ராஜ்ஜியம்- 9
வெந்தய நிற காட்டன் புடவையில் அவளின் சேலை மடிப்பு அழகு கண்டு ஒரு முறை மாலினிக்கே சேலைக் கட்டும் ஆசை வந்து போனது. மாலினி தன்னுடைய காட்டன் டாப்ஸ் ஜீன்ஸ் ஐ பெருமூச்சுடன் பார்த்துக் கொணாடார்.அவள் அந்தச் சிறுவனை முத்தமிட்டு விட்டு வேறு திசை நடக்க மாலினி அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தார்.அழகிய சிலை ஒன்று எழுந்து நடந்து செல்லும் வடிவம்போல் இருந்தது அக்காட்சி.
“ஏ மாலி சீ ஃபுட் புதுசா வந்திருக்கு பாரு “தேவகி சற்று தூரத்தில் சைகை காட்டி விட்டுச் செல்ல மாலினி அதை நோக்கி நடக்கையில் தான் பார்த்தார். அந்தச் சிறுவன் சிறு சிறு பொருட்களை யாரும் அறியாத வண்ணம் தன் ஆடையில் எடுத்துப் போட்டுக் கொண்டு இருந்தான். முக்கியமாக, அந்த ஸ்டிக்கர் இல்லாத வகையில் பிய்த்து எடுத்துப் போட்டுக் கொண்டு இருந்தான். மாலினிக்கு அந்தப் பெண்ணைத் தவறாக நினைக்க மனம் ஒப்பவில்லை. ஆனாலும், அவள் அந்த ஸ்டிக்கரைத் தானே அவனுக்குக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தாள். தனக்கு வேண்டிய மளிகை பொருட்கள் அனைத்தையும் வாங்கி முடித்து அவர் பில்லிங் நோக்கி வருகையில் மீண்டும் அவர்களைப் பார்த்தார்.
அந்தச் சிறுவன் அனைத்து பொருட்களையும் சுவருக்கு ஒதுக்கு புறமாக நின்றிருந்த அவளது கையில் ஒவ்வொன்றாகக் கொடுக்க மாலினிக்கே கோபம் வந்தது. மாலினியின் கோபம் தாண்டி அந்த இளம்பெண் என்ன தான் செய்யப் போகிறாள் என்ற ஆர்வம் மேலோங்க அவள் தவறானவள் இல்லை என்பதை அப்போதும் எடுத்துரைக்கும் அந்த அப்பழுக்கற்ற கண்களை உற்று நோக்கியபடி அவர்கள் பாராதவாறு நின்றிருந்தார். அவள் சைகை மொழியில் அவனிடம் பேசிக் கொண்டு இருந்தாள். மாலினிக்கு அந்தச் சிறுவன் முகம் காண்கையில் மனதிற்குள் மெலிதான வலி பரவியது.
'எவ்வளவு அழகான சிறுவன் வாய்பேச முடியாதா இவனுக்கு இவனைப் பயன்படுத்தி இந்தப் பெண் ச்சே ச்சே இருக்காது 'அவரது கண்கள் அந்த இளம்பெண்ணின் கைகளில் இருந்த பொருட்களை அளந்தன.
க்ரேயான்ஸ், மோதிரம், பென்சில, சாக்லேட், எனச் சிறிதானக் கண்ணைக் கவரும் எந்தப் பொருளையும் அவன் விடவில்லை. இதோடு இந்தப் பெண்ணும் சிறுவனும் பிடிப்பட்டால் அவரது எண்ணத்தைப் படித்தது போல் அந்தச் சிறுவன் இளம்பெண் இருவரின் பின்னும் தேவகி நின்றிருந்தார். மாலினிக்கு நடக்கப் போகும் விபரீதத்தைக் காணும் தைரியமில்லை. தேவகியிடம் சிபாரிசு செய்து அந்த இளம்பெண்ணை ஒன்றும் செய்யாதேயெனச் சொல்லாமா.? பார்த்துப் பத்து நிமிடங்கள் கூட ஆகாத அந்த இளம்பெண்ணின் மீது இனம் புரியாத பாசம் உருவாகியிருந்த தனது மனதை நினைத்து அவருக்குக் குழம்புவதா அவளைக் காப்பாற்றுவதா எனத் திடுக்கிட்டு நிற்கையில் தேவகி பேசினார்.
