அத்தியாயம் 18

Nilaprakash

Administrator
Staff member
அத்தியாயம் 18

அர்ஜுன் சென்ற பின்பும் அவனது முத்தத்தின் மின்சாரம் உடல் முழுவதும் பரவியிருக்க அந்த இடத்திலேயே சிறிது நேரம் அந்த இன்பத்தை இன்னும் இன்னும் நினைவுகளில் சேமிக்க நேரம் செலழவிட்டது அவள் இதயம்.

“ச்சே உதடுகளை கை வைச்சு மறைக்காது இருந்திருக்கலாம் …”

அவனது முத்தத்திற்கு ஏங்கிய இதழ்கள்..ச்சே ஆசை எண்ணங்களுக்கு வேலியிட முடியாது விக்கித்து நின்றாள் சில நொடிகள்.

சிறிது நேரம் கழித்து அவள் விடுதிக்கு வர மிதுன் விட்டுச் சென்றதாக பைகளை அவளிடம் கொடுத்தார் விடுதி காவலாளி.அதை வாங்கி கொண்டு தன் அறைக்கு சென்றாள்.அதன் பின் ஆறு மாதங்களுக்கு அந்த முத்தத்தின் ஈரம் மட்டுமே எஞ்சியிருந்தது அவளது ஏக்கத்திற்கு..அர்ஜுன் அவளது கண்களில் ஏன் அலுவலக செய்திகளில் கூட தென்படவேயில்லை.

அர்ஜுன் கதிர் இருவரும் தங்கள் தொழில் போட்டியில் ஜெயிக்க இரவு பகல் பாராது உழைத்து கொண்டு இருந்தனர்.இடையில் இருவருக்கும் அவர்களது தாத்தாவிடமிருந்து அழைப்பு வந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் முகம் கூட பார்க்காது அவரது அலுவலகத்தில் அமர்ந்து இருந்தனர்.

“கதிர் உன் சென்னை மதுரை ப்ரான்சு எப்படி போகுது ..”

கதிர் சென்னை மதுரை இரு மாநகரங்களின் மத்தியில் நட்டத்தில் இயங்கிய இரு ப்ரமாண்ட ஹோட்டல்களை வாங்கி ரெனோவேட் செய்து லாபத்தில் இயங்க அரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தான்.

“ம் ..நல்ல பேர் தாத்தா .. இன்டர்நேஷனல் டூரிஸ்ட் தான் மெயின் டார்கெட்…த்ரீ ஆர் ஃபோர் மன்த்ஸ் அவங்க வக்கேசன் சிவியர் க்ளைமெட் கண்டிசன் ப்பேஸ் பண்ணி லாபம் பார்த்துடலாம் …”

கதிர் விளக்க அர்ஜுனிடம் கேட்டார்.

“அர்ஜுன் நீ உன் தீம் பார்க் மாதிரி எதாவது “

“தாத்தா ..எனக்கு இது புது ஐடியா ட்ரை பண்ணேன் அவ்ளோ தான் .. ஐ அம் நாட் கோயிங் டூ புட் ஆல் மை எக்ஸ் இன் ஒன் பாஸ்கட்…எனக்கு நம்ம டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ப்ரான்சஸ் அதிகம் பண்ணி லாபம் பார்க்கலாம் னு இருக்கேன் “

வெற்றிமாறன் இருவரிடமும் அவர்களது ஃபைல்களை ஆராய்ந்து பார்த்து விட்டு கொடுத்தார்.

