அத்தியாயம் 18

Nilaprakash

Administrator
Staff member
அத்தியாயம் 18

ஜெயா தன் மகன்களை இவ்வாறு ஆக்கிய தன் கணவனை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.டேனியல் எந்த வித உணர்ச்சி யும் காட்டாது தன் அறைக்கு சென்றான். அவனின் தூக்கமின்மை சோர்வு நீங்க கண்ணயர்கையில் ரியா கேட்டாள்.

“மனுசனா நீங்க .அந்த புள்ளைத்தாச்சி பொம்பள ...உங்க அண்ணன் அப்பா …யாருக்கு தான் மனசு இரங்கும் உங்களுக்கு “

“ ஏன் இரங்கனும்…நான் தனியா அழுதப்ப ..கஷ்டப்பட்டப்ப யார் இரங்கினா …அந்த புள்ளைத்தாச்சி ஒரு திருட்டு பொறுக்கியை கல்யாணம் பண்ணதுக்கு நான் எப்படி பொறுப்பு ஏற்க முடியும் …. பொண்டாட்டி புள்ளைதாச்சி ன்கறதாலை எல்லா தப்பையும் மன்னிச்சிரலாமா “
அவனின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாது ரியா அடுத்த கேள்வி கேட்டாள்.

“ உங்க அண்ணன் அப்பா ..”

அவள் கேட்கும் முன் அவன் எரிச்சலாகி,

“ என்னைக்காவது உங்க அப்பாவே உன்னை எதிரியா பார்த்திருக்கிறாறா …காசு சம்பாதிக்க மட்டுமே உங்க வீட்ல உன்கிட்ட பேசி இருக்காங்களா ..மனசு விட்டு பேச சிரிக்க வழியில்லாம அப்படி நினைக்கறதேயே மறக்க முயற்சி பண்ணிருக்கியா …அப்பாவாம் அண்ணணாம்…சொந்த வீட்ல யே சோறு தின்கறதுக்கு காசு கொடுக்க சொல்லி கொடுத்திருக்கியா ..இந்த ப்ராண்ட் நேம் யூஸ் பண்ண ஒரு கோடி ரூபா கொடுக்கனும்.. எதுக்கு தெரியுமா ..கீழே நின்னுட்டு இருந்தான் ல அவன் வெட்டியா பணத்தை வாரி இறைக்கிறதுக்கு …எத்தனை நாள் தூக்கமில்லாமல் சம்பாதிக்கிற காசு…ஜஸ்ட் லைக் தட் தூக்கி கொடுக்கனும் ..”

அவள் மீண்டும் கேட்டாள்.

“ காசு தானா எல்லாமே வா ..மனுஷங்க ..”

அவன் இம்முறை மொத்த உடலும் ஓய்ந்து போன கடுப்பில் குரலை வெகுவாக உயர்த்தினான்.

“ ஆமா காசு தான் நான் வெத்து பயனா இருந்திருந்தா உங்க அப்பா பொண்ணு கொடுத்திருப்பாரா ..?"

ரியா வாயடைத்து போனாள்.

“ காசை நீங்க மறைமுகமாக மதிக்கிறீங்க ..நான் முகமூடி இல்லாம பேசறேன்… என்ன உன் பிரச்சினை . உலகத்தில எல்லாத்தையும் நம்புவ ..என்னை மட்டும் நம்ப மாட்ட ...ச்சே எப்ப பார்த்தாலும் இமோசனலாவே யோசிச்சுட்டு … ரிச்சர்ட் கிட்ட மட்டும் அந்த பாழாய் போன பொய் பேசாதிருந்திருந்தால் …இந்த கல்யாணம் கமிட்மென்ட் எதுவும் இருந்து தொலைச்சிருக்காது"

ரியா இதை கேட்டு நொறுங்கி போய் அவனிடம் பேசாது அருகில் படுத்து விசும்பத் தொடங்கினாள். டேனியல் இவளும் தன் குடும்பத்தினர் போல் தான் எல்லா உறவுகளும் நம்மை காயப்படுத்த வே படைத்திருக்கிறான் இறைவன் ..என் நினைத்தான்.அவளை சமாதானம் செய்ய நினையாது சில நிமிடங்களில் உறங்கிப் போனான்.

ரியா அடுத்த இரு நாட்கள் அவனுடன் பேசவே இல்லை . டேனிக்கு புரிந்தது இது சாதாரண ஊடலில்லை ..அவன் மனது அயர்ந்து போனது ஒவ்வொரு முறையும் தன் நிலையை மெய்ப்பிக்க வேண்டுமானால் அது எத்தகைய வலி .. மீண்டும் உறவுகளால் காயங்கள் ஏற்பட அவன் அனுமதிக்க போவதில்லை
..ரியா தான் கண்ட அந்த உணர்ச்சி அற்ற மிருகத்தை மீண்டும் கண்டாள்…இல்லை இந்த வலி தன்னால் அனுபவிக்க இயலாது …தன் தந்தையை அழைத்தாள்.
டேனியல் அன்று மாலை வீட்டுக்கு வர சாமுவேல் அமர்ந்து இருந்தார்..தன்னை புரிந்து கொண்டு அன்பு செலுத்தும் ஒரு உயிர் கூட தனக்கு இல்லை போலும்.‌‌ அவரிடம் இறுக்கமான குரலில்,

“ உங்க ஒருத்தர் கிட்ட மட்டும் தான் ..நான் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியலே ..முடிஞ்ச வர முயற்சித்தேன் ..நானும் மனுசன் தான் மாமா.. முடியல …உங்க பொண்ணு கண்ணுக்கு மட்டும் தான் நான் மிருகமாகவே தெரியறேன் “
அவன் சொல்லவும் அவர் அவன் கைகளை பற்றி,

“ என் பொண்ணுனால யாரையுமே வெறுக்க முடியாது மாப்ள அதுவும் அவ மனசுக்கு பிடிச்ச உங்கள சுத்தமா முடியாது ..பெத்தவன் இல்லையா மாப்ள ..அழுது கூப்பிட்டா வராம இருக்க முடியல ..கொஞ்ச நாள் தான் மாப்ள …அவ சரியானதும் இங்கே வந்துருவா ..அது வரைக்கும் நீங்க மனசு மாறாம வேற ஒரு “
அவன் வறட்சியான புன்னகையோடு,

“அவளை மாதிரி என்னை யாரும் அவ்வளவு லேசில மயக்கிட முடியாது .. கூட்டிட்டு போங்க மாமா ..பிரியறது தான் சந்தோசம் னா ..அதை அவளுக்கு கொடுத்துடுங்க"

அவன் மாடிப்படி ஏறிச் செல்ல அவன் அறை முழுவதும் இருந்த அவளின் பொருட்கள் மாயமாகி இருந்தது .
அடுத்த இரு மாதங்கள் டேனியல் அவளில்லாத தனிமை கொல்ல வேலை வேலை என மூழ்கி போனான்‌. ரியா அவன் என்ன செய்வான் என்ன சாப்பிட்டான் எதுவும் கேட்க வழியில்லாது எதையோ பறிகொடுத்தது போலிருந்தாள். மேபல் தன் கணவனிடம்,

“இவளை எனக்கே நாலு சாத்து சாத்தனும் போல் இருக்கு .. திறமையா பணம் சேர்க்கற புருஷன் ..தாங்கற வீட்டுக்காரர் ..ஒரு நாள் இங்க தனியே விட முடியாம ஓடி வந்த மனுசன் …அவரை விட்டுட்டு எதையோ பறிகொடுத்த மாதிரி…பேசாம இவளை எங்கேயாவது கூட்டிட்டு போய்ட்டு வாங்க ..இல்லை எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்” என்றாள்.

சாமுவேல் கௌதமிற்கு அழைத்து நடந்ததை விள்க்கி அவளை இரு மாதங்கள் கனடா விட்டுவிட்டு வந்தார். ரியாவுக்கு அந்ந சாபங்களும் டேனியலின் இறுகிய முகமும் அவள் நினைவுகளை விட்டு நீங்க மறுத்தது.

ஒரு மாதம் கௌதமும் லதாவும் அவளை எங்கேயும் அழைத்து செல்ல இயலாது அவளை தனிமையிலிருந்து மீட்கவும் முடியாது திணறினர். சாமுவேலும் மேபலும் அவள் மனநிலை மாற தினமும் இறைவனை மட்டுமே நம்பியிருந்தனர்.
அதே நேரம் டேனி இன்னும் தன் நத்தை கூட்டில் சுருங்கி போனான். ஜெயா விடம் கூட இரண்டொரு வார்த்தைகள் பேசுவது நின்று போனது. தன் மகனை மீட்க நினைத்து புதைக்குழியில் தள்ளி விட்டோமா என்று அவள் மனம் அரற்றியது .ரியா வின் வலியும் அவளுக்கு புரிந்தது . இப்படிப்பட்ட கணவனை தானே அவளும் ஒரு காலத்தில் மணந்திருக்கிறாள். பாவம். அவர்கள் இறுகிய மனம் உள்ள ஆண்கள் தான் ஆனால் தன் இணையிடம் குழந்தைகளிடமும் பூ போல் மென்மையானவர்கள் என்பதை அவள் ஏன் புரிந்து கொள்ளவில்லை
ஜெயா அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த தன் மகனின் தலை வருடி அமர்ந்திருந்தாள். அவள் எழும் போது

“ மா .. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கீங்களா .. எனக்கு தூக்கம் வர வரைக்கும்"

தன் மகனின் முதல் விருப்பம் இப்படி தான் இருக்க வேண்டுமா பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்திய படி தன் மகனை மடியில் சாய்த்து மருமகளை மனதிற்குள் திட்டினாள் ஜெயா.

“இப்படி தான் விட்டு விட்டு செல்வாளா இவ"

ஸ்னோலின் வில்லியம்ஸ் இருவரும் மறு நாள் வீடு வர டேனி எதுவும் பேசாது கடந்து போனான். ஸ்னோலின்

“ டேனி அவர் நீ சொன்ன மாதிரி பண்ணிட்டார் ..இப்ப"

அவன் பேசாது மேலே சென்று ஒரு பேப்பரை எடுத்து வந்து அவளின் கையில் கொடுத்தான்.

“இதில அவனோட பங்கு இருக்கு இதை அவன் விற்க முடியாது ..லாபத்தை செலவு பண்ணிக்கலாம் .. ரொம்ப அதிகமில்லை"

அவன் நீட்டவும் அதில் மிகப் பெரிய பணத்தின் அளவே இருந்திருந்தது அவன் கணக்கில் சிறியது போலும்.மைக்கேல் மேலிருந்து பார்த்து கொண்டு இருந்தார். தன் மகன் மிருகம் போல் உழைத்திருக்கிறான் வரம் கொடுக்கும் சாமி போல தன் குடும்பத்தை தாங்கியிருக்கிறான்..தன் பொறாமை குணம் அவனை மிருகம் ஆக்கியதோ என்ற வலி அவருக்கு அன்று குணமாக தொடங்கியது.

அதே நேரம் டேனியலின் கனடா எக்ஸ்போர்ட் கம்பனியின் ஆனுவல் மீட்டிங் கு ஏலன் அழைத்திருந்தான்.அவனுக்கு அந்த வலியில் இருந்து மாறுதல் தேவைப்பட்டது‌ . ரியா வை ஒரு முறை கூட அழைத்து பேசவில்லை அவன். அவனின் கண்களில் அந்த களையிழந்து அழுகையோடு யாரிடமும் பேசாது அவள் இருந்த பத்து நாட்கள் வந்து போனது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் அவள் தேவதை தன்னால் சிரிப்பை முழுவதுமாக இழந்து விடுவாளோ என பயந்தான்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல் தன்னை குறித்த அவளின் மதிப்பீடுகள் மாறும் என்ற நம்பிக்கையை இழந்திருந்தான்.தன் காயத்தை தானே நக்கி ஆற்றிக் கொள்ளும் மிருகம் தானே அவன் ..அவன் அதிலிருந்து விடுபட கனடா சென்று வர முடிவெடுத்த்தான்.

வருடாந்திர ஆய்வுக் கூட்டம் நிறைவாக ரிச்சர்ட் ன் வீட்டில் பார்டி ஏற்பாடாகி இருந்தது . இந்திய மற்றும் கனடா நாட்டு ஏற்றுமதி இறக்குமதி தொழில் முனைவோர் அழைக்கப்பட்டிருந்தனர். ஏலன் தன் நண்பன் டேனிக்கென்று ஒரு அறையை தன் வீட்டில் எப்போதும் ஒதுக்கி இருந்தான் டேனியல் . ஏலனிடம் அவனின் உண்மை நிலையை கூறியிருந்தான்‌ . பொய்கள் தந்த காயங்கள் போதும் என்றிருந்தது அவனுக்கு. ரிச்சர்ட் ன் அனுபவத்திற்கு டேனியலின் காதல் அவன் முகத்தை கண்டதும் புரிந்து போனது .

அழுது அழுது ஒய்ந்து போவேன் என்று அடம் பிடித்து கொண்டு இருந்த தன் தோழியின் முன் சேரை போட்டு அமர்ந்தான் கௌதம்.

. “ என்ன பிரச்சினை உனக்கு ஏன் இப்படி அழற"

அவனின் கேள்விக்கு விசும்பலுடனே பதிலளித்தாள் ரியா‌. அவளாக சொல்லட்டும் என இதுவரை எதையும் அவளிடம் கேட்காதிருந்தான் கௌதம்.
ரியா நடந்தவற்றை ஒன்று விடாது கூறி தன்னையும் ஒரு பிஸினஸ் டீல் ஆக அவன் அணுகியதை தாங்காது சொல்லி முடித்தாள் .

“ நீ என்ன பண்ணிருக்க ரியா …அவருக்கு மிக பெரிய வலியை கொடுத்துட்டு உனக்கு வலிக்கற மாதிரி அழுதிட்டு இருக்க ? “

அவனின் கேள்வி அவளை நிமிர்ந்து பார்க்க செய்தது.

“ நீ அவரை எத்தனை முறை தப்பா நினைச்சிருக்க …அதுக்காக அவர் கோப்பட்டு உன்னை திட்டியிருக்கிறாரா .. இல்லை உன்னை தப்பா நினைச்சிருக்காரா ? பணம் பணம் னு இரக்கமில்லாம நடந்திருக்கார் ன்கற ..உன்னை சுற்றி இருக்கற மனிதர்கள் எப்படி ரியா .அவங்கள பார்த்து வளர்ந்து இருப்ப ..அவருடைய அப்பா எப்படி ரியா…சொந்த மகனையே தொழில் போட்டியா நினைக்கிற மனுசன்…எப்படி வளர்ந்திருப்பார் …சொந்த குடும்பத்தின் வலிகளை சில சமயம் நண்பன்கிட்ட கூட சொல்லி அழ முடியாது தெரியுமா…யாருமே எனக்கு இல்லை னு ஏங்கற ஒரு குழந்தை யை அழகா அணைச்சு நான் இருக்கேன் னு சொல்லிட்டு …இப்ப சீ போ னு தூக்கி எறிஞ்சுட்டு வந்திருக்க …அதுக்கும் உன் மேல கோபப்படல அவர் ..ரியா எனக்கே உன்னை நாலு சாத்து சாத்தனும் னு தோணுது இதுக்கு நீ அழக் கூடாது அவர் தான் அழனும்.எனக்கு தெரிஞ்சு எல்லாத்துக்கும் வரம் கொடுக்கற தேவதை அவருக்கு மட்டும் ஏன் சாபம் கொடுத்த“
அவன் சொல்லி முடித்ததும் ரியாவின் அழுகை இன்னும் அதிகமானது. அவளை சமாதானப்படுத்த சென்ற தன் தாய் லதாவை விடுமா அழட்டும் என் அழைத்துச் சென்றான்.ரியா தன் கணவனின் நம்பருக்கு கால் செய்யதாள் ஏனோ அவனின் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் இருந்தது . பெண்ணல்லவா ஊடலில் தான் அழைத்து விட்டேன் இனி அவன் அழைக்கட்டும் என நினைத்து காத்திருந்தாள்.

அதே நேரம் ட்ராவலின் ஜெட் லாக் ல் சோர்வாக சிறிது நேரம் படுத்து விட்டு எழுந்தான்.வரும் போதே அவனின் அலைபேசி குழ் விழுந்து செயலிழந்திருந்தது.அந்த மிகப்பெரிய வீட்டின் உள்ள தோட்டத்தில் நடக்கத் தொடங்கினான். ரிச்சர்ட் அந்த வழியே வந்தவர் அவனை பார்த்து நின்றார்.

“ ஆர் யூ ஆல்ரைட் யங் மேன் ?"

மனசு சரியில்லை யா என்ற கேள்விக்கு நன்றாக இருப்பதாக பதிலளித்தான் டேனி. ரியா வை பக்கத்தில் வைத்து அவளை காயப்படுத்திக் கொண்டே இருக்க அவனுக்கு விருப்பமில்லை..அவளாவது சந்தோசமாக இருக்கட்டும் எனக்கு இந்த வலி பழகியது அவள் தாங்க மாட்டாள் என நினைத்திருந்தான்.

அவன் முகத்தில் இருந்த வாட்டத்தை கண்டு அவனுடன் அந்த ஊஞ்சலில் அமர்ந்தார் ரிச்சர்ட்.

“டேனி ஐ நோ லவ் இஸ் பெயின்ஃபுல் பட் டோண்ட் யூ திங் ஷீ வுட் பீ இன் த சேம் ஃபெயின்.. ஹோப் யூ டூ கெட் எலாங்! “
என்று சொல்லி அவன் தோளில் தட்டி விட்டு நடந்தார்.

டேனிக்கு அவர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலித்தது இந்த வலி காதல் என்றால் உனக்கு இருக்கும் அதே வலி அவளுக்கு இருக்காதா டேனி!

