அத்தியாயம் 24 § epilogue

Nilaprakash

Administrator
Staff member
அத்தியாயம் 24

மறுநாள் காலை அனைவருமே கலைமகளிடம் என்ன சொல்வதென விவாதிக்க அமர்ந்து இருந்தனர். அனைவரும் தயக்கத்தோடு இருக்க மணிமாறன் பேசினான்.

“இவ அனன்யாவானு இன்னும் உறுதியா சொல்ல முடியலை. செல்வா நீ அந்த குருப்பை இன்னும் அப்சர்வ்லயே வை. கவி டிஎன்ஏ ரிப்போர்ட்ல இருக்கிற பொண்ணு அனன்யானு ப்ரூவ் பண்ணணும். நான் இன்னைக்கு பெங்களூர் கிளம்பறேன். விக்கி இது ஒரு ரிலீஜியஸ் கல்ட்ன்கறதால அனன்யாவுக்கு மேல ஒரு ஆளு இருந்திருந்தா அவன் மறுபடியும் தினம் தினம் தற்கொலைகள் செய்ய வைக்கலாம் வீ நீடு டு கன்பார்ம் தட்”

அதைக் கேட்டதும் மூவரும் திகைக்க மணிமாறன் தொடர்ந்தான்.

“இன்னும் இரண்டு வாரம் அனன்யா தான் இறந்தது அனன்யாவுக்கு மேல யாரும் இல்லைனு நாம உறுதிப்படுத்தணும். விக்கி நீ இங்க இருந்து எல்லாத்தையும் பார்த்துக்க. கவி நீ என்ன நினைக்கிற? அனன்யாவுக்கு மேல இன்னொரு ஆளு இருக்க வாய்ப்பு இருக்கா?” பார்கவி அனன்யாவின் இறப்பையே நம்ப முடியாதிருக்க அவனது கேள்வியில் அவனை நோக்கினாள்.

“மாறன். விமன் சீரியல் கில்லர்ஸ்ல மோஸ்ட் ஆஃப் தெம் ஹேவ் அலைபை. முக்கியமா இது ஒரு ஆக்கல்ட்னுகறதால அவளுக்கு ஒரு அலைபை இருக்கிற நிறைய வாய்ப்பு இருக்கு” பார்கவி சொல்ல இதுக்கு மேல இன்னொரு தேடலா என்று இருந்தது செல்வனுக்கு.

அன்று மதியத்துக்கு மேல் மணிமாறன் கிளம்ப விக்டர் பார்கவி இருவரும் தொலைக்காட்சியில் அமர்ந்து இருந்தனர். செல்வன் அறைக்குள் முடங்கினான். அதிகம் பேச்சில்லை அவனிடம்.‌

அவர்கள் எதிர்பார்த்தது போல் தினம் ஒரு தற்கொலை எல்லாம் நடந்தேறவில்லை. மணிமாறன் ஒரு வாரம் அவர்களிடம் அடிக்கடி விசாரித்துக் கொண்டு இருந்தான். அந்த ஒரு வாரத்தில் அவர்கள் கையில் கிடைத்திருந்த டிஎன்ஏ ரிப்போர்ட் கிரிமினல் டேட்டா பேஸில் ஒத்துப் போக மணிமாறனுக்கு அழைத்தான்.

“மச்சான் அது பெங்களூர்ல இருந்த ஒரு அன்அடின்பைட் பாடியோட பொருந்தியிருக்கு. அது அனன்யாவோட அப்பா விமலாதித்தன்” விக்டர் சொன்னதும் மணிமாறன் சில நொடி அமைதிக்குப் பிறகு தான் அன்றிரவு வருவதாகச் சொன்னான்.

செல்வன் கணினியில் அமர்ந்து இருக்க பார்கவி தனது கையில் இருந்த டார்க் சாக்லெட்டை நீட்டினாள்.

