அத்தியாயம் 33

Nilaprakash

Administrator
Staff member
ராஜ்ஜியம் - 33
மறுநாள் அவனது அணைப்பிலிருந்து மெல்ல எழுந்த அறிவுமதி படுக்கையில் உறங்கிய தன் காதலனைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“சின்னு ஒன்ஸ் மோர் போலாமா?”
அவன் கண்களைத் திறக்காதே அந்தப் போர்வையைத் தூக்கி அவளை இழுத்து அணைக்க அவள் அவன்மேல் விழுந்தாள்.
“வினு.உன் அம்மா கால் பண்ணிட்டே இருந்தாங்களா அதான் எடுத்துப் பேச”
அவள் முடிப்பதற்குள் அவளையும் சேர்த்து தூக்கிப் பிடித்து எழுந்துக் கேட்டான்.
“பேசினியா “
' செஞ்சாலும் செஞ்சிருப்பா நெஞ்சலுத்தக்காரி!!'அவன் முகம் வெளிரியிருந்தது. அவன் முகத்தில் இருந்த அதிர்ச்சியைக் கண்டு வாய் விட்டுச் சிரித்தாள்.
“பயத்தில பெட் லச்சூசூ போய்டாதே என்ன ஒரு அம்மா பையன் நீ நான் பேசலை ரிங் ஆகி ரிங் ஆகி அதுவே சுவிட்ச் ஆஃப் ஆயிடுச்சு”
சுவிட்சு ஆஃப்பா ??? அவள் கேள்வியில் அவள் இயல்பாக இருப்பதை உணர்ந்தவன் அவசர அவசரமாக எழுந்தான்.
“சின்னு நான் வீட்டிற்கு போகனும் உனக்குக் கால் பண்றேன் “
அவள் புன்னகையுடனே சரியெனத் தலையசைக்க மிகத் துரிதமாகக் கிளம்பி காரில் வீடு நோக்கிப் பயணித்தான். காரில் இருந்த சார்ஜரில் மொபைலை இணைக்க அலைபேசி உயிர்த்த மறுநொடி முப்பது மிஸ்டு கால்கள் காட்டியது. ப்ளூ டூத்தில் இணைத்த அலைபேசியில் அபுவின் அழைப்பு வர ஏற்றுப் பேசினான்.வில்லியம் அழைக்கக் கான்ப்ரன்ஸ் கால் ஆனது.
“பரதேசி நாயே எங்கடா இருக்க ?”
“அந்த நாய் இப்ப தான் என் வீட்டு எதுக்க ஒடுச்சு?”
வில்லியமின் கேள்விக்கு அபு பதிலளிக்க விஷ்ணு நொந்துக் கொண்டான். முதல இவளை வீட்டை மாத்தச் சொல்லனும்
“டேய் மீனா மாகிட்ட என்னடா சொன்ன காலை ஏழு மணிக்கே எனக்கு வீடியோ கால் ”
“உனக்குப் பரவாயில்லை டா எனக்கு அஞ்சு மணிக்கே நல்ல வேளை தொழுக போய்ட்டேன் சமாளிச்சுடுவேன் ”
“ சூர்யா தப்பிச்சுட்டான் டெல்லி போயிருக்கான் இல்ல அங்கயும் கால் பறந்திருக்கும்”
“சரி என்ன பொய் சொல்லித் தொலைஞ்ச நாங்க சமாளிக்கனுமே சீக்கிரம் சொல்லித்தொலை “
என்ன பொய் சொன்னேன் தூக்கத்தில் எல்லாம் மறந்து போய் எப்படி நினைச்சாலும் அவ வந்து நின்ன போஸ் மட்டும் தான் நியாபகமிருக்கு அட காஜி மனசே. கொஞ்சம் யோசி அவன் மனம் நொந்து போய்ப் பதில் சொன்னான்.
“மச்சான் என்ன சொன்னேனே நினைவில்லை டா “
“அட அரை போதை நாயே என்ன சொல்லிடா சமாளிக்கிறது ”
அபு தலைமேல் கை வைக்க மீனாட்சி அழைத்து இருந்தார்.
“டேய் மீனு மாத்தான் காலிங் மூடிட்டு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கங்க எங்களால முடியல டாக்கான்பிரன்ஸ் லப்போடறேன் அமைதியா இருங்கடா “
வில்லியம் அதை ஆமோதிக்க அபு மீனாட்சி யின் காலைக் கான்ப்ரன்ஸ் காலில் இணைத்தான்.
“ஹலோ மீனுமா ”
“அபு அவன் எங்கே உன் வீட்ல தான் இருக்கேன் னான்”
“என் வீட்ல தான் இருக்கேன் னானா?”
