அத்தியாயம் 8

Nilaprakash

Administrator
Staff member

ராஜ்ஜியம் - 8​

அந்த டைனிங் ஹால் சமையலறையிலிருந்து தெரியும் வண்ணம் நடுவில் அழகாகச் சுவரில் இருத் தூண்கள் பிரித்து இடைவெளி விட்டு அதன் பக்கவாட்டில் தண்ணீர் நிரப்பிய குழாய் போன்ற ஒளிவிளக்கு எரியும் வண்ணம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்க மாலினி தோசை ஊற்றுவதை பார்த்துக் கொண்டே வில்லியம் சமிக்ஞை செய்து சூர்யாவை கேட்டான்.​

“ஏன்டா இந்த டைனோசர் வாயனை எப்படிடா சமாளிச்ச மாலும்மாவுக்கு எதுவும் தெரியாம சமாளிச்சுட்டீயா ?” வில்லியமின் கேள்விக்குச் சூர்யா தோசையை பிய்த்து வாயில் இட்டுக் கொண்டே டிவியை ஆன் செய்ய இருவரும் திரையில் தெரிந்த அபுவைக் கண்டதும் விஷ்ணுவுக்கு வாயில் இருந்த இட்லி புரை ஏறப் பலமாக இருமத் தொடங்கினான். வில்லியம் அபுவை முதுகு முதுகாக அடிக்க அது எதுவும் உரைக்காது அபு இன்னும் ரெண்டு இட்லிகளைப் பிய்த்து உண்ணத் தொடங்கினான். விஷ்ணுவின் இருமல் சத்தம் கேட்டுத் தண்ணீருடன் வந்து அவனது தலையைத் தட்டினார் மாலினி.​

“ஏன்டா மெதுவா சாப்பிட மாட்டீயா? ஆமா எதுக்குடா இப்படி கண்ணை உருட்டி ஜாடை செஞ்சு பேசிக்கறீங்க.? அந்த வீடியோவை எடுத்ததே நான் தான் “மாலினி சொல்லி விட்டுச் செல்ல விஷ்ணு முனகினான்.​

“டைனோசர் வாயன் இங்கேயும் முட்டை போட்டுட்டானா “இதைக் கேட்டதும் அபு அவனை டேபிளின் கீழிருந்து காலால் எட்டி உதைக்க மேஜையில் இருந்த சட்னி கிண்ணம் தள்ளாட மாலினி கோபத்துடனே வந்து தோசையை தட்டில் இட்டுச் சத்தம் போட்டார்.​

“ஏழு கழுதை வயசாச்சு இன்னும் அடிச்சுகுதுக பாரு. ஏன்டா அபு உன் பையன் உன் உசரத்துக்கு வந்துட்டான். இன்னும் அடிச்சுட்டு விளையாடுறீங்க ”​

“மாலும்மா நான் ஒரு பேச்சிலர் இப்படி தப்பு தப்பா பேசாதீங்க ”அபு அவனது வயதைச் சொன்னதால் கோபமாக​

“இப்படி சொல்லித் தான் சமீகிட்ட அடி வாங்கிட்டு வந்தீயா ?” மாலினி கேட்கவும் அனைவரும் சிரித்தனர். அவர்களுடன் உணவு உண்ண அமர்ந்த மாலினி மெல்ல பேச்சைத் தொடங்கினார்.​

“ஏன்டா அபு பசங்களுக்கே பதிமூணு வயசாகப் போகுது நீங்க மூணு பேரும் எப்ப தான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கீங்க ?”​

“மாலும்மா நான் இன்னும் ரெண்டு வாரத்தில பொண்ணு பார்க்கப் போறேன் இந்த அனுமார் பக்தனுகளோட என்னைச் சேர்க்காதீங்க… ” வில்லியம் சொல்ல​

“விழறது படுகுழி இதில பெருமை பாத்தியா இவனுக்கு ”அபு சொல்லவும் வில்லியம் அவனை முறைத்து சொன்னான்.​

“அந்தக் குழில இருபது வயசிலேயே குதிச்சவன் தான்டா நீ” உடனே அபு அவன் சட்டையைப் பிடித்து உணர்ச்சிவசப்பட்டவன் போல் நடித்துப் பேசினான்.​

“நான் சொல்றது உண்மை கோபால் உண்மை என்னை நம்புங்க சரோஜா தேவி குரலில் அவன் பேசி வில்லியமை அணைக்கப் போக வில்லியம் அபுவை முகம் சுளித்து தள்ளி விட்டான். மாலினி அவர்களைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டார்.​

“உங்களுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வைச்சா ‌வர்றவ தான் எங்கள தொடப்பக்கட்டைல அடிப்பா என்னமோ பண்ணித் தொலைங்க எனக்கு வெளிய போற வேலை இருக்கு ”மாலினி அரை மணி நேரத்தில் வெளியே கிளம்பவும் ஹாலில் அமர்ந்து நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்.​

“குட்லைவ் ப்ராபர்டி டெவலப்பர்ஸ் சீனியர் சிட்டிசன்ஸ் வில்லா கட்டறதுக்கு ப்ளான் பண்ணி ப்ரோபோசல் கேட்ருக்கானுக “வில்லியம் கூறவும் சூர்யா புருவம் உயர்த்தி கேட்டான்.​