“நான் கூப்பிட்டது இன்னொரு முக்கியமான விஷயத்துக்காக ….சாந்தமூர்த்தி ஃபோர்டு ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங் ல உங்க ரெண்டு பிஸினஸ் ம் நட்டம் னு காட்டி பிரச்சினை பண்ண கம்பனி ஃசேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் தனியா போட்டுருக்கான்”

கதிர் அவனது கையில் இருந்து ஒரு ஃபைலை நீட்ட அதில் சாந்தமூர்த்தியின் சட்டத்திற்கு புறம்பான நில ஆக்கிரமிப்பு ஆதாரங்கள் இருந்தன.வெற்றிமாறன் ஆச்சர்யத்துடனே அதனைப் பார்க்க கதிர் புன்னகைத்தான்.அவனது நினைவுகளில் யாழினியிடம் தான் பேசிய குறும்பு பேச்சு நினைவு வந்தது.
“உங்களுக்கு நிறைய எதிரிகள் இருக்காங்களா …”

“ம் இருக்காங்க …யாழினி தொழில் ல இது நடக்கறது தான் ..”

“அது யாரா இருக்கும் எதாவது ஐடியா இருக்கா …உங்க மேல பொறாமை இல்ல இந்த ப்ராஜக்ட் கு கம்மியா கோட் பண்ணாம உங்களுக்கு நெக்ஸ்ட் ப்ளேஸ் ல இருந்து இதை தட்டிப் பறிக்க …”

“நிறைய தமிழ் சினிமா பார்ப்பீங்களா யாழினி”

அன்று அவளிடம் குறும்பு பேச்சு பேசி சிரித்த பின் கதிர் தீவிர ஆலோசனையில் இருந்தான் தன் பெயர் ரிசார்ட் ன் பெயர் இரண்டிற்கும் மீடியாவில் கெட்ட பெயர் வருவதால் அதிக ஆதாயம் யாருக்கு என்று அவன் சார்ட் லிஸ்ட் செய்ததில் சாந்தமூர்த்தி தான் முதன்மையாக இருந்தார்.அன்று முதல் அவரது சட்டத்திற்கு புறம்பான அத்தனை நடவடிக்கைகளையும் ஆதாரத்தோடு திரட்ட ஏற்பாடு செய்திருந்தார். அர்ஜுன் சாந்தமூர்த்தியின் ஃசேர்ஸ் மேனிபுலேசன்(தவறான முறையில் வாங்குதல்) தகவல்கள் திரட்டிய ஃபைலைக் கொடுத்தான்.

இரண்டையும் கண்ட வெற்றிமாறனுக்கு அவர்களது திறமையைக் கண்டு கர்வம் கண்களில் மின்ன அமர்ந்து இருந்தார்.தன் இரு மகன்களுக்காவது தன்னுடைய அருகாமையும் ஆலோசனையும் தேவையாக இருக்க இவர்கள் இருவருக்கும் தன்னுடைய வியாபார புத்தியும் நுணுக்கமும் பிறப்பில் இருந்தே இருப்பதாக உணர்ந்தார்.

“இன்னும் ரெண்டு வாரத்தில் ஃபோர்டு டைரக்டர்ஸ் மீட்டிங் ..அதனால கோயம்புத்தூர்ல இருங்க …மூர்த்தி யை அடிக்கிற அடியில கம்பனியை கைப்பற்றனும்ங்கற ஐடியா இனி ஒருத்தனுக்கும் வரக் கூடாது “

வெற்றி மாறன் பேச அர்ஜுன் கதிர் இருவரும் அதனை ஆமோதித்தனர்.

எப்பொழுதும் போல ஆபிஸ் வந்த யாழினியிடம் ரியா கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.

“யாழினி ..நீயும் வாடி ..ஆபிஸ் பிக்னிக் மாதிரி தானே ..எல்லாமே கம்பனி செலவு “

அர்ஜுனின் தீம்பார்க்கு அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் சனி வியாழன் இரு நாட்களுக்கு இலவச டிக்கெட் அளித்து இருந்தது கம்பனி நிர்வாகம்.அலுவலக ஊழியர்கள் இரு குழுவாக செல்ல ஃபார்ம் நிரப்பித் தர பணித்திருந்தது.

“இவனுகளா சும்மா கொடுக்க போறாங்க ..போய்ட்டு வந்தா ஃபுல் விளம்பரம்”யாழினி மனதில் நினைத்த னவாறே

“நான் வரலை ரியா ..நீ போய்ட்டு வா எனக்கு வேலை இருக்கு ..”