“என்னடா நீயே கேள்வி கேட்கற அப்ப அவன் அங்க இல்லையா ?”
“அம்மா இப்ப தான் வீட்டை விட்டுக் கிளம்பினான் சூர்யா லவ் மேட்டர் பிரச்சினை ஆயிடுச்சு னு பேசிட்டு இருந்தோம் அப்படியே தூங்கிட்டான்”
“என்கிட்ட ப்ராஜக்ட் பத்தி பேசறேன் னான்”
அபு மனதிற்குள் விஷ்ணுவை சொல்ல முடியாத வார்த்தைகளில் பேசி விட்டுப் பதில் சொன்னான்.
“மீனு மா ப்ராஜக்ட் பத்தி பேசிட்டு இருக்கும்போது சூர்யா பத்தி பேசி லேட்டாயிடுச்சு னு தூங்கிட்டான்.வீட்டுக்குத் தான் வந்துட்டு இருக்கான் “
“சரிடா ”
மீனாட்சி ஃபோனை வைக்க மூவரும் பெருமூச்சு விட்டனர்.இரு வாரங்கள் கடந்தது அன்புமதி சூர்யாவுக்கு பல முறை அழைத்தும் அவன் அழைப்பை ஏற்கவே இல்லை அவர்களின் கட்டிடத் திறப்பு விழா நெருங்கியது‌.சூர்யா இரு வார விடுப்பிற்கு பின் சென்னை வந்தான்.கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துக் கொண்டான். அறிவுமதி அந்த விழாவை அவளுக்கே உரிய கம்பீரத்துடன் மிக மிக வெற்றிக்கரமாக நடத்தி முடித்தாள்.நிகழ்ச்சி முடிவில் தன் அருகில் வந்த அந்தப் பெரிய மனிதரை யார் என்று அறியாதிருந்தும் வரவேற்பின் பொருட்டு புன்முறுவல் செய்தாள்.
“ரொம்ப நல்லாருக்குமா உன் ப்ரசன்டேசன் ஸ்பீச் எல்லாம்”
அவரது ஒருமையில் இருந்த கனிவு பிடித்துப்போக அவரிடம் பேசினாள் மது.
“நன்றி மிஸ்டர்”
“பார்த்தசாரதி ”
“மிஸ்டர் பார்த்தசாரதி ”
“நீ எப்பொழுதும் இப்படி தானா சிங்கம் மாதிரி கம்பீரமா?”
அவரது கேள்வியில் சிரித்துப் பேசினாள்.
“ஹோப் யூ ஆர் நாட் எ ரிப்போர்ட்டர் (நீங்கப் பத்திரிக்கையாளராக இல்லாதிருக்க வேண்டும்) “
“ஏன் பிரஸ் பீபள் பிடிக்காதா?”
“இல்லை யாருக்கும் பதில் சொல்லப் பிடிக்காது ”
“அப்ப நான் கேட்கல ”
அவள் அவர் பதிலில் சிரித்துக் கேட்டாள்.
“நீங்க என்ன பண்றீங்க ?”
“எ ரிட்டயர்டு ஃபெல்லோ ”
அறிவுமதி அவரோடு வெகுநேரம் பேசிக் கொண்டு இருந்தாள் கேள்விகளும் பதில்களுமாக அந்தப் பேச்சு அவளுக்கே வெகுசுவாரஸ்யமானதாக இருந்தது.அவர் விடைபெறுகையில் மீண்டும் கேட்டாள்
. “உங்களுக்கு இன்வைட் ?”
“அதோ அங்கே நிக்கிறானே இந்த ப்ராஜக்ட் ஆர்கிடக்ட் அவனோட அப்பன் நான்”
அவர் சொல்லி எழ அறிவுமதி திடுக்கிட்டுப் பார்த்தாள்.அங்கு நின்றிருந்தவன் விஷ்ணு
“ஹலோ மை லார்ட் எப்படி இருக்கீங்க ஜட்ஜ் ங்க எல்லாம் இந்த வில்லா பர்சேஸ் ல இருக்கீங்களா?”