“மதி பையன் என்ன சொல்றான் ?” தேவகிக்கு தெரிந்த பெண்ணா இவள் என்ன நடக்கிறது இங்கே? மாலினிக்கு அவர்களின் பேச்சு மர்ம திரைப்படத்தின் இடைவேளி போல் சுவாரஸ்யம் கூட்டியது.
“ஒண்ணுமில்ல மேம் சிசிடிவி ரெக்கார்டிங் பார்த்தா ரெடி ஆகிருவான்" இருவரும் அவனைக் கூட்டிக் கொண்டு சிசிடிவி காட்சிகளைக் காண்பிக்க அந்தச் சிறுவனின் கண்களில் அச்சத்தில் வெளிறியது.
அந்த இளம்பெண் மீண்டும் சைகை மொழியில் அவனிடம் பேச அவன் கண்களில் நீருடன் அவளைக் கட்டிக் கொண்டான். மதி தேவகியை நோக்கிக் கைகூப்பி நன்றி சொன்னாள்.
“ரொம்ப நன்றிங்க மேடம் ”
“மதி நீ பண்ற சேவைக்கு நான் பண்றது எல்லாம் சும்மா இவ்ளோ சின்ன வயசில எவ்ளோ உதவிகளைச் செஞ்சுட்டு சர்வ சாதாரணமாகக் கடந்து போற உன்னோட கம்பேர் பண்ணா நாங்க எல்லாம் ரொம்ப ரொம்ப சராசரி மனுசங்க உனக்கு என்ன உதவினாலும் என்னைக் கூப்பிடு யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம் “
“அவ்ளோ பெரிய மனுசி எல்லாம் இல்லை மேடம் நான் சக மனுசனுக்கு முடிஞ்ச உதவியைச் செய்ய முடியும் போதே செஞ்சுடனும் அவ்ளோ தான் ”
“உண்மை தான் மதி இது இந்த மாச கலெக்சன் பாக்ஸ் எடுத்துட்டு போயிடு"
பணம் கட்டும் இடத்தில் இருந்த அன்பு இல்லம் என்று ஒட்டிய ஸ்டிக்கரில் இருந்த பணத்தை எடுத்துத் தனது கைப்பையில் இருந்த ரசீது நோட்டில் குறித்துக் கொண்டு அவரிடம் நன்றி தெரிவித்து சென்றாள் மதி. அவர்கள் பேசி முடித்துக் கலைந்து சென்றதும் மாலினி தேவகியிடம் வந்தார்.
“தேவ் யாரிந்த பெண்.? அவளை உனக்குத் தெரியுமா.? யாரந்த பையன் அவனுக்கு வாய் பேச முடியாதா.? அவன் அவன் திருடினானா.? அன்பு இல்லம்னா தொண்டு நிறுவனமா?”
“மாலி போதும் போதும் மெதுவா கேளு மூச்சு வாங்குது பாரு ”
“சொல்லு தேவ் சஸ்பென்ஸ் தாங்கல எனக்கு ”மாலினி தனது தோழியின் ஆர்வத்தைக் கண்டு புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தார்.
“மாலி அந்தப் பொண்ணு பேர் அன்புமதி பேருக்கு ஏத்த மாதிரியே அப்படியொரு அன்பு மொத்த மனுசங்க மேல் என் ப்ரண்ட் பையனுக்கு டீச் பண்ற ஸ்பெசல் நீடு கிட்ஸ் டீச்சர் அவ அன்பு இல்லம்னு ஆர்பனேஜ் ஓல்ட் ஏஜ் ஹோம் நடத்தற தொண்டு நிறுவனத்துக்குச் சேவை பண்றா அவளைப் பார்த்தா நாம எல்லாம் எவ்ளோ பெரிய சுயநலவாதிங்கனு தோண வைச்சுருவா, அந்தப் பையன் அவளோட ஸ்டூடன்ட் கிளிப்டோமேனியா இயர்லி ஸ்டேஜ் பிகேவியர் தெரபில திருடும்போது எப்படி சிக்குவாங்கனு காண்பிச்சா அவமானப்படுவோம்னு தெரிஞ்சா அந்தப் பயம் அவனைத் திருட விடாது அதான் என்கிட்ட சொல்லிட்டு அவனைக் கூட்டிட்டு வந்தா"
“அவளுக்கு எத்தனை வயசு தேவ்?"
