அத்தியாயம் 5
அன்று இரவு மூவரும் கௌதமின் வீட்டில் தங்கினர்.லதா அவர்களுக்கு இரவு உணவு சமைத்திருந்தாள் . மேபல் தன் புலம்பலை எல்லாம் லதா விடம் கொட்டித் தீர்த்தாள். லதா ஏதோ சொல்ல வாயெடுக்கவும் கௌதம் அவளை கண்களால் அடக்கிய படி
“ ஆன்டி உங்களுக்கு என்ன அவளுக்கு கல்யாணம் பண்ணணும் அவ்ளோ தானே நான் இன்னும் ஒன் மன்த் ல கனடா போயிடுவேன் ..அப்பரம் அங்க ஒரு வெள்ளைக்காரன் இவளுக்கு பிடிச்சிரலாம்"
லதா அவனை முறைத்தாள்.
மேபல் அவனை பார்த்து சற்று ஆறுதல் அடைந்தவளாய் ,
” நீ போறேன் ங்கறதுனால தான் கொஞ்சம் தெம்பா இருக்கேன் கௌதம் ..!"
ஹாலில் பேசிக் கொண்டு இருந்த கணவனையும் மகளையும் பார்த்து
“ரெண்டு ம் வெள்ளந்தி கௌதம் சூதுவாது தெரியாது யாராவது இல்லை னு சொன்னா கையில இருக்கறத கழட்டி க் கொடுத்துட்டு வந்துரும் ங்க ..எத்தனை ஏமாந்துருங்குங்க தெரியுமா..ரெண்டும் வெளியே சொல்லாது ..பாவம் தேவைக்கு தானே பொய் சொல்றாங்க னு சொல்லுங்க..இவருக்காவது பிஸினஸ் அது இது மனுசங்களை எடை போட தெரியும் ..சின்னது இருக்கிறது பாரு ஒரு மண்ணும் தெரியாது வாய் பேசி அடி வாங்கிட்டு வெளியே சொல்லாம அழும் ..இவளை போய் நான் எப்படி தனியா அனுப்புவேன் ..!"
மேபலின் பயம் கௌதமிற்கும் லதா விற்கும் புரிந்தது
லதா மேபலை அணைத்தப்படியே அவள் விசும்பலை கட்டுப்படுத்தினாள்.
“ நான் பார்த்துக்கிறேன் ஆன்ட்டி"
கௌதம் அவள் கைகளை பிடித்து கூறினான். மறுநாள் காலை கனடா ஃப்ளைட் ஏறினாள் ரியா . கௌதம் ஏற்கனவே தனது நண்பனை அவளை ரீசிவ் செய்து தான் வரும் வரை தங்க வைக்க ஏற்பாடு செய்திருந்தான்.
அவளை ஃப்ளைட் ஏற்றியவுடன் சற்றே நிலைகுலைந்து அமர்ந்தார் சாமுவேல். மேபல் ஓடி வர ஒன்றுமில்லை என்பது போல் கையசைத்து சமாளித்து எழுந்தார்.கௌதமிடமும் லதாவிடமும் விடை பெற்று ஏர்போர்ட் லிருந்தே கோவைக்கு பயணமாகினர்.
அடுத்த இரு நாட்களில் ரியா ஃபோன் செய்தாள் . கௌதமின் நண்பன் அவளை பத்திரமாக ஒரு விடுதியில் சேர்த்திருந்ததாகவும் மிக பாதுகாப்பாக பல்கலைக்கழகம் போய் வருவதாகவும் தெரிவித்தாள்.ஒரு மாதம் ஒடிப் போனது.ரியாவும் தினமும் தன் பெற்றோரிடம் பேசினாள்.கௌதம் வேலை நிமித்தமாக கனடா சென்று அவளை பார்த்து பேசி விட்டு வீடியோ காலில் சாமுவேல் மேபலிடம் பேச அவர்களுக்கு ஒரளவு தைரியம் பிறந்தது.
எனினும் சாமுவேல் தினமும் வேலை முடிந்து வீடு வருகையில் மகளில்லாத அந்த வீடு வெறுமை அப்பி நிற்பதாக வே உணர்ந்தார். அவரை கண்களாலே அளவிட்ட மேபல் அவர் அருகில் வந்து கரங்களை பிடித்தாள்.
“பிள்ளை வளர்ந்துடுச்சுங்க ஆண் பிள்ளை பெண் பிள்ளை னு இல்ல எல்லாம் ஒரு வயசுக்கு பிறகு அவங்கள பிரிஞ்சு தான் ஆகனும்"
தன்னை தேற்றிய மனைவியை புன்முறுவலோடு பார்த்தார்.இரும்பு மனுசி இடி தாங்கி அவர் அவர் கேலிப் பேசியதைக் கேட்டு சிரித்தபடி உறங்கச் சென்றனர் இருவரும்.
அதே சமயம் ஒரு மாதம் தன் தகப்பன் கொடுத்த இடைவிடாத வேலை பளுவை மிக லாவகமாக வே கையாண்டான் டேனி கூடவே ஏலனுடன் தன் தொழில் சார்ந்த வேலையையும் தொடர்ந்து கொண்டு இருந்தான்.ஏலன் தன் தந்தையை சந்திக்க கனடா வரச் சொல்ல கிளம்ப ஆயத்தமானான் டேனி.