“வேணா கவி. எனக்கு வயிறு வலி” செல்வன் மறுக்க பார்கவி விக்டரிடம் நீட்டி விட்டுப் பேசினாள்.

“அப்ப இந்த க்ரைம் ஸ்பாட்ல இருந்தது அனன்யா தான்‌. அவளும் உயிரோட இல்லை. இந்த ஒரு வாரம் எந்த மெசேஜ் வரலை. அவ உண்மையாவே செத்து இருப்பாளா?” பார்கவி கேட்க விக்டர் ஆமோதித்தான்.

“அப்படி தான் நினைக்கிறேன் கவி. இந்த ஆக்கல்ட் இவளோட சாவோட முடிஞ்சிடுச்சுனு நினைக்கிறேன்” அவன் சொன்னதை ஆமோதிப்பது போல் அன்றிரவு பேசினான் மணிமாறன்.

“இது சாகறதுக்கு முன்னாடி யமுனா கலந்துகிட்ட சீக்ரெட் ஆக்கல்ட். அதைத் தொடங்கியது மார்கிரேட். அனன்யா இதில் பிரீஸ்ட் மாதிரி செயல்பட்டு இருக்கா” அவன் அது சார்பாக சில புகைப்படங்கள் காண்பிக்க விக்டர் தனது நண்பனின் தோளைத் தட்டி விட்டு நாளைக்கு கலைமகளை சந்திக்கலாம் எனச் சொல்லி உறங்கச் சென்றான். செல்வனும் அன்றிரவு உறங்கச் செல்ல பார்கவி மட்டும் அவனைச் சந்தேகத்தோடு நோக்கினாள்.

“இதை விசாரிக்க உங்களுக்கு இவ்வளவு நாள் தேவைப்பட்டுச்சா மாறன். ஐ அம் நாட் கோயிங் டூ பை யுவர் பார்லி. உண்மையைச் சொல்லுங்க. அனன்யா இறந்துட்டானு சொல்லி அனன்யாவைத் தேடறதுக்கு நீங்க எந்த முயற்சியும் பண்ணாம நிறுத்தின மாதிரி தோணுது. சம்திங் பிஷி” பார்கவி கேட்க மணிமாறன் நிதானமாகப் பேசினான்.

“இங்க பாரு கவி. ஆல்ரெடி இந்த கேசில செல்வா விக்டர் ரொம்பவே வெக்ஸ் ஆகி இருக்கானுக. நானும் இது இத்தோட முடிஞ்சிருச்சுனு ஒரு முற்றுப்புள்ளி வைச்சுட்டு கிளம்பலாம்னு தான் அனன்யா அப்பாவோட டிஎன்ஏ வரைக்கும் க்ளாரிபை பண்ணேன். அவ அம்மா நோமோர். அவளுக்குனு யாரும் கிடையாது. இந்த கேசில நான் ஆராயாத ஒரு பக்கம் கூட இருக்கக் கூடாதுன்னு தான் இவ்வளவு வொர்க். இதில உன் சந்தேகத்தையும் தீர்த்து வைக்கணுமா? இங்க வா” என்று சொல்லி அழைத்து வந்தவன் செல்வாவின் கணினியில் தேடுதல் குறியை அழுத்த குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பிப்பது எப்படி? பாவங்களுக்கான பரிகாரம் என வந்து விழுந்தன வார்த்தைகள்.

“அவன் இப்படியே இருக்கணுமா கவி? அதான் இது ரிலிஜியஸ் ஆக்கல்ட் அனன்யா பீரிஸ்ட்னு சொல்லி வைச்சிருக்கேன்”

மணிமாறன் சொல்ல பார்கவி மௌனமானாள். மறுநாள் மணிமாறன் கலைமகளைச் சந்தித்து விட்டு வந்தான். அன்றிரவு பார்கவி அனைவரையும் பக்கத்தில் இருக்கிற கடற்கரை சென்று வரலாம் என நச்சரித்தாள். விக்டர் கேள்வியாகப் பார்க்க அவளே பதிலளித்தாள்.