தன் தோழியின் கேள்விக்குப் பின்னிருக்கும் அர்த்தத்தைப் புரிந்தவளாகக் கலகல வெனச் சிரித்தார் தேவகி.
“ மஞ்ச காமாலை வந்தவனுக்கு பார்க்கிறது எல்லாம் மஞ்சளா தெரியற மாதிரி பார்க்கிற பொண்ணு எல்லாம் கல்யாணப் பொண்ணா தெரியுதா உனக்குச் சூர்யாவோட மென்டாலிட்டிக்கு இந்தப் பொண்ணு சரி வருவாளானு தெரியலை மாலி. அவளுக்கு முதல கல்யாணத்தில விருப்பமிருக்கானே தெரியலை விசாரிச்சு சொல்றேன். ”
அவரது சந்தேகமான பதிலில் சிறிது முகவாட்டம் அடைந்த மாலினியைக் கண்டதும் தேவகி அவரது கரங்களைப் பற்றிச் சொன்னார்.
“மாலி கல்யாணம் கடவுள் எழுதிய பந்தம் எப்படியோ எங்கேயோ எவர் மூலமாகவோ ரெண்டு மனசை அழகா இணைக்கும் எழுத்து, நடக்கும் மாலி உன் நல்ல மனசுக்கு மதி மாதிரி ஒரு மருமக வரணும்னு கடவுள் எழுதியிருக்கனும்னு நானும் பிரார்த்தனை பண்றேன். ”
தன் தோழியின் ஆறுதல் வார்த்தைகளில் முகம் மலர்ந்தவராக மாலினி தான் வாங்கிய பொருட்களோடு வீட்டிற்கு புறப்பட்டார். வீட்டை அடைந்ததும் கணினியின் முன் அமர்ந்து இருந்த தன் மகனின் தலை கோதி அருகில் அமர்ந்தார் மாலினி.
“மோனு இன்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்தேன்டா ”
“மா ஆரம்பிச்சுட்டீங்களா ?”
“முழுசா கேளுடா நீ சொன்ன மாதிரி நீளமான முடி அதை அழகா நேர்வகிடு எடுத்துப் பின்னியிருந்தா, கொஞ்சம் குண்டுக் கன்னம் அதில சிரிச்சா ஒரு குழி விழக் காட்டன் சேலைல அவ்வளவு அழகா இருந்தாடா அவளைப் பார்த்ததும் இப்படியொரு பொண்ணு தான் உனக்குக் கல்யாணப் பொண்ணா அமையனும்னு தோணுச்சு “
சூர்யாவுக்கு இதயம் சற்று வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. தான் பார்த்த அந்தப் பெயர் அறியாத தாய் நேரில் கண்டவர்போல் விவரிக்க ஒரு வேளை அவளாக இருக்க கூடுமா? இரண்டு கோடி பேர் வாழும் சென்னையில் இப்படியொரு தற்செயல் நிகழ்வு நடக்கத் தான் கூடுமா ?
“அவளே பொண்ணா வந்தா கண்டிப்பா கட்டிக்கறேன் சரியா இப்ப கிளம்புங்க “தன்னையும் மீறி வந்த அந்த வார்த்தைகளைத் தன் தாயுடன் சேர்ந்து அவனும் நம்ப முடியாது திகைத்தான்.
சூர்யா பெயர் அறியாத அவளின் நினைவு தன்னை இப்படி பாதிப்பதை நினைத்துத் திகைத்து நிற்க முதன்முதலில் தன் மகனிடம் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற வார்த்தைகளைக் கேட்ட மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் தான் போனார் மாலினி. அவர் மனதில் மதி ஒரு அதிர்ஷ்ட தேவதை ஆகவே காட்சி தந்தாள். மாலினி சந்தோசமாகச் சமைக்கச் செல்ல அவரது மகன் குழப்ப மனநிலையில் கணினியை மூடி வைத்து அமர்ந்தான். அன்றைய நாள் முழுவதும் அவனது மனச் சலனம் தீரவே இல்லை. உண்மையில் தன் தாயை சமாதானம் செய்ய வெளிவந்த வார்த்தைகளா இல்லை அவளை நினைத்ததும் நெஞ்சுக்குள் உதித்த வார்த்தைகளா அவன் குழம்பி இறுதியில் தனது தாயின் ஆசைக்கு உதிர்த்த வார்த்தைகளேயென முடிவெடுத்தான். மனதின் தேடல்களுக்குச் செய்யும் பொய் சமாதானங்கள் காதலின் முதல் அத்தியாயங்கள். அதை அவன் வாழ்வில் எழுதத் தொடங்கியிருந்தாள் மதி.