“யாரு கார்ப்பரேட் காரனுகளா அவனுக ஃவோர்ல்ட் டிரேடு சென்டர்ல ஏ கிரேடு வாங்கினவனுகடா நீங்க ட்ரை பண்ண போறீங்களா ?”​

“ஆமாடா மச்சான் விஷ்ணுவும் நானும் செஞ்ச டிசைன் இம்ப்ரஸ் பண்ணிருக்கு ”​

“அப்ப நம்ம சைடு முதலீடு தேவையில்லையா மச்சான் லாபம் எப்படி “அபுவின் கேள்விக்கு விஷ்ணு பதிலளித்தான்.​

“பணத்திலேயே இரு நானூறு கோடி ப்ராஜக்ட் நூறு இன்டுஜ்வல் வில்லாஸ் சக்சஸ் பண்ணா தனி சாம்ராஜ்யம்டா ‌ அவனுகளோட டை அப்கம்பனி ஆர் பார்ட்னர்ஸ் ஆகலாம் சௌத் சைடு பெரிய கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் கிடைக்கும் “​

“ஏன்டா அவனுக முதலை வாயனுக நம்மள முழுங்கி ஏப்பம் விடமாட்டானுகளா “மீண்டும் அபு சந்தேகமாகக் கேட்கவும் வில்லியம் பதிலளித்தான்.​

“அப்படி இல்ல மச்சான் நமக்குத் தேவை குளோபல் எக்ஸ்போசர் அவனுகளுக்கு தேவை இன்னோவேசன் திறமை பார்ட்னர்சிப் பேசுவோம்.”​

“நம்மள ஏமாத்திட மாட்டானுகளா?”​

“அதுக்கு தான் நம்ம சிங்கம் சூர்யா இருக்கானே லீகலா எதுனாலும் பார்த்துப்பான்.” விஷ்ணுவின் பேச்சுக்குச் சூர்யா புருவ முடிச்சுகள் அவிழாதே பதில் சொன்னான்.​

“மச்சான் நான் பேப்பர் ஃவொர்க் பார்த்துக்கறேன் அக்கவுன்ட்ஸ் டீலிங் அபு பார்த்துக்குவான் இறங்குவோம் மச்சான் ”​

“நானூறு கோடி ப்ராஜக்ட்டா கொஞ்சம் சிலிப்பானாலும் தெருவில நிறுத்திறுவானுக பார்த்துக்குங்க “​

“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம் நீ ஒரு வாரமா ஹால்ல தூங்குறீயாமே.? தங்கச்ச கிட்ட என்ன பிரச்சினை உனக்கு?” விஷ்ணுவின் கேள்விக்கு அபு மழுப்பலாகவே பதிலளித்தான்.​

“அது சும்மா ஊடல்டா இன்னைக்கே சமாதானம் ஆயிடுவா. ”​

“எப்படியோ கால்ல விழுந்து கதறி அழுது. சமாதானமாகப் போற ”வில்லியம் நக்கலாகக் கேட்கவும் அபு மீண்டும் ஆரம்பித்தான்.​

“இதுக்கு தான் கோபால் சொல்றேன் கல்யாணம் வேணாம்னு” சரோஜா தேவி குரலில் அபு மீண்டும் வில்லியமை அணைக்கப் போக வில்லியம் அவனைத் தள்ளி விட்டு உதைத்து சண்டையிட்டான். தனது கைப்பையை மறந்து விட்டுத் திரும்ப எடுக்க வந்த மாலினி தலையில் அடித்துக் கொண்டார்.​

“திருந்தவே மாட்டீங்களாடா “அவர் சென்றதும் குபீர் சிரிப்பு அந்த அறையை நிரப்பியது.​

மாலினி லிஃப்ட் ல் இறங்குகையில் முகம் முழுவதும் புன்னகையோடு இருந்த அவரது மகனின் முகம் நினைவில் இருந்தது. அவனது சதுரமும் இல்லாது சிறிதே நீளமான முகத்தில் அழகிய மீசையும் சிறிது அடர்ந்த தாடியை ட்ரிம் செய்து சிறு கீற்று புன்னகையில் எவ்வளவு வசீகரம் ஆனால் அவ்வளவு எளிதில் புன்னகைத்து விடமாட்டான். அழவும் மாட்டான் இன்பமோ துன்பமோ எதுவாகிலும் அவன் அதை வெளிப்படுத்தி அதிகம் பார்த்தது இல்லை அவர். நண்பர்களிடம் மட்டும் அவனது தனிமை எல்லைகள் வேறுபடும், அவர்களுக்கே அவன் அதிகம் புதிர் தான். மாலினி பெருமூச்செறிந்தார்.​