“ரொம்ப மனசுக்கு இறுக்காம இருக்கு விக்கி. கேஸ் என்ட் ஆயிடுச்சு. எனக்கு மனசு லேசாக மாற கண்டிப்பா ஒரு பீச்வாக் போயிட்டு வரணும்” அவள் செல்வனைக் கண்டுக் கொண்டே சொல்ல செல்வனோ உடனே வருவதாகத் தலையசைத்தான். நால்வரும் அருகில் இருந்த கடற்கரையோரம் காலார நடந்துக் கொண்டிருந்தனர்.

பார்கவி தனது காலணியைக் கழட்டி விட்டு நடை பயின்றாள். உணவு பேச்சு என நிமிடங்கள் நகர இரவு கிட்டத்தட்ட மணி பத்துக்கு மேல் ஆகி இருந்தது. கூட்டம் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கி இருந்தது. அங்கங்கே அங்கங்கே வெகு சிலர் கூடி நின்று இருக்க விக்டர் பார்கவியிடம் பேசிக் கொண்டு நடந்தான். செல்வன் அதிகம் பேசாது அவர்களுடன் நடந்தான்.

“இந்த கேஸ் நமக்கு ஒரு ஆத்ம திருப்தியை இல்லாம முடிஞ்ச மாதிரி இருக்கு கவி” விக்டர் சொல்ல பார்கவி அதை அமாதித்தாள்.

“உண்மை தான் விக்கி. கடைசி வரைக்கும் நம்மளால அந்த கில்லருடைய இருப்பிடத்தையும் அடுத்து என்ன செய்யப் போறாளோ கணிக்க முடியாமலேயே இருந்தது. கடைசில அவ சாகற வரைக்கும் கூட..” பார்கவி சொல்ல,

“கவி இத பத்தி பேச வேணாம்னு தான் இங்க வந்தோம் வேற ஏதாவது பேசுங்க” என்று சொல்லி செல்வன் முன்னே நடக்க பார்கவி அப்பொழுது தான் அவன் கால்களைப் பார்த்தாள். அவன் காலனியைக் கழட்டி காலுறையுடன் நடந்துக் கொண்டு இருக்க காலுறையில் அவனது பெருவிரலில் ரத்தம் தோய்ந்து இருக்க, இரு நாட்களாக அவன் உணவு உண்டதாக நினைவில்லை அவள் டார்க் சாக்லெட் நீட்டும் போது கூட, பார்கவி தன்னை விட்டு இருபது அடியில் காலை நனைத்துக் கொண்டு இருந்த விக்டரிடம் கத்தினாள்.

“விக்கி அவனப் புடி அவன் தற்கொலை பண்ணிக்க போறான்டா”

பார்கவி கத்த இருளில் செல்வன் கடலில் பத்தடிக்கு மேல் உள்சென்றிருந்தான். விக்டர் சற்று தூரம் தள்ளி இருந்தவன் ஓடி தண்ணீரை நோக்கி பாய்ந்து செல்ல பார்கவி மணிமாறனிடம் திரும்ப அவனோ அவர்களை விடுத்து அங்கே அங்கே கூடி இருந்த மனிதர்கள் ஆறு பேரை சுற்றி வளைத்து இருந்தான். அதில் மூன்று பெண்கள் இருக்க படகுக்கு பின் இரு காவலர்கள் மஃப்டி உடையில் அவர்களைச் சுற்றி வளைக்க அந்த கூட்டத்தில் ஒருத்தியாக நின்றுக் கொண்டு இருந்தாள் அனன்யா.


