ராஜ்ஜியம் - 35
அன்புமதி சூர்யாவின் உதாசீனம் பொறுக்காது அன்று அவனது அலுவலகத்திற்கே நேராகச் சென்று விட்டாள். முன் அறையில் இருந்த வாசவியிடம் முதலில் மன்னிப்புக் கேட்டாள். அரை மணி நேரம் வெளியே அமர வைக்கப்பட அவள் கோபம் செந்தணலானது. உள்ளே சென்றதும் கோபம் குறைய மூச்சை இழுத்து விட்டாள்.
“என்ன நெனைச்சுட்டு இருக்கீங்க? மன்னிப்பு கேட்டு எத்தனை மெசேஜ் பண்ணேன்? எத்தனை கால் பண்ணேன்? ஒன்னுக்கும் ரிப்ளை இல்ல. இப்ப கல்யாணம்னா என்ன அர்த்தம்? “
“கல்யாணத்திற்கு அப்புறமும் இதே மாதிரி மன்னிப்பு கேளுனு அர்த்தம் “அவள் கோபமும் அழுகையுமாக நிற்க
“நீ அவ்ளோ சீக்கிரம் மன்னிக்கற மாதிரி வார்த்தை எல்லாம் பேசலையே அதான் மன்னிக்க எனக்கு டைம் வேணும் கல்யாணத்திற்கு ஓகே சமாதானத்திற்கு நாட் ஓகே “அவன் சொல்ல அன்புமதி அவனை முறைத்தாள்.
“கிளம்பு எனக்கு வேலை இருக்கு ”
“போடா 420 ”
“என்னது ”
“ஒண்ணுமில்ல என்கிட்ட கல்யாணம் வரைக்கும் பேசாதீங்க”
அவள் சொல்லி விட்டுச் செல்ல அவளைப் புன்முறுவலுடனே பார்த்து நின்று இருந்தான் சூர்யா. இரு மாதங்கள் கழித்து கல்யாணத் தேதியும் வந்தது. விஷ்ணு அபு வில்லியம் கல்யாண வேலையில் பிசியாக இருக்க மீனாட்சி முகம் களை இழந்து இருந்தது.
“மீனா என்ன இது ?” மரியம் அவரை உரிமையோடு கடித்துக் கொள்ள தன் மகனைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டார் மீனாட்சி.
“அவன் என்கிட்ட பேசி ரெண்டு மாசம் ஆச்சு அக்கா ”என்ன செய்தாலும் புடைத்துத் தெரிந்த வயிரை தவிர்க்க முடியாது சிங்கிள் பீட் விட்டு நடந்து வந்த அறிவுமதியின் காதில் அவர் பேசியது விழுந்தது.
“ம் கேள்விப்பட்டேன். பொண்ணோட அக்கா தானே.?”
“ஆமா அக்கா இதா மாலினி தான் சொன்னா பொண்ணு கல்யாணம் வேண்டாம்னு வெளிநாட்டு கலாச்சாரம்னு ”
“ஐயோ அண்ணி நான் அந்த அர்த்த்துல சொல்லல ”
“எந்த அர்த்தத்துல சொன்னியோ நான் தப்பா புரிஞ்சுட்டு ரெண்டு வார்த்தை எச்சா பேசிட்டேன் அப்பனும் மகனும் என்கிட்ட சரியா கூடப் பேசறதில்லை”
“நீ ஏன் அழுகற மீனா ஏன் இந்த அபு பைய பொண்ணை இழுத்துட்டு வந்துட்டு சோத்துக்கு காசு கொடுத்தவன் தானே ”
அவர்கள் பேசப் பேசத் திடுக்கிட்டு நின்ற அறிவுமதியை சமீரா பின்னிருந்து வந்து சைகை செய்து அழைத்துச் சென்றாள்.
“இவங்க உலகம் அவ்வளவு தான் மது. அவங்க குழந்தைங்க அவங்க குடும்பம் ஏன் நம்மதும் தான் என்ன பணம் வேலை புகழ் எல்லாம் தாண்டி நாலு சுவருக்குள்ள வரும்போது உண்மையான உசிரு வேணும் மது. அதான் வாழறதுக்கு அர்த்தம் விஷ்ணு அண்ணா உன்னை ரொம்ப மிஸ் பண்றார் புரிஞ்சுக்க”
அவள் சொல்லி விட்டுச் செல்லக் கல்யாண வேலை செய்துக் கொண்டு இருந்த விஷ்ணுவைப் பார்த்தாள். வேலை செய்து நிமிர்ந்தவன் கண்களில் அவள் தெரிய அவளை நோக்கி வந்தவன் மணப்பெண் அறைக்குள் அவளை இழுத்துச் சென்றான்.