'எந்த மகராசி இவனைச் சிரிக்கவும் அழவும் வைக்க வருவாளோ ?'​

அவர் எண்ண ஓட்டங்களை லிஃப்ட் நின்று நிறுத்தியது. கீழ் தளத்தில் நின்றிருந்த தனது காரை எடுத்துக் கொண்டு பயணமானார் மாலினி. சூர்யா தன் நண்பர்களை அனுப்பி விட்டுக் கணினி யில் குட்லைஃப் நிறுவனம்பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினான். அன்று அவனது வழக்குகளைப் பற்றி அவனது ஜுனியர்களிடம் தகவல் தெரிவிக்கப் பணித்து விட்டு அமர்ந்திருந்தான். அதே சமயம் சென்னையில் உள்ள ஒரு பெரிய மாலில் தன் பால்ய சிநேகிதி ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தார் மாலினி. அந்த மாலின் ஒரு சூப்பர் மார்க்கெட்டை நிர்வகித்துக் கொண்டு இருந்தார். அவரது தோழி தேவகி. தன் தோழியைக் கண்டதும் முகம் முழுவதும் புன்னகையுடன் வரவேற்றார் தேவகி.​

“மாலி வாட் எ சர்ப்ரைஸ் எப்ப வந்தே?” தன் தோழியை அணைத்துக் கொண்டு புன்முறுவல் பூத்தவராக அங்கே இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார் மாலினி.​

“நேத்து நைட் தேவ் உனக்குக் கால் பண்ணலாம் னு நெனைச்சேன் சர்ப்ரைஸ் ஆ இருக்கட்டுமே னு தான் வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க சஞ்சனா எப்படி இருக்கா?”​

“யாவரும் நலம் டி பேத்தி பிறந்திருக்கா யுகே போய்ட்டு பார்த்துவிட்டு வந்துட்டேன் சூர்யா எப்படி இருக்கான் “​

“அந்தத் தென்னை மரத்துக்கு என்ன நெடுநெடுனு நல்லா வளர்ந்து மட்டும் இருக்கு” மாலினியின் தேவகி சிரிப்புடன் மறுகேள்வி கேட்டார்.​

“அவன் இன்னுமா கல்யாணம் வேணாமுங்கிறான்.”​

“நானும் என் அண்ணிகளை விட்டு எல்லாம் பேசிப் பார்த்துட்டேன் ம்கூம் மசிய மாட்டேங்கறான் தேவ் நான் வேணா எதாவது சைக்யாரிடிஸ்ட்டா அவனைக் கூட்டிட்டு போகட்டா ”​

“மாலி லூசா நீ அவனுக்கு வயசு முப்பத்திரண்டு தான் அவனுக்குப் பிடிச்ச மாதிரி பொண்ணை முதல்ல தேடுவோம் ”அவர் பேசிக் கொண்டு இருக்கும் போதே பணிப்பெண் ஒருத்தி ஸ்டாக் லிஸ்ட் பற்றிச் சந்தேகம் கேட்க​

“கொஞ்சம் வெய்ட் பண்ணு மாலி வந்திடறேன்”​

“நீ பாரு தேவ் நானும் கொஞ்சம் க்ராசரிஸ் வாங்கனும் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன் “​

“நார்த் இண்டியன் ஐடிடம்ஸ் எல்லாம் அந்தப் பக்கம் இருக்கு ப்ரான் க்ராப் சீ ஃபுட்ஸ் எல்லாம் லெஃப்ட் சைடு போ “​

தன் தோழிக்கு வழி சொல்லி விட்டுத் தேவகி நடக்க அந்த ட்ராலியை தள்ளிக் கொண்டு மெல்ல ரேக்குகளில் இருந்த பொருட்களைப் பார்வையால் அளவிட்டப்படி நடந்த மாலினியின் மனதில் பல கேள்விகள் எழுந்தது.​

'சூர்யாவுக்கு பிடிச்ச மாதிரிப் பெண் என்றால் நீண்ட கேசம் கோதுமை நிறம் பிடிக்கும் அவனுக்கு '​

அவர் எண்ணிக் கொண்டு இருக்கையிலேயே அவரது எண்ண ஓட்டத்தை அச்சில் ஊற்றி எடுத்தாற் போல் தனது நீண்ட பின்னலிட்ட கூந்தலை தரையில் படச் சற்று மண்டியிட்டாற் போல் குனிந்து ஒரு சிறுவனிடம் ஏதோ எச்சரித்துக் கொண்டு இருந்தாள் பெண்ணொருத்தி. மாலினி அவளது முகத்தை எட்டிப் பார்க்க நேர்வகிடு எடுத்துக் கொஞ்சம் பெரிதான கண்களில் மை இட்டு அதன்கீழ் சிறிதிலும் பெரிதிலும் இல்லாத மூக்கில் சின்னதாக மூக்குத்தி நன்றாகத் தான் இருந்திருக்கும் இதழ்கள் மெல்லியதாக இருக்க எவரது கண்களையும் மீண்டும் ஒரு முறை தீண்டத் தூண்டும் அழகில் மிளிர்ந்தாள் அவள்.​

காற்றில் கொடி அசைவதும்​

நடையில் அவள் இடை அசைவதும்​

நளினத்திற்கு இயற்கை எழுதிய​

இரு வேறு விளக்கங்கள்!!​

 
Back
Top