அவளிடம் பேசிக் கொண்டு இருந்த பார்த்தசாரதியிடம் ஒரு பெரிய மனிதர் பேச அவர் கேள்விகளுக்குப் பதில் பேசியபடி எழுந்து சென்றவரை மலைப்பாகப் பார்த்தாள் அறிவுமதி. மைட்டி கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் சார்பில் சென்னை ஒட்டிய பசுமை சூழ்ந்த இடத்தில் அவர்களுக்குக் கட்டிடம் கட்டப்பட்டு அவர்கள் பெயரிலேயே இடம் பதிவு செய்து கொடுத்திருந்தனர்.அதற்கு ஒரு பெரும் தொகையை அறிவுமதி கொடுத்து இருந்தாள்.வருமான வரி குறைய அதைக் கொடுத்ததாக அவள் கூறிக் கொண்டாலும் தன் தங்கைக்காகத் தான் அதைச் செய்தாள் என்பதை நண்பர்கள் நால்வரும் அறிந்து இருந்தனர். சூர்யா தன் பணிகளை வழக்கம்போலச் செய்துக் கொண்டு இருந்தான்.
அந்த வாரம் ஒரு நாள் செல்வம் தன் மனைவியுடன் அவனிடம் மன்னிப்பு கேட்க வந்திருந்தான். இரு மாதங்களில் அவன் சரியாக வேலைக்குச் சென்று தன்னைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வதாக மோனிகா கூற சூர்யா புன்னகைத்தான். அறிவுமதி செல்வத்தை வாரத்திற்கு ஒரு முறை அன்பு இல்லத்திற்கு வந்து சேவை செய்யச் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தாள். அந்த மனநலம் குன்றிய குழந்தைகளைக் காண்கையில் அவன் திருந்தினா என்பது தெரியலை ஆனால் அவன் குணத்தில் மாற்றம் வந்திருக்கிறது என்பது மட்டும் உண்மையென மோனிகா கூற அன்புமதி பெயர் கேட்டதும் அவள் குரலும் ஸ்பரிசமும் அவன் தேவையாக இருக்க அவர்களை அனுப்பி விட்டு அவள் காதல் சொன்ன தருணத்தின் புகைப்படத்தை அலைபேசியில் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ஒரு மாதம் உருண்டோடியது.குணசீலி அடிக்கடி தன் பெரிய மகளைப் பார்க்க வந்திருந்தார்.தன் குற்ற உணர்ச்சியைக் கொலை செய்ய முடியாது அவளுக்குச் சேவகம் செய்தாவது சிறிது மனதை ஆற்றிக் கொள்ள அந்தத் தாய் மனம் முயற்சித்தது. அன்றும் அவர் வந்திருக்க மது சோர்வாக இருந்தாள் காலையிலிருந்து இரு முறை வாந்தி எடுத்து இருந்தாள்.தாய் மனதிற்கு மட்டும் ஏதோ தவறு என்பதை உணர்த்த அவளைப் பார்த்தாள்.
“உன்னைக் கேள்வி கேட்கிறத் தகுதி எனக்கு இல்ல கல்யாணம் இல்லாம என் பேரக் குழந்தை பிறக்க வேணாம் மது உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன் ”
குணசீலி தன் மகளைக் கண்ணீருடன் கெஞ்சி விட்டுச் செல்ல அறிவுமதி என்ன செய்வதென்று அறியாது அமர்ந்திருந்தாள். அன்று வில்லியம் தன் மனைவியை அழைத்துக்கொண்டு இரண்டாவது செக் அப்காக மகப்பேறு மருத்துவமனைக்குச் சென்றவன் அங்கே அறிவுமதியைக் காண விஷ்ணுவுக்கு ஃபோன் செய்தான்.
“மச்சான் தங்கச்சி தனியா ஹாஸ்பிடல் வந்திருக்கு என்னாச்சு?”
அவன் கேட்ட அரை மணி நேரத்தில் விஷ்ணு அந்த மருத்துவமனையின் முன் நின்றிருந்தான். வில்லியம் ஜெஸியைக் கூட்டிக் கொண்டு வெளிவந்தவன் நண்பனிடம் அவள் உள்ளே இருப்பதாகச் சைகை காட்டி விட்டுச் சென்றான். செக் அப்முடிந்து வெளிவந்த அறிவுமதி அவன் நிற்பதைக் கண்டு அவனையும் அழைத்துக் கொண்டு உள்செல்ல தன் குழந்தையின் உருவை திரையில் கண்டு மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றவன் அவளை அணைத்துக் கொண்டான். அந்தப் பெண் மருத்துவர் அவனின் செய்கையில் சிரித்து மதுவை எச்சரித்தார்.
“கொஞ்சம் கேர்புல் ஆ இருங்க புரியும் னு நினைக்கிறேன்”
அவர் சொல்லிச் சென்ற சிறிது நேரத்தில் அவர் சொன்னதன் முழு அர்த்தம் விளங்க அவன் கத்தினான்.
“டாக்டர் இந்த விஷ்ணு ”
அவன் மேலும் பேசுவதற்குள் அவன் வாயைப் பொத்தி வெளியே அழைத்து வந்தாள்.