பார்கவிக்கு புரிந்தது. அப்போ இவன் எதிர்பார்த்துதான் அழைத்து வந்திருக்கிறான். அனன்யாவைக் கைது செய்த காவலர்களிடம் பத்திரமாக அழைத்துச் செல்ல பெண் காவலர்களிடம் பணித்து விட்டு அவர்களை நோக்கி விர விக்டர் ஒரு வழியாக செல்வனை தலைமுடியோடு பிடித்து இழுத்து வந்து கரையில் தள்ளி இருந்தான். பார்கவி செல்வனைக் கண்டு விட்டு மணிமாறனிடம் திரும்பியவள் யாருமே எதிர்பாராத வண்ணம் மணிமாறனின் கன்னத்தில் அறைந்தாள். அதை சற்றும் எதிர்பாராத அனைவரும் அவளை பார்க்க அவள் முகம் கோபத்தில் சிவந்து இருந்தது.

“தூண்டில் புழு மாதிரி மனுஷங்களை யூஸ் பண்ணுவியா மாறா? அவன் செத்து இருந்தானா?! நான் நேத்து பேசும் போது கூட” மணிமாறன் அவள் கரத்தைப் பற்றி நிறுத்தியவன் அவளிடம் புன்னகையுடன் கேட்டான்.

“இப்ப உன் கோபம் நான் உன்னை ஏமாத்திட்டேன்னா? இல்லை செல்வனை யூஸ் பண்ணி கில்லரை பிடிச்சேன்னா? இப்பக் கூட அவளா ஒத்துக்காட்டி அவளை இந்த கேசில கைது பண்ண முடியாது கவி. சரி எதுனாலும் நாளைக்கு உனக்கு விளக்கம் தரேன்” என்றவன் அங்கிருந்து கிளம்பினான்.

அதன் பின் அந்த கொலைகாரியை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றான். பார்கவி மணிமாறன் இருவரும் விசாரணை அறைக்கு முன்னே இருக்க கண்ணாடித் திரையில் அனன்யா தெரிந்தாள். இவளா ஐம்பது பேரின் சாவை தீர்மானித்தாள் என்பதைத் துளிக் கூட நம்ப முடியாது ஏன் கோர்ட் கூட அவர்கள் விசாரணை மீது கடுமையான விமர்சனங்களை வைக்கக் கூடும். மணிமாறன் பார்கவியைக் கேட்டான்.

“உன்னால அவளைப் பேச வைக்க முடியுமா கவி? நம்ம டிஎன்ஏ எவிடன்ஸ் நம்ம வழக்கை ஜோடிச்சோம்னு சொல்லக் கூட வாய்ப்பிருக்கு. எல்லாமே சூசைடல் கேஸ்” மணிமாறன் சந்தேகமாகக் கேட்க பார்கவி முயற்சிப்பதாகச் சொல்லி உள்ளே சென்றாள்.

அவள் நினைத்தது போல் அனன்யாவைப் பேச வைப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருக்கவில்லை. கால் மேல் கால் போட்டு அமர்ந்து பார்கவியின் கண்களை நேராக எதிர்க்கொண்டாள் அனன்யா.

“இந்த தற்கொலை அத்தனையும் நீங்க தான் தூண்டுகோலா?” பார்கவி

“எத்தனை?” என்ற அனன்யாவின் அலட்சியமான மறுகேள்வியில் பார்கவிக்கே சிறிது அச்சம் பிறந்தது. கேள்வி கேட்கையில் அவள் கண்கள் பார்கவியின் கண்களை ஊடுருவி நின்றது.

“அந்த போஸ்ட்ல கமென்ட் பண்ண பதிமூணு பேரு” பார்கவி சொல்ல

“மீதி யாரு கணக்கில எழுதுவீங்க?” என்று சொல்லி நகைத்தாள் அனன்யா. பின் அவளேத் தொடர்ந்தாள்.

“மொத்தம் என்பத்தாறு பேர். அந்த சின்ன பையன் செல்வன் மிஸ் ஆயிட்டான். அவனும் சேர்ந்து இருந்தா என்பத்து ஏழு பேரு” அவள் சொல்ல வெளியே மணிமாறன் அவளையே வெறித்துக் கொண்டு இருந்தான்.