முதல் அத்தியாயம் ஆனால் என்ன முப்பதாவது அத்தியாயம் ஆனால் என்ன காதல் யுத்தங்களும் முத்தங்களும் நிறைந்த சுவாரஸ்யப் போர்க்களம். அது தரும் இன்ப அவஸ்த்தைகள் வலி என்றாலும் வேண்டும் எனக் கூற வைக்கும் மாயாஜாலம் அபு முப்பதாவது அத்தியாயத்திலும் மக்கு மாணவனாகவே தன் வீட்டு வாசலில் நின்றிருந்தான். இதற்கு முன் அபு சமீயை விட்டுத் தனியே வெளியில் தங்கியதே இல்லை.
சென்னை வந்து ஒரு மாதம் நண்பர்களுடன் தங்கியிருக்கையிலேயே தினமும் அவள் அழுகை தாளாது அப்போதே வீடு வாடகை பார்த்து அவளைக் கூட்டி வந்து விட்டான். அது முதல் அவர்கள் பிரிந்து இருந்ததே இல்லை.
நேற்று அவளது கோபச் சண்டை அதுவுமாகப் பிரிந்து இருந்து விட்டான். சிறு முத்தம் எத்தகைய ஊடலையும் மறைய வைக்கும் மந்திரம். ஆனால் அருகில் போக அனுமதிப்பாளா அவள்??? அபு தீவிர சிந்தனையில் நின்றிருக்க அவனது அருகில் வந்து நின்றாள் நவநாகரீக பெண் ஒருத்தி. அபு நிமிர்ந்து பார்க்க நல்ல உயரம் உதட்டில் மெல்லிய சிவப்பு சாயம் கோதுமை நிறம் அந்தக் கண்களில் தெரிந்த திமிர் தான் அழகு என்பதற்கான திமிராகத் தோன்றவில்லை. அவனுக்குச் சுயமதிப்பீட்டில் தனக்குத் தானே நூற்றுக்கு ஆயிரம் மதிப்பெண் நிச்சயம் கொடுத்திருப்பாள் போலும் அவனது அளவீட்டு பார்வையை அலட்சியம் செய்த அவளது கண்கள் அவனை நகரு என்பது போல் பார்க்க ஆணைக்கு இணங்கிய சேவகன் போல் நகர்ந்து நின்றான் அபு. அவள் தன்னுடைய நம்பர் லாக்கை திறந்து உள்ளே போகையில் தான் அந்தப் பெயர் பலகையைக் கவனித்தான் அபுபக்கர். அறிவுமதி எம்பிஏ ப்னினான்சு டைரக்டர் குட்லைப் குழப்பத்தில் எதிர்த்த ஃப்ளாட் கதவைத் தட்ட நின்றுக் கொண்டு இருந்த தன் தந்தையையும் அவனை மண்ணுக்கு கூட மதிக்காது கடந்து போன அந்தப் பெண்ணையும் கண்டு படிகளில் நின்றிருந்த சமீருக்கும் அமீருக்கும் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. வாயைப் பொத்தி சிரிப்பை அடக்கியபடி தங்கள் ப்ளாட்டினுள் நுழைந்தனர். அபு சற்று நேரம் அந்தத் திமிர் பிடித்த பெண்ணின் அலட்சிய பாவத்தில் பேச்சற்று நின்றான்.
'என்ன திமிர் பார்வை.? பணம் அழகு திறமை எல்லாமே இருக்கலாம் அதற்காக இவ்வளவு அலட்சியத் திமிர் இருக்க வேண்டுமா ?' அவன் தனது தவறே அவள் முன் அவமானப்படக் காரணம் என்பதால் அமைதியாகத் தனது ப்ளாட்டிற்குள் நுழைந்தான். அமீர் சமீர் இருவரும் வெளியே நடந்த நகைச்சுவையைத் தங்கள் தாயின் காதில் ