற்றுக்கிழமை அதனை வாங்கி முதல் வாரம் என்பதால் தன் அக்காவை கூட்டிக் கொண்டு ஃபுரூக்பீல்ட் வந்து இருந்தான் மிதுன்.
“உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ ..ஏதுனாலும் பட்ஜெட் இரண்டாயிரம் ரூபாய் தான்”
“ரெண்டு லட்சம் ரூபா ஃபைக் கு இரண்டாயிரம் ரூபா பார்ட்டி …” யாழினி கேட்க
“உன்னை மாதிரி சம்பாதிக்கும் போது வாங்கிக்க இப்ப இவ்வளோ தான் பட்ஜெட் ..அப்பரம் பெட்ரோல் விலை ஏறிடுச்சு ..மாச மாசம் மூவாயிரம் என் அக்கவுண்ட் கு அனுப்பிரு ..” என்றான் மிதுன்.
அவனை செல்ல அடி அடித்து விட்டு ஃபீட்சா கடையில் நுழைந்து சாப்பிட்டு சில பொருட்களை பர்ச்சேஸ் செய்து விட்டு ஹாஸ்டல் கிளம்பினர்.மிதுன் தன் முகம் முழுவதும் மறைக்கும் ஹெல்மட் அணிந்து இருந்தான். ஃபைக்கில் ஏறுகையில் சத்தமிட்டாள் யாழினி.
“என்னடா இது ..இதில எப்படிடா உட்காரது..விழுந்துடுவேன் போலே “
“நீ உட்காரதுக்கா வாங்கினேன் “மிதுன் மெதுவாக சொல்ல
“ஒண்ணுமில்ல டபுள் சைடு கால் போட்டு உட்காரு …விழுந்து கிழுந்து தொலைச்சிராதே …அப்பா என்னை துவம்சம் பண்ணிருவார்”
யாழினி அவன் சொன்னப்படி அமர ஃபைக் ஹாஸ்டல் நோக்கி சீறிப் பாய்ந்து சிக்னலில் நின்றிருந்தது.அவன் ஃபைல் அருகில் இருந்த கியா எக்ஸ்யூவில் அமர்ந்து இருந்த அர்ஜுனுக்கு யாழினி யின் முகம் தெளிவாக தெரிய யாருடன் இவள் இப்படி நெருக்கமாக வண்டியில் ..அவன் எண்ண ஓட்டத்தில் சினம் ஏற சிக்னல் மாறியவுடன் ஃபைக் பின்னாடி வண்டியை செலுத்தினான்.
மிதுன் போக போகவே அவனுக்கு கால் வர முக்கியமான வேலை என தலைக்கவசத்தைக் கூட கழட்டாது விடுதி முன் சந்திலேயே அவளை இறக்கி விட்டு விட்டு கிளம்பிச் சென்றான்.
யாழினி விடுதி நோக்கி நடக்கத் துவங்க பின்னிருந்து கோபமாகக் குரல் கேட்டது.
“யார் அவன் ?”
யாழினிக்கு அந்த குரல் கண்களில் நீர் தேங்காது இருக்க அரும்பாடுபட்டு அவன்புறம் திரும்பினாள்.அர்ஜுன் நின்றிருந்தான்.
“யாரா இருந்தா உங்களுக்கு என்ன ?”
“யாருனு சொல்லப் போறீயா இல்லையா “
“ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டாத குறையா அர்ஜுன் அஞ்சனா னு பேசிட்டு இருக்காங்களே ..நான் எதாவது கேட்டனா …?”
அர்ஜுனுக்கு அவளது பொறாமை கண்களைக் கண்டு மோகம் தலைக்கேற மீண்டும் அவளை சீண்டும் போக்கிலேயே கேட்டான்.
“அப்ப யார் அவன் னு சொல்ல மாட்ட ?”
யாழினி பொறுமை இழந்து கத்தினாள்.
“எனக்கு ரொம்ப ரொம்ப தெரிஞ்சவன்..அவனுக்கு நான் தான் எல்லாமே …இப்ப அதுக்கு என்ன...”
அர்ஜுன் மிகுந்த கோபத்தோடு அவளைப் பிடித்து மரங்கள் மறைத்து இருந்த அந்த சுவற்றின் மீது சாய்த்து நிறுத்தினான்.
“நானும் பொறுமையா பேசலாம்னா..யாருடி அவன் ?
“நான் தான் சொன்னேன் ல நானும் அவனும் ஒரே வீட்ல …”
அதற்கு மேல் அவளைப் பேச விடாது அவள் எழும்புகள் நொறுங்கும் அளவுக்கு இறுகி அணைக்க வலியில் அவளால் முனகத் தான் முடிந்தது.அவள் முன்அனுபவத்தினால் அவள் இதழ்களை மடிக்க அந்த சூழ்நிலையிலும் சிரித்து விட்டான் அர்ஜுன்.
“இந்த சிரிப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை விடுடா தடிமாடு …யாராவது பார்ப்பாங்க “
“யாருமே பார்க்கலை னா நான் என்ன வேணா பண்ணிக்கலாமா சண்டைக் கோழி “
அவனது பதிலில் முறைத்தவளாக அவள் நிற்க அந்த ஃபைக் ன் ஹார்ன் சத்தம் கேட்டு மரக்கிளைகளின் பின்னிருந்து நோக்கினான் அர்ஜுன். அது மிதுன் விடுதியை நோக்கி சென்றுக் கொண்டு இருந்தான். அவன் முகத்தில் பரவிய மகிழ்ச்சிக்கு காரணம் தெரியாது யாழினி விழிக்க அவளது கழுத்து வளைவில் அழுந்த முத்தமிட்டு அந்த மகிழ்ச்சிக்கு அவளையும் பங்குதாரர் ஆக்கினான் அர்ஜுன்.
உயிர் வரை ஒரு மின்சாரம் படர்ந்து நாணம் கூச்சம் என மயிற்கூச்செறிய நின்றிருந்த அவளது இடையில் கை பதித்து காதில் மெல்ல முணுத்தான் அர்ஜுன்.
“நீ யார் கூட வேணா ஃபைக் ல போ ஆனா இப்படி உன்னைத் தொட எனக்கு மட்டும் தான் அனுமதி னு எனக்கு நல்லாவே தெரியும் சண்டைக் கோழி …கொஞ்ச நாள் பொறு டி …மொத்தமா உனக்கு புரிய வைக்கிறேன் “
மீண்டும் அதே பாணியில் முத்தம் செய்து ஒரு துள்ளலோடு கடந்து சென்றவனை..
“டேய் தடிமாடு ..நான் என்ன உன் வீட்டு டெடி ஃபேர் ஆ டா நீ நினைச்ச நேரம் முத்தம் கொடுக்க….அஞ்சனா யாருடா ..எதுக்குடா முத்தம் கொடுத்த .. இன்னும் ஐ லவ் யூ கூட சொல்லல …”
அவள் மனம் தான் கத்திக் கொண்டு இருந்தது உதடுகள் உறைந்து போய் ஒட்டிக் கொண்டது போல அவன் செயலில் செயலிழந்து நின்றது .