மறுநாள் மாலை அவனுக்கு டிக்கெட் புக் ஆகி இருந்தது.அன்று இரவு அவன் அறைக்கு வந்து மைக்கேல் ஒரு ஃபைலை நீட்டினார் அவன் கேள்வியாக நோக்கவும்
“கோவையில ஒரு கம்பனி விலைக்கு வருது உன் முடிவு சொல்லு லாபத்தில் முதலீடு பண்ண !”
டேனி தன் தந்தையை சிலாகித்தான் . தன் முயற்சியில் சிறிதும் தளராத விக்கிரமாதித்தன் சொல்லாடலுடன் தந்தை நினைவு வர ஒரு புன்முறுவலுடன்,
“அடுத்த வாரம் பார்க்கிறேன் கனடா செல்லும் வேலை இருக்கிறது"
மைக்கேல் அந்த ஃபைலை வைத்து விட்டு
"ஒரு வாரத்துல வந்துரு ..ஆள் இல்ல "
என்று சொல்லி விட்டு கிளம்பினார்.
டேனி அந்த ஃபைலை ஒதுக்கி விட்டு தன் எக்ஸ்போர்ட் பிஸினஸ் கான கோப்புகளை ஆராயத் தொடங்கினான்.
டேனி கனடா பயணிக்கையில் அவன் மனம் முழுவதும் ரிச்சர்ட்டிடம் பேசிய பொய் ஒரு நெருடல் ஆகவே இருந்தது.எனினும் அவரை நேரில் பார்க்கையில் தொழில் பற்றிய பரஸ்பர பேச்சுவார்த்தை கே சரியாக இருந்ததால் அதை சுத்தமாக மறந்து போனான்.சரியாக இரு நாட்களில் மீண்டும் இந்தியா திரும்ப கிளம்பினான்.
ஏலன் அவனை இருந்து சுற்றி பார்க்க வற்புறுத்தியும் வேலை இருப்பதாக மறுத்து கிளம்பினான். உடனே ரிச்சர்ட் அவனை அவனது மனைவியுடன் தேன் நிலவுக்கு வருமாறு அழைக்கவும் டேனி அவரிடம் சிரித்து மழுப்பி விட்டு ஏர்போர்ட் கிளம்பினான்.
அவன் இருப்பிடத்திலிருந்து சில கிமீ தொலைவில் ரியா தன் படிப்பில் ஆழ்ந்திருக்க அவளின் செல்பேசி சிணுங்கியது அவளின் அம்மா தான்
“மா “
அவள் பேச தொடங்கும் முன்
“ ரியா மா அப்பாவுக்கு"
மேபல் தேம்பி தேம்பி அழத் தொடங்கினாள். ரியாவுக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.
”மா அழாத மா என்னாச்சு சொல்லு அப்பாவுக்கு”
அவளின் குரலின் அழுகை அவளையும் மீறி வெளிவந்தது.
“நெஞ்சு வலி னார் ஹாஸ்பிடல் வந்தோம் ..இப்ப இரண்டு நாள் தான் இருப்பார் னு சொல்றாங்க ..நீ வந்துரு ரியா மா ..உன்னை பார்க்காம"
அவள் அழுகை ரியாவின் உயிர் வரை சிதறியது.
அவள் அழுதுகொண்டே கிளம்புகையில் செய்தி கேட்டு கௌதம் வந்திருந்தான். தன் தோழியை அனைத்து ஆறுதல் படுத்தினான்.
“இங்க பாரு ரியா அங்கிளுக்கு ஒன்னுமில்ல..சோ அழுது பிதற்றி வைக்காதே ..தைரியமா இரு .. உனக்கு டிக்கெட் கிடைக்குமா னு தெரியவில்லை ..நீ முதல போ ..நான் உடனே கிளம்பி வரேன்"
அவளை ஏர்போர்ட் அழைத்து வரும் வழியில் எல்லாம் அவளை தேற்றிய படியே வந்தான் கௌதம். தன் தகப்பன் இறந்தபோது சாமுவேல் செய்த உதவி அனைத்தும் வந்து போக தனக்கு வந்த வலியை பூ போல் இருக்கும் தன் தோழி தாங்குவாளா கடவுளே அவன் மனதிற்குள் வலியை புதைத்து விட்டு மிக தைரியமாகவே பேசினான்.
ஏர்போர்ட் ல் அவளுக்கு டிக்கெட் கிடைக்காது அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான் கௌதம்.அந்த விமான ஊழிய பெண்ணோ இன்னும் இரு நாட்களுக்கு ஃப்ளைட் இல்லை எனவும் க்யூபெக் லிருந்து செல்ல முயலுமாறு அறிவுறுத்தினாள்.
கௌதம் தன் தோழியின் நிலையை விவரிக்கவும் அங்கே நின்றிருந்த ஒரு இளைஞனை கைகாட்டி அவர் வேண்டுமானால் உங்களுக்கு உதவக் கூடும் என்றாள். ஒரு வேளை அவன் டிக்கெட் ஐ கேன்சல் செய்தால் ரியா பயணிக்கலாம் அவள் கை காட்டிய திசையில் செல்போனில் பேசியபடி நின்றிருந்தான் டேனியல்.