“வினு இப்ப இது தான் பிரச்சினையா ?”
“சின்னு உடனே கல்யாணம் பண்ணிக்கலாம் ”
அவன் சொல்லத் தன் தாயின் கண்ணீர் விண்ணப்பம் நினைவு வந்தது அவளுக்கு அவனின் அருகாமையும் அணைப்பும் அவளுக்கு அனுதினமும் தேவையாக இருக்க அவள் சரியெனத் தலையசைத்தாள். விஷ்ணு அப்போதே அவளை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான். மீனாட்சி எது நடக்கக் கூடாது என மனதிற்குள் ஆயிரம் மந்திரங்களை ஓதினாரோ அது அவர்கண் முன் நடக்க மிஞ்சிய சினத்துடன் பேசினார்.
“எனக்கு இந்தக் கல்யாணத்தில இஷ்டமில்லை”
அறிவுமதி அவரின் முகப்பாவனைகளை வைத்தே அவர் பேசப் போகும் வார்த்தைகளைக் கணித்து இருந்தாள். அதனால் எவ்வித அதிர்ச்சியுமின்றி அவர் தொடர்ந்து பேசுவதைப் பார்த்திருக்க மீனாட்சியின் கோபத்தில் அந்தத் திமிரும் அலட்சியமும் இன்னும் எண்ணெய் ஊற்றி எரித்தது.
“வினு மேரேஜ் இஸ் ப்டிவின் யூ அண்ட் மீ ரைட்(கல்யாணம் உனக்கும் எனக்கும் தானே)”
“நீ கொஞ்சம் நேரம் பேசாம இரு சின்னு”
“இவ என் வீட்டு மருமகளாகனும் னா நீ காலம் முழுக்க கல்யாணம் ஆகாமலே இரு”
அவரின் அந்தப் பதிலில் அறிவுமதிக்கு அந்தச் சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. பார்த்தசாரதி அப்பொழுது தான் வந்தவர் நடப்பது என்ன என்பதை ஓரளவு ஊகித்து இருந்தார். “
வா மா எப்ப வந்த ?”
“இப்ப தான் அங்கிள் !”
“ஓ அப்பா மக்க எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் என்கிட்ட தகவல் சொல்றீங்க அதான் அசரீரியா அன்னைக்கே சொன்னாரே மனுசன் ”
“அம்மா ”
“உன்னைப் பெத்த பாவத்துக்கு இதுக்கும் தலையாட்டித் தொலையறேன் ஆனா ஜாதகப்படி உனக்குக் கல்யாணம் இன்னும் நாலு மாசம் கழிச்சு தான் வைப்பேன் “
“அம்மா இல்லை எனக்கு உடனே நடந்தாகனும்.”
“எதுக்குடா உடனே அதுக்கு கூடப் பொறுக்க மாட்டியா ஒரே பையன் சொந்த பந்தம் எல்லாத்தையும் கூட்டி நடத்த வேண்டாமா ?”
என்று பேசிக் கொண்டே போனவர் சட்டென்று பொறித்தட்டியவராக அவன் கன்னத்தில் அறைந்தார்.
“என்ன பண்ணிருக்கடா உன்னை இப்படி மோசமா வளர்த்துருக்கேனே “
அவர் அழ அதுவரை அம்மா பையன் சண்டையை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அறிவுமதி அதற்கு மேல் பொறுக்காது அவன் புறம் வந்து நின்றாள்.பார்த்தசாரதி அந்த அம்மா பையன் சண்டையில் தன் வருங்கால மருமகளின் முகப்பாவனைகளை மட்டுமே ரசித்துக் கொண்டு இருந்தார்.தன் மனைவியின் சினம் மிகுந்த வார்த்தைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தராமல் எப்பொழுது தன் காதலனின் ஒழுக்கம் குறை கூறப்பட்டதோ அப்பொழுது வருகிறாள். இவ்வளவு முதிர்ச்சியான புத்திசாலியான பெண்களை ஆணாகக் கையாளுவது கடினம் புரிதலும் காதலும் கடல்போல் பெரிது இருந்தால் மட்டுமே சாத்தியம் இருபுறம் கூரான கத்தியை இவனால் கையாளக் கூடுமா அவர் தன் மகனைப் பார்த்தார்
அவருக்கு அறிவுமதியைக் காணும் போதெல்லாம் பெருமையும் ஆச்சர்யமும் கலந்தே இருந்தது தனக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற பாராட்டு பத்திரங்களையோ குறை கூறும் பொறாமைப் பேச்சுக்களையோ குப்பையெனக் கருதும் கம்பீரத் திமிர் எத்தனை பெண்களுக்கு வரும் அவர் அவளைக் குறித்த ஆச்சர்ய ஆலோசனையில் இருக்க அவளேப் பேசினாள்.