அப்போது தான் உணர்ந்தான் நானின்றி அவளுக்கு ஏது சந்தோசம் அவன் தெளிவு தேடி குழம்பி நின்றான்.

மறுநாள் கௌதம் அந்த அழைப்பிதழை வாசித்தபடி எனக்கில்லை எனக்கில்லை என்று திருவிளையாடல் நாகேஷ் போல் நடந்து கொண்டு இருந்தான். ரியா அவனை பார்க்கவும்

“ஒரே ப்யூட்டிஸ் ஆ வருமாம் ..பட் ஒன்லி ஜோடி ஆ தான் போகனுமா…கபுள்ஸ் பார்ட்டி"

அவன் தன் தோழியின் மனநிலையை மாற்ற முயற்சித்தான் அவனின் வற்புறுத்தல் தாங்காது அவள் உடன் வருவதாக சொல்ல அவன் வாங்கி தந்த அந்த அடர் சிவப்பு நிறத்தில் ஆன அந்த வெஸ்டர்ன் கவுனில் அவனுடன் அந்த பார்ட்டிக்கு சென்றாள் ரியா.

அதே பார்ட்டிக்கு ஒரு வெளி நாட்டு இளம் பெண்ணுடன் வந்திருந்தான் டேனியல். அவன் அருகில் அந்த பெண் சிணுங்கியதையும் அணைத்து நடப்பதையும் கண்ட ரியாவுக்கு கோபம் கொப்பளித்தது.

அதே நேரம்

“ ஷீ இஸ் டேம் ஹாட் ஹு இஸ் ஷீ “

என சில கனடா நாட்டு இளைஞர்கள் பேசவும் அவன் அப்பொழுது தான் ரியாவை பார்த்தான் அவளுடைய ஹவர் க்ளாஸ் ஃபிகருக்கு அந்த ஆடை அவள் அழகை எடுத்துக் காட்டியது.அவளின் தலைமுடி கர்லிங் ஆக மார்பு வரை சுருள் சுருளாக படித்திருக்க இதழில் ரோஜா இதழ் சாயத்துடன் டன் மிக அழகான ஒப்பனையில் நின்றிருந்தாள் ரியா.
டேனியலின் கண்கள் அவள் உடல் முழுவதும் கோபமாக பார்க்கவும் மனசுக்குள் கௌதமை சபித்தாள்…. ஃப்ரண்ட் ட்ரஸ் னு வாங்கி.கொடுத்து இப்படி இவன்ட ..அவள் தன் ஆடையை சரி செய்ய முயன்றாள்.

அவன் ஒரு நொடி கூட யோசிக்காது அவளை இழுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான் . அவன் கை அழுந்தி காயமாகும் போலிருந்தது. திட்டுவான் என எண்ணுவதற்குள் அவள் இதழ்களில் அழுத்தமான முத்தம் விழுந்தது.

“ நான் கௌதம் காக தான் “

ரியாவுக்கு தன் ஆடையும் அவனை பிரிந்து அவள் இவ்வாறு சந்தோசமாக இருப்பதாக எண்ணாமல் இருக்க வேண்டுமே யாராக இருப்பினும் இந்த சூழ்நிலையில்.அவள் எண்ணி முடிப்பதற்குள்

“ எனக்கு தெரியும் ரியா ..ஏதாவது காரணம் இருக்கும் ..கௌதமா “

அவளுக்கு முகத்தில் அறைந்தாற் போலிருந்தது ..தன்னை இப்படி நம்பும் ஒருவனை ஒரு துளி கூட நம்பாது ..அவனை கண் அகல நோக்கினாள்
அவன் அவளை கட்டிலில் தள்ளினான் .தன் ஃபோன் நினைவு வர

“..ஒரு ஃபோன் ஒரு மெசேஜ் எதாவது பண்ணிருக்கலாம் ல”
அவள் கோபமாக அவனை அடிக்க முயலவும் அவள் காதில்

“ ஒன்னே ஒண்ணு தான் பண்ணிருக்கலாம் னு நினைச்சேன்..அஞ்சாறு குழந்தை கொடுத்திருக்கலாம் ..அப்ப தான் உன்னை கை கால் பிடிச்சு ஓடாம இருக்க எனக்கு சப்போர்ட் ஆ இருக்கும் ..இப்ப அதுக்கு தான் முயற்சி பண்றேன் “ அவன் கரங்கள் அவளை கொள்ளை கொள்ள மீண்டும் அவள் காதில் சொன்னான்

"எனக்கென வந்த தேவதை ரியா …நீ …எனை விட்டு எங்கும் போக முடியாது “

நிலா பிரகாஷ்
 
Back
Top