“அப்ப அந்த சாப்பாட்டில விஷம் கலந்து குழந்தைகளைக் கொன்னது எல்லாம்” பார்கவி கேட்க

“நான் தான்” என்று அநாயசமாகப் பதில் சொன்னாள் அனன்யா.

“உங்களுக்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியோ வருத்தமோ இல்லையா?” பார்கவி கேட்க அனன்யா அந்த கேள்வியில் அவளைக் கூர்மையான விழிகளில் பார்த்தாள்.

“என்னைக்காவது சாவுக்கு ஏங்கி ஏங்கி வாழ்ந்த அனுபவம் இருக்கா உனக்கு?” அனன்யா கேட்க பார்கவி அந்த கேள்வியின் நோக்கம் புரிந்து அமைதியாக இல்லை எனத் தலையசைத்தாள்.

“எனக்கு இருக்கு. நாலு வயசில இருந்து தினமும் அடி உதை பசி அவமானம்னு பார்த்து பார்த்து சாவுக்கு ஏங்கி ஏங்கி வாழ்ந்து இருக்கிறேன். அதிலும் படிச்சு பிழைப்பு தேடினா அங்கேயும் செத்துப் போன எங்க அப்பன் வந்து நின்னான். அப்ப தான் எங்க காட்மதர் மார்கிரேட்டைப் பார்த்தேன்” அதை சொல்லும் போது அனன்யாவின் கண்களில் ஒருவித ஏக்கம் தெரிந்தது.

“நாங்க இந்த உலகத்துல எங்களைப் போல் வாழ விரும்பாத உயிர்களுக்கு வரம் வழங்க முடிவு செஞ்சோம். முதல என் ஜூனியர் யமுனா. அவளை நாங்க உயிரோட முதல் பலியிட்டோம்”

“வாட் ஹூயூமன் சாக்ரிபைஸா” பார்கவி திடுக்கிட அனன்யா அதைப் பற்றி எல்லாம் கண்டுக் கொள்ளாது பேசினாள்.

“ஆமா. என்னைப் பொறுத்த வரை சாவை யாசிக்கறவங்களுக்கு அதை பரிசளிக்க அது ஒரு வரம். அதை தான் நாங்க செஞ்சோம். ஆனா அந்த பிணத்தை புதைக்க நாங்க சிரமப்பட்டதால தற்கொலைகளை நடக்க வைச்சோம். இதில தான் அந்த சுகுமார் மடையன் பயந்து பைத்தியமாகி..”

“அப்ப பாபுஜி சத்ரூபன் சலீம்”

“இவங்க எல்லாம் எங்க டிவோட்டீஸ். இதில தேவை இல்லாம உள்ள வந்த சுகுமார். அவனைக் கொன்னு இருக்கணும். ஆனா எங்க காட்மதர் அவங்க அவங்களே தங்களை பலி கொடுக்க முன்வரணும்னு சொன்னதால வெப்சைட் ஆரம்பிச்சோம். அதில் யமுனா ஆரம்பிச்சு ஏழு பேர் இறந்தாங்க”
“அதுக்கு அப்புறம் ஒரு வருசம் நீங்க எதுவுமே பண்ணலயா ஐ மீன் உங்க வெப்சைட் சர்வீஸ்ல”

“எஸ் இந்தியா வந்த உடனே மூணு மாசத்திலே வீ கைடட் சோ மெனி பீபள். ஆனா மார்கிரேட்கு தீடிர்னு உடம்பு சரியில்லாம போனதால ஒரு வருசம் எதுவும் செய்யல. அதுக்கு அப்புறம் முதல சர்வேஸ்வரன்”

“சர்வேஸ்வரன் கொலையா? தற்கொலையா?” பார்கவி கேட்க அனன்யா தன் கண் முன் தெரிந்த காட்சிகளில் லயித்துப் புன்னகைத்தாள். அதைக் கண்ட பார்கவி லேசாக துணுக்குறத் தான் செய்தாள்.