“சின்னு உன் கோபம் தீர்ந்திடுச்சா பேசலாமா ?” அவள் அமைதியாயிருக்க அவள் அருகில் வந்து அவள் வயிற்றை மெல்ல தடவிப் பார்த்தான்.
“வயிறு ரொம்ப பெருசா இருக்குல சின்னு இது நம்ம குழந்தை சின்னு எனக்கு உன் கூட இருக்கனும் சின்னு, உன் கூட நம்ம குழந்தை கூட ப்ளீஸ் சின்னு லெட்ஸ கெட் மேரிட் “அறிவுமதி தன் முன் மண்டியிட்டுக் கேட்டவனை அவன் கரங்களைப் பற்றிப் பேசினாள்.
“வினு எனக்குப் பயமா இருக்கு வினு முடிவெடுக்க முடியல “
“சரி உன் குழந்தைக்கு அப்பாவா மட்டும் இருக்கேன். அதுக்கு மட்டுமாவது கல்யாணம் பண்ணிக்கலாம்.” அவன் குரலில் வருத்தம் கெஞ்சல் எனக் குழைந்து இருக்க அறிவுமதி அவன் முன் மெல்ல அமர்ந்து பேசினாள்.
“வினு என்னையும் என் அப்பாபோலப் பார்த்துக்குவியா ?”
அவளது கேள்வியில் அவளை அப்படியே அணைத்துக் கொண்டான். அவன் குரல் பேசும்போது கரகரப்பாக அழுகையை வெளிப்படுத்தியது.
“கண்டிப்பா சின்னு கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் பார்த்துப்பேன்.”
கதவைத் தட்டி உள்ளே வந்த சமீரா குரலைச் செருமினாள். அவளைக் கண்டதும் அவள் சட்டென விலக விஷ்ணு அவளைப் தாங்கிப் பிடித்துக் கடிந்துக் கொண்டான்.
"பார்த்து எந்திரி சின்னு பாப்பாவுக்கு எதாவது ஆச்சுன்னா?”
“ ஹலோ ரொம்ப ஓவர் சீனா இருக்கு. அங்க ஒரு கல்யாணம் நடக்குது வாங்க போலாம் “
சமீராவின் கைப்பிடித்து அறிவுமதி வெளி நடக்க விஷ்ணு சந்தோசத் துள்ளலுடன் பார்த்துக் கொண்டு இருந்தான். திருமணச் சடங்குகள் நடக்க அருகில் அமர்ந்த அன்புமதி இடையில் நறுக்கெனச் சூர்யா கிள்ள அவள் துள்ளாது மேடையில் கடினப் பட்டு அமர்ந்திருக்க அவள் காதில் சொன்னான்.
“இப்படி தான் உன்னை டெய்லியும் டார்ச்சர் பண்ணுவேன் ரெடியா இருந்துக்க.”
அன்புமதி அவன் காதில் ஏதோ சொல்வது போலத் திரும்பி அவன் காதுகளில் கை வைத்து அவன் காது மடலைக் கடிக்க சூர்யா அனைவரும் அறிய ஐயோ அம்மா எனக் கத்தினான்.
“என்னாச்சு டா “மாலினி பதறிக் கொண்டு வரக் காதைத் தேய்த்துக் கொண்டே பதில் சொன்னான் சூர்யா.
“கடிக்கிறாமா இவ “அவன் சொல்லவும் மேடையில் இருந்த அனைவரும் சிரிக்க அன்புமதி வெட்கத்தில் தலையை நிமிர்த்தாதே அமர்ந்து இருந்தாள்.
“மானத்தை வாங்காதீங்க பேசாம உட்காருங்க “அவள் வார்த்தைகளைக் கடித்து துப்புவதைக் கண்டு சிரித்து ஐயர் கொடுத்த தாலியைக் கட்டி மேடையிலேயே அவளது கன்னத்தில் முத்தமிட்டான். கேமரா ப்ளாஷ்கள் எடுத்துத் தள்ளக் கூட்டம் ஓவெனக் கத்த கூச்சத்தில் முகம் சிவந்தாள் அன்புமதி.