“விஷ்ணு மேல எந்தத் தப்பும் இல்லை வெறும் கயிறு கட்டிட்டா எல்லாத்துக்கும் லைசென்ஸ் வாங்கிட்டதா எடுத்துக்கலாமா மனசும் மனசும் இணைஞ்சு வாழறது தான் கல்யாணத்துக்கு அடிப்படை அப்படி பார்த்தா அவருக்கும் எனக்கும் கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆச்சு”
“நான் உன்கிட்ட பேசல.என் பையன் டப்பேசறேன் உன்னை மாதிரி பொண்ணுக்கு இது எல்லாம் சகஜம் ஆ இருக்கலாம் எங்களுக்கு அப்படி இல்ல “
அவரின் அந்தப் பதிலடியில் அறிவுமதி கோபம் அவமானம் ரெண்டையும் உணர்ந்தாள்.
“மீனா அமைதியா இரு “
பார்த்தசாரதி அதட்ட இவரும் இவள் பக்கம் பேசுகிறாரே தான் மட்டும் தனித்து விடப்பட்டோமே என்ற விரக்தியில் மீனாட்சி தன் கடைசி அஸ்திரத்தைப் பயன்படுத்தினார்.
“எனக்கு நம்பிக்கை இல்லை ஃபேடர்ன்டி டெஸ்ட் எடுத்து முதல நீ தான் அப்பனா னு பாரு அப்புறம் கல்யாணம் பேசுவோம்”
“அம்மா ஆஆஆஆ” விஷ்ணு கோபமாகக் கத்த அறிவுமதி அடிபட்ட மானென உணர்ந்தாள்.
பொதுவாக அவமானங்களைப் பெரிதுபடுத்தி பழக்கம் இல்லை அவளுக்கு ஆனால் இந்த வார்த்தைகள் மிகவும் அதிகப்படியாகவேக் காயம் செய்தது. ஆணின் தீண்டலே தகிக்கும் தனக்கு இவன் மட்டுமே அதற்கு விதிவிலக்கு ஆனால் எவ்வளவு கேவலமான வார்த்தைகளைக் கேட்க வேண்டியிருக்கிறது. பார்த்தசாரதி அதற்கு மேல் பொறுமையாக இருப்பதைத் தவிர்த்து மனைவியை நோக்கி உறுமினார்.
“மீனா வாயை மூடிட்டு உள்ளே போ விஷ்ணு நீ அறிவுமதியைக் கூட்டிட்டு போப்பின்ன ஒரு நாள் பேசிக்கலாம் ”
விஷ்ணு அவள் கரம்பற்றி அழைத்துச் செல்ல அவள் அபார்ட்மெண்ட் வரும் வரை அறிவுமதி எதுவுமே பேசவில்லை அவளை வீட்டில் விட்டுச் சாப்பிடுவதற்கு வாங்கி வந்த உணவை அவளுக்கு எடுத்து ஊட்ட அதை அமைதியாக உண்டாள். மெல்ல அவளை அணைத்து அவளை இலகுவான மனநிலைக்கு கொண்டு வர முயற்சித்தான்.அவன் இரவானதும் அவளை எப்படி தனியே விட்டுக் கிளம்ப யோசித்தப்படியே அமர்ந்திருக்க வாந்தி எடுத்து விட்டு வந்து அமர்ந்த அறிவுமதி பேசினாள்.
“விஷ்ணு கிளம்புங்க இனி இங்க வராதீங்க”
அவள் விளையாட்டாகச் சொல்கிறாளா நிஜமா என அவன் குழம்பி நிற்க அறிவுமதி மீண்டும் பேசினாள்.
“நிஜமாத் தான் சொல்றேன் எனக்கு என் குழந்தை போதும் ”
“என்ன உளர்ற?”
“அம்மா ஆ ன்கறது தான் அதிகபட்சம் என் சார்பா என் குழந்தை சார்பா உன்னால பேச முடிஞ்ச வார்த்தை இல்ல”.
அவளது கோபம் தன் தாயின் மீது அல்ல தன் மீது என்பதை அப்போது தான் உணர்ந்தான் விஷ்ணு.
வெறும் கனவு தான் விழித்து விட்டால்
வலி மறந்து போகும் என்ற எதிர்ப்பார்ப்பிலேயே
பெரும்பாலும் கடந்து போகிறது வாழ்க்கை !!!

 
Back
Top