“அவன் கடைசி நிமிஷத்தில தற்கொலை எண்ணம் மாறப் போக கையில் இருந்த டீசரை வைச்சு அவனை தாக்கி அப்புறம் தீ வைச்சேன்”

“அப்போ இது கொலையில்லையா?” பார்கவி கேட்க

“நோ அவன் தீ வைக்கும் போது தெளிவா தான் இருந்தான் என்ன அவனால வேகமா ஓட முடியல அப்புறம் சாலினி, அவ கழுத்தில ***மருந்து சிரிஞ்சை வைச்சு தயங்க நான் தான் செலுத்தினேன்”

“வேலவன் ஆதிரா இரண்டு பேரும் தற்கொலைகள்” பார்கவி அனைத்துக்கும் அவளிடம் வாக்குமூலம் பெற முயன்றாள். அனன்யாவோ சிறிதும் தயங்கவில்லை.

“வேலவன் சாட் ஹிம்செல்ஃப் க்ளீன் அன்ட் கட் எக்ஸ்க்யூசன் பட் ஆதிரா கால் உதறும் போது மறுபடியும் பூத்தொட்டி காலில் சிக்க அப்புறம் அதைத் தட்டி விட்டு அவ சாகும் வரை இருந்தேன்”

“தற்கொலை நடந்த எல்லா இடத்திலயும் இருந்தீங்களா?”

“ஹரிது தவிர. அதனாலத் தான் அதை லைவ் வீடியோ போடச் சொன்னேன். சாவுன்ற விடுதலையை அடையும் போது மனிதக் கண்களில் தெரியும் நிம்மதி நான் இத்தனை நாள் ஏங்கிட்டு இருக்கிற நிம்மதியைப் பார்க்கும் போது அது ..அது ஒரு போதை. சுகம். உனக்கு சொன்னா புரியாது?”

அவள் சொல்ல மணிமாறன் அதைப் பதிவு செய்துக் கொண்டேப் அவளைப் பார்த்தான். அந்த நொடியில் கூட ஒருவனின் மரணத்தை ரசிக்கும் சைக்கோத்தனம் அவள் கண்களில் நிரம்பி நின்றது.

“அப்ப இந்த அப்பாவி குழந்தைங்க பொண்ணுங்க என்ன பண்ணுணாங்க”

“அதுக்கு நீங்க தான் காரணம். இதைத் தான் செல்வன்கிட்டயும் சொன்னேன். நீங்க என்னைத் தெரிஞ்சுகிட்டீங்கனு சொன்னதும் என் சாவு நெருங்கிடுச்சுனு தோணுச்சு. அதுக்கு முன்னாடி என்னால எத்தனை பேருக்கு விடுதலை வழங்க முடியுமோனு அத்தனை பேருக்கு விடுதலை வழங்கணும்னு நினைச்சேன். அதான். பசிக்கும் வேதனைக்கும் வலிக்கு மே வாழ்ற‌ அவங்கள நான் போற இடத்துக்கு கூட்டிட்டு போகணும்னு முடிவு பண்ணேன். அங்கே அழுகை இல்லை வலி இல்லை வேதனை இல்லை முக்கியமா பசி இல்லை” அவள் சொல்ல பார்கவி செல்வனை யோசித்தாள். அவனாகத் தான் அவளிடம் தனக்கு வழிக் காட்டும் படி யாசித்து இருக்க வேண்டும்.

“நீங்க மார்க்கிரேட் மட்டும் தான் இதில் ஈடுபட்டு இருந்தீங்களா?”

“எஸ் நாங்க மட்டும் தான்”

அவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவது? மனநலம் பாதிக்கப்பட்ட ஒருத்தியுடன் கேள்வி கேட்பது வீண் என பார்கவி எழுந்திருக்க அனன்யாவின் கடைசி வார்த்தைகள் அவளை நிறுத்தியது.