“உன் ஆள் எல்லாம் வர மாட்டாங்க ..நியூ ப்ரான்சு கு எல்லாம் விசிட் நேத்து தான் செட்யூல் பார்த்தேன் நீ வாடி …”

“இல்லை ரியா …”

“என்னமோ பண்ணித் தொலை ..நான் ஃபார்ம் ஃபில் அப் பண்ணிக் கொடுக்கிறேன்”

ரியா கோபமாக செல்ல யாழினி அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

“நான் என்ன செய்யறது ரியா …இந்த டெடி ஃபேர் முத்தக்காரனுக்கு செலக்டிவ் அம்னீஷியா வேற ..அவன் மறதியில கொள்ளிக்கட்டையை வைக்க …என்கிட்ட பேசி ஆறு மாசமாச்சு அங்கே போனா அவனோட பேசுன சிரிச்ச நினைவுகள் நியாபகம் வரும் …”

யாழினி நினைக்க நினைக்க சினமேறி முகம் சிவக்க அமர்ந்து இருக்க அந்த கண்ணாடி திரையின் வழியே அவளது முகத்தின் உணர்ச்சிகளை ஆராய்ந்து அமர்ந்து இருந்தான் அர்ஜுன்‌.சாந்தமூர்த்தி தொடர்பான ஃபைல்களை ஆராய அன்று காலையில் நேரமே அலுவலகம் வந்திருந்தான். பாண்டியன் தான் அதிக பணி அனுபவம் உள்ளவர் என்பதால் அவரது அறையில் ஃபைல்கள் ஆராயப்பட்டன.

அரை மணி நேரத்தில் அவன் முன் வந்த ஃபார்ம்களில் யாழினியின் பெயர் இடம்பெறவில்லை.அவனுக்கு மிகுந்த கோபம் வந்தது இவள் வரமாட்டாளா என் சம்மந்தப்பட்ட எதுவும் இவளுக்கு வேண்டாமா ? அவன் எரிச்சலுடனே வேலையை முடித்தான்.

அன்று வியாழக் கிழமை ஆபிஸில் பாதிப் பேர் தான் இருக்க கைரேகை வைத்து விட்டு பாண்டியனிடம் வணக்கம் வைத்து விட்டு தன் இருக்கைக்கு வந்தாள் யாழினி.

ஏதோ கால் வர அலுவலகம் கோப்புகள் ஆராயப்பட்டு யாழினி அழைக்கப்பட்டாள்.

“யாழினி உங்களுக்கு ஃப்ரெஞ்ச் மொழி தெரியுமா ?”

பாண்டியன் கேட்க

“தெரியும் சார் தர்டு லாங்குவேஜ் படிச்சு இருக்கேன் “

“பேசறதுக்கு தெரியுமா ?”

“தெரியும் சார் “

“கொஞ்சம் ரிசார்ட் வரைக்கும் கம்பனி கார்ல போய்ட்டு வாங்க ஒரு ஸ்மால் இஸ்யூ”

யாழினிக்கு தயக்கம் இருந்தது அர்ஜுன் கதிர் இருவருமே தன்னிடம் விலகி இருந்தாலும் கதிரைக் கண்டு வருடமே இருக்கும்.

“ப்ளீஸ் யாழினி .. வெளியாட்கள் இதில தலையிட வேண்டாம் னு நெனைக்கிறேன்”

“ஓகே சார் …”

யாழினி அந்த அலுவலக காரில் கிளம்ப கார் ரிசார்ட் ஐ ஒரு மணி நேரத்தில் அடைந்தது.ரிசாட்ன் முன் அலுவலகத்தில் வயதான வெளிநாட்டு தம்பதியர் நின்றிருந்தனர்.கூடவே கதிரும் நின்றிருந்தான்.

“பான்சூர் …கா வா “

அவள் ப்ரஞ்சில் பேசியதும் அவர்கள் முகம் மலர அவளிடம் பேசத் தொடங்கினர்.அவர்களது விலையுயர்ந்த காமராவுடன் கைப்பை காணாமல் போய் இருக்க அதில் தங்கள் மிக முக்கிய புகைப்படங்கள் இருப்பதாக ஆதங்கமும் வருத்தமுமாக முறையிட்டனர். யாழினி அவர்களிடம் விசாரிக்கத் தொடங்கினாள். அவளைக் காதலோடு பார்த்துக் கொண்டு இருந்த கதிர் தன்னை நோக்கி கை நீட்டி அந்த வயதான தம்பதியர் ஏதோ சொல்லவும் தான் சுய நினைவுக்கு வந்தான்.

“எஸ்ட் இல் க்ரான்ட்”

அவர்கள் தங்கள் டிரைவர் என்று சொல்பவன் கதிருடைய உயரம் இருப்பான் என சொல்ல கதிரிடம் அவள் டிரைவரின் அங்க அடையாளங்களைச் சொல்லிக் கொண்டு இருக்க அதே விவரிப்புக்கு ஒத்துப் போன ஒருவன் கையில் பையுடன் அந்த வரவேற்பறையில் நுழைந்தான்.

அவனைக் கண்டதும் அந்த ஃபரன்ஞ்ச் நாட்டு தம்பதியர் மிகுந்த சந்தோசத்துடன் வரவேற்க அந்த இளைஞன் அவர்களது கைப்பையைக் கொடுத்து விட்டு அவர்கள் காரில் விட்டு விட்டு சென்று விட்டதாக சொல்லி கவனமாக இருக்குமாறு கூறி வெளிநடந்தான். அந்த தம்பதியர் தங்கள் கைப்பையில் இருந்து பணத்தை எடுத்து திணிக்க இந்தியனுக்கே உள்ள கர்வத்தோடு அதை மறுத்து விட்டு சென்றான் அந்த இளைஞன்.

யாழினி அவர்களிடம கொஞ்சம் பெறுமையோடே அவன் சொன்னதை மொழிப் பெயர்த்தார்.

“ஹூமானிட்டி நாப புஸ்வான் பாஸான்”(மனிதம் போற்றுவதற்கு பணம் தேவை இல்லை )

அவர்கள் புன்முறுவல் செய்து அவளிடமும் கதிரிடமும் கைக்குலுக்கி விட்டு சென்றனர்.கதிர் அவளிடம் தன் ஆசைகளை அடக்கிக் கொண்டு கேட்டான்.

“எப்படி இருக்க யாழினி ..?”

“நல்லா இருக்கேன் சார் ..”

“இந்த சார் அவசியமா யாழினி “

“சார் னு நான் கூப்பிடற இடத்தில தானே சார் நீங்க இருக்கீங்க..என் இடத்திற்கு தகுந்த மாதிரி தானே நான் நடந்துக்கனும்”

அவள் அதை சொன்னதும் உணர்ச்சி வசப்பட்டவனாக அவளது கைகளைப் பிடித்து மன்னிப்பு கேட்கும் குரலில் சொன்னான் கதிர்.

“யாழினி நான் இந்த மாதிரி நடந்துக்க காரணம் என்னனு கொஞ்ச நாள்ல புரிய வைக்கிறேன் ப்ளீஸ்”

அண்ணண் தம்பி இருவரும் எதுக்கு தான் டைம் கேட்கிறாங்க அவள் கேள்வியாக கதிரை நோக்க அர்ஜுன் சத்தம் அந்த அறையை நிரப்பிற்று.

“இது ரிசப்ஷன் நியாபகமிருக்கா ?”

கதிர் அவளது கைகளை விட்டு அர்ஜுன் புறம் திரும்பினான்.என்ன விசயம் என்பது போல் கதிர் பார்க்கவும் அர்ஜுன் சொன்னான்.

“ஃபோர்டு ஆஃப் டைரக்டர்ஸ் மீட்டிங் ல சாந்தமூர்த்தி சம்மந்தமா ரிசொல்யூசன் கையெழுத்து வாங்கனும் உள்ள வர்றீயா”

கதிர் யாழினியை நோக்கி ஒரு கெஞ்சல் பார்வை பார்க்க யாழினியின் அலைபேசியில் ரியா அழைத்து இருந்தாள்.

“யாழினி தீம் பார்க் வாடி ப்ளீஸ் செமயா இருக்கு…”

யாழினி அவளிடம் பேசிக் கொண்டு திரும்ப அர்ஜுன் கதிர் இருவரும் முக்கியமான கோப்புகள் வரவழைத்து அலுவலக அறைக்குச் செல்ல ஆட்களைப் பணித்தனர்.

“எப்படியும் இவர்கள் வர இரண்டு மணி நேரம் மேல் ஆகும் .. ரியா வை பார்த்து விட்டு வரலாமா “
அவள் எண்ணங்கள் தோன்ற யாழினி சரி எனக் கூறி தீம் பார்க் சென்றாள்.அர்ஜுன் மனதினுள்ளே கனன்றுக் கொண்டே இருந்தது தீம் பார்க் வரமாட்டாளாம் ரிசார்ட் வருவாளாம் இவளை ..அவன் கதிரிடம் கோப்புகளில் கையெழுத்து பெற்று விட்டு காரில் செல்கையில் விக்டருக்கு ஃபோன் செய்தான்.

“மச்சான் ..நூறாயுசு டா உனக்கு இப்ப தான் உன் பிகரை தீம் பார்க் ல் பார்த்தேன் நீ கூப்பிடற”

மாதாந்திர வரவுசெலவு கணக்கை திடீர் ஆய்வு செய்யும் வழக்கம் இருந்தது இம்முறை அது விக்டருடையது எனவே தீம் பார்க் ல் இருந்தான்.

“யார் யாழினியாடா ..?”அர்ஜுனின் கேள்வியில் மகிழ்ச்சியும் துள்ளலும் நிறைந்து இருந்தது.

“ஏன் வேற ஏதும் பிகரை உஷார் பண்ணிருக்கியா”

“டேய் அங்கேயே இரு வரேன் …”

யாழினி பாண்டியனிடம் தகவலைச் சொல்லி ஆபிஸ் காரை அனுப்பி விட்டு அந்த தீம் பார்க் ல் நுழைந்தாள்.ரியா அவளைக் கண்டதும் துள்ளிக் குதித்து ஓடி வந்தாள்.

“ஏ யாழினி சீக்கிரம் வா “

“ரியா நீ போ நான் வேற ட்ரஸ் கொண்டு வரலை “
“ஏ அதோ அங்கே க்ளோத் ஸ்டால் இருக்கு வாங்கி போட்டுட்டு வா “

இருவரும் ஆடைகளைப் பர்ச்சேஸ் செய்து அவள் உடை மாற்றும் அறைக்கு செல்ல அவளது பொருட்களை லாக்கரில் வைத்து விட்டு வர தாமதமானது.ரியா அந்த வாட்டர் கேம் விளையாடாது நின்றுக் கொண்டு இருந்தாள்.

“ரியா எங்க இங்க நிற்கிற விளையாடலயா?”

“இல்ல ஃபோன் கையில இருக்கு”

“சரி கொடு நீ ஒரு ரைடு போய்ட்டு வா நா அர்ஜுன் வர வரைக்கும் வெயிட் பண்ணனும் .. வைச்சு இருக்கேன் “

ரியா புன்முறுவலோடு அதை அவன் கையில் கொடுத்து விட்டு செல்ல விக்டர் காத்து இருந்தான். சில நிமிடங்களில் அர்ஜுன் அவசர அவசரமாக அவனை நோக்கி வந்தான். வருகையில் வணக்கம் வைத்த ஊழியர்கள் அனைவருக்கும் தலையசைத்து விட்டு அவனை நோக்கி வேக வேகமாக வந்தான்.