அன்று கூடிய அந்த நண்பர்களின் அன்புச் சங்கமம் சரியாக இரு மாதங்களில் வில்லியம் ஜெஸி தம்பதியின் வளைகாப்பில் மீண்டும் கூடியது. ஜெஸி கையினில் வளையல் போட்டுப் பெரியவர்கள் ஒவ்வொருவராக ஆசிர்வாதம் செய்தனர். விமர்சையாக விழா முடிந்து மோசஸ், பார்த்தசாரதி, முகமது மீரான், மூவரும் தங்களது கடந்து போன நாட்களின் ரம்மியத்தைப் பேசிக் கொண்டு இருக்க சுர்ஜித் அவர்களுடன் அமர்ந்து கதை கேட்டுக் கொண்டு இருந்தார். அறிவுமதியும் விஷ்ணுவும் எளிமையாகப் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டனர். மீனாட்சி வேண்டா வெறுப்பாகவே திருமணத்தில் கலந்துக் கொண்டார். அன்றும் தன் கையில் இருந்த கசாயத்தை மாலினி கையில் கொடுத்துத் தன் மருமகளைக் கைக்காட்டிச் சொன்னார்.
“இதை அவகிட்ட கொடு நான் கொடுத்தேன்கறதுக்காகவே குடிக்க மாட்டா “
“அதெல்லாம் நீங்கச் சொன்னா கேப்பா சம்மந்தி ”குணசீலி சொல்ல மீனாட்சி பெருமூச்சு விட்டார்.
“ஏன்மா இவ வயித்துல இருக்கும்போது எதாவது போராட்டம் போர் இதில கலந்துட்டீங்களா?” அவரது கேள்வியில் பெண்கள் அனைவரும் சிரிக்க ஸ்டெல்லா அவர்களுக்கு டீக்கொண்டு வந்துக் கொடுத்தார். அதற்கும் சற்றுத் தள்ளிச் சமீரா, அன்புமதி, அறிவுமதி, ஜெஸி நால்வரும் அமர்ந்து இருந்தனர்.
“என்ன மது அக்கா தூக்கம் வருதா?”
“இல்லை ஜெஸி. ஆனா இதோ அந்த ஆள் மட்டும் நல்லா தூங்கறார்.”
அவள் அங்கே நின்று சிரித்து பேசிக்கொண்டு இருந்த விஷ்ணுவைக் காட்ட சமீரா சிரித்தாள்.
“நல்லா கிள்ளி வைச்சு எழுப்பி விட வேண்டியது தானேகா நான் எல்லாம் அப்படி தான் செய்வேன்.”
“அதெல்லாம் பண்ணலாமாடி “அன்புமதி கேட்க.
. “நான் எல்லாம் ஊசி வைச்சு குத்தி எழுப்பி விட்ருக்கேன் ”சமீரா சொல்ல ஜெஸி வாய்ப் பொத்தினாள்.
“அடியே இதெல்லாம் நீ பண்ணாதே இப்ப தான் உனக்குப் பத்து நாள் ஆகிருக்கு ”
அவர்கள் பேசத் தூரத்தில் நின்றிருந்த அபு புலம்பிக் கொண்டு இருந்தான்.
“உனக்கு எல்லாம் பரவாயில்லை மச்சான், கிள்ளி தான் வைக்கிறாங்கற என்னை எல்லாம் பின்ஊசி வைச்சு குத்தியே எழுப்பி விடுவா மச்சான்.” அதைக் கேட்டுக் கொண்டு கிலி அடித்த குரலில் பேசினான் விஷ்ணு.
“மச்சான் உங்க பொண்டாட்டிகளே இப்படின்னா என் பொண்டாட்டி”
“கடப்பாரை கன்பார்ம்”
சூர்யா சொல்ல விஷ்ணு முகம் வெளிர அவர்கள் சிரிப்புச் சத்தம் நிற்க வெகுநேரமானது. அவள்களின் ராஜ்ஜியங்கள் அந்த ராஜாக்களைக் கொண்டது மிக மிகக் குறுகியது. அதில் அவர்களால் உயிரை விடவும் நேசிக்கும் ஜீவன்கள் மட்டுமே மக்களாக இருக்க அனுமதி. அந்த ராஜாத்திகள் என்றென்றும் ஆள்கிறார்கள். ஆம், அது அன்பாலான அவள்களின் ராஜ்ஜியங்கள்
நீ இடறினால் நான் விழுகிறேன்
நான் விலகினால் நீ ஈர்க்கிறாய்
எனை நீயும் உனை நானும்
ஜெயித்திட முடியா
விசித்திர விளையாட்டு - காதல்!!!
நிறைவு.