“எனக்கு மரண தண்டனை கிடைக்கும் தானே”

அனன்யா கேட்க பார்கவி அவளைப் பரிதாபத்துடன் பார்த்தாள். கடைசி வரை சாவுக்கு ஏங்கி ஏங்கி வாழும் வாழ்க்கைக்குச் சபிக்கப்பட்டவள். ஒரு சைக்கோ கொலைக்காரியிடம் பரிதாபம் மேலிடுவது மனிதத்தன்மையற்றதா? பார்கவி ஒன்றும் பேசாது வெளிவர மணிமாறன் அவளிடம் புன்னகைத்து அவள் சொன்ன வாக்குமூலத்தைப் பதிவு செய்து முடித்து இருந்தான். பார்கவி அவனிடம் குழம்பிப் போய்க் கேட்டாள்.

“நான் என் கேரியர்ல க்ராக் பண்ண மிகப் பெரிய கேஸ் இது மாறன். ஆனா எனக்கு அவ மேல கோபம் தாண்டிய பரிதாபம் வருது. நான் கொலை பண்ணத் தூண்டலைனு எல்லாம் தப்பிக்க ட்ரை பண்ணாம ஒவ்வொரு கேஸ்கும் விளக்கம் சொல்றா”

“மறைக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டவர்கள் ஒத்துக் கொண்டவர்கள் எல்லாம் தண்டிக்கப்பட்டவர்கள் என்பதுதான் எவ்வளவு பெரிய அநீதி ஜெயக்காந்தன் வரிகள் வாசிச்சு இருக்கியா? இந்த உலகத்துல அவளைப் போல மனுசங்க நிறைய பேர் இருக்காங்க அவரவர் பார்வையில் அடுத்தவங்களுக்கு நல்லது செய்யறதா வெளியே சொல்லிட்டு தன்னையும் நம்ப வைச்சுக்குறது. உள்ளூர அந்த மனுசங்களைப் பார்த்தா அவளை விட கொடிய சாடிஸ்ட்ங்க தான்” மணிமாறன் சொல்ல பார்கவி கண்ணாடி திரைக்குப் பின் தெரிந்த அவளைப் பார்த்தாள். அனன்யாவைத் துரத்தும் எது நம்மை சுயமாக நடமாட அனுமதித்து இருக்கிறது?! அந்த கண்ணுக்குத் தெரியாத சக்தியிடம் உங்களுக்கும் எனக்கும் ஏகப்பட்ட கேள்விகள் அதில் முதன்மையானது.
“ஏன் அவள்? சில சமயம் ஏன் நான்?”

முற்றும்

இந்த கதையை பற்றிய விமர்சனங்களை nilaprakash98@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவியுங்கள்.‌
நன்றி
என்றும் அன்புடன்
நிலா பிரகாஷ்

Epilogue

மணிமாறன் ஈஸ்வரப்பாவைப் பார்த்து விட்டு அகலிகப்பாவிடம் கேட்டான்.

“போகும் போது யமுனாவைப் பார்தீங்களா?”

“ஆமா சார்”

“எத்தனை மணி இருக்கும்?”

“நாலு மணி”

“அதுக்கு அப்புறம் இந்த ஃபாரினர் கார் ரிப்பேர் பண்ணது”

“ஏழு மணி”

மணிமாறன் மூன்று மணி நேரத்தில் ஒரு கொலை செய்து அதை புதைக்கக் கூடிய அளவு நேரம் தூரம் கணக்கிட்டு ஈஸ்வரப்பாவிடம் வரைபடத்தில் சில இடங்களைக் குறித்து இதில் தோண்டிப் பார்த்து உடல் கிடைத்ததும் தனக்கு தெரியப்படுத்துமாறு சொன்னான். அவன் அவ்வளவு உறுதியாக சொல்வதைக் கண்டு ஈஸ்வரப்பா திகைத்து தான் போனார்.‌ ஆனால் அவன் வரைந்துக் கொடுத்த சுற்றளவில் தோண்ட ஆரம்பிக்க சரியாக ஐந்தாவது நாளில் யமுனாவின் உடல் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது. சுகுமார் அன்று அவர்களுக்கு வெறும் வழிகாட்டியாக வந்திருக்க அந்த கொலையைக் கண்டு மேலும் மனநிலை மோசமடைந்து இருந்தான்.