“டேய் அதுக்குள்ள எப்படி டா வந்த .. பறந்து வந்தீயா ?”

“அதை விடுடா யாழினி எங்க இருக்கா ?”

“வருவா மச்சி…இதா உன் ஆள் ஃபோன் “

அர்ஜுன் அதை வாங்க அதில் அழகான டெடி ஃபேர் அட்டை படமாக இருந்தது.அவன் அதை பார்த்துக் கொண்டே இருக்க கதிர் சன்சைன் என கால் வந்தது.
அது கதிருடைய ஃபோன் நம்பர் விக்டர் எட்டிப்பார்த்து சிரித்தான்

“மச்சி அவன் சன்சைன் ஆம் நீ என்ன மச்சி ..”

அர்ஜுன் அந்த ஃபோன் கட்டானதும் தனது நம்பரில் இருந்து யாழினிக்கு அழைக்க

அர்ஜுன் தடிமாடு என அழைப்பு வர விக்டர் விழுந்து விழுந்து சிரித்தான்.

“நீ எம்பி எம்பி குதிச்சாலும் அவன் லெவலுக்கு வர முடியாது போலயே மச்சி ..கம்பனி காதலி ரெண்டையும் தட்டிடுவான் போல் …”

விக்டர் சொல்லவும் அர்ஜுன் அவனை அப்படியே தண்ணீருக்குள் தள்ளி விட்டு சென்றான்.

சிறிது நேரத்தில் ரைடு சென்று வந்த ரியா தொப்பலாக நனைந்திருந்த விக்டரைக் கண்டதும் சத்தமாகக் கேட்டாள்.

“ஐயோ ஃபோனுக்கு என்னாச்சு ?”

“ஏன்மா ஒரு மனுசன் வெடக்கோழியா நனைஞ்சு கிடக்கேன் …உனக்கு உன் பிரச்சினை”

அவன் சொல்லி விட்டு அவர்களது செல்ஃபோனை நினையாது கையில் கொடுத்து செல்ல யாழினி வந்தாள். தண்ணீரில் விளையாட ஆரம்பித்தது தான் நினைவிருக்க நேரம் போனது தெரியாது விளையாடினாள்.
“ஏ யாழினி அது ரொம்ப ஸ்டீப் ஆன வாட்டர் ட்ரைவ் ஜென்ட்ஸே கம்மியா தான் போறாங்க “

“விடு ரியா பார்த்துக்கலாம் “

யாழினி உயரே நடந்து அந்த ஏர் ஃபோர்டில் அமர அந்த கார்டு சொன்னான்.

“தனியே போவீங்களா .. யாராவது வந்தா ரெண்டு பேரா போங்க ..லேடீஸ் ஆ இருக்கீங்க “

“இல்லை பரவாயில்லை …நான் போயிடுவேன் “

கார்டு தோளைக் குலுக்கி விட்டு அவளை அந்த வாட்டர் ஃபோர்டில் அமர விட அந்த கார்டு ஏர் ஃபோர்டை தள்ளி விடும் நேரத்தில் ஒரு இளைஞன் அவள் அருகே கரங்களைப் பற்றி அமர யாழினி திடுக்கிடலோடு நிமிர அந்த ஏர் ஃபோர்டு தள்ளப்பட்டது .அவளது கரங்களைப் பற்றிய ஸ்பரிசத்தில் உணர்ந்து இது இந்த அழுத்திய கரங்களின் ஸ்பரிசம் அர்ஜுன் அவள் கத்த மேலிருந்து கீழ் நோக்கிய அந்த வாட்டர் ரைடின் பயத்தோடு அவள் கத்த அவனது சிரிப்பு சத்தத்தோடு அவன் குரல் அவளது காதுகளில் ரீங்காமிட்டது.

“ஹாய் சண்டக்கோழி …போலாமா”
 
Back
Top