குழந்தைகள் இறந்த மறுநாள்

கலைமகள் இல்லம்

“மிஸ்டர் மாறன் அந்த பொண்ணு இருக்கிற இடம் தெரிஞ்சிருச்சு ஆனா நீங்க?”

“மேடம் எனக்கு இன்னும் எவிடன்ஸ் ஸ்ட்ராங் பண்ணணும் சைபர் க்ரைம் சப்போர்ட்ல செல்வனோட ஆக்டிவிட்டீஸ் செக் பண்ணிட்டேன் தான் இருக்கேன். அவளா வெளியே வருவா. எனக்கு இரண்டு வாரம் டைம் கொடுங்க”

“அதுக்குள்ள இன்னொரு உயிர்”

“அவ நம்ம கண்காணிப்புல தான் இருப்பா மேடம். ஜஸ்ட் ஒன் லாஸ்ட் டைம்” மணிமாறன் கேட்க கலைமகள் சரியெனத் தலையசைத்தார்.

அனன்யா கைதுக்கு முந்தைய நாள்:

“ஏன் மாறா? நீ இன்னமும் அவங்ககிட்ட உண்மையை சொல்லாம இருக்கிறது?!” டிஜிபி பெரியசாமி அவனைக் கேட்க மணிமாறன் மறுப்பாக பதிலளித்தான்.

“செல்வன் கொஞ்சம் விழிப்படைஞ்சாலும் மொத்த விஷயமும் பாழாயிடும் சார்”

“சரி இதென்ன ரிப்போர்ட்”

“இது யமுனா மர்டர் கேஸ்ல அனன்யா கன்விக்ட் பண்ற டீடெயில்ஸ். அந்த டிஎன்ஏ ரிப்போர்ட்ல இருக்கிறது அனன்யா தான்கறதுக்கு க்ரைம் பேஸ்ட் டிஎன்ஏ டேட்டா பேஸ் ரிப்போர்ட் சார்”

“இதை எப்படியா பிடிச்ச?”

“சார் ஆக்சுவலி அனன்யா அப்பாவை கொன்னு அவளும் அவ அம்மாவும் வேற எதோ கிராமத்தில டிஸ்போஸ் பண்ணிருக்காங்க. அங்க டீகம்போஸ் ஆன பாடி டிஎன்ஏ அன்அடின்பைட் ஃபைலாகி அதுக்கு அப்புறம் இவங்க அரெஸ்ட் ஆனதும் கேஸ் க்ளோஸ் ஆகிருக்கு. இதில உடந்தையா இருந்ததால தான் அவ ஜூவன்னைலா இருந்திருக்கா” மணிமாறன் பதிலளிக்க பெரியசாமி பெருமூச்செறிந்தார்.

“நீ இந்த கேசை கொஞ்சம் முன்னாடியே உடைச்சிருக்கலாம் ஐம்பது உசிரு போயிருக்காது” அவர் மனது கேட்காது சொல்ல மணிமாறன் சல்யூட் அடித்து சொன்னான்.

“அப்படி இல்லை சார் அடுத்த நூறு உசிரு போகாம நான் காப்பாத்தி இருக்கேன் அதான் சார் என் பார்வை”
நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நிகழ்வது அனைத்தையும் அர்த்தமுள்ளதாக்கி வளமான எண்ணங்களோடு வாழ்க்கையை எதிர்நோக்க வைக்கும்.

பயணிக்கிறேன் அதே நேர்மறை எண்ணங்களோடு
அன்புடன்

நிலா பிரகாஷ்
 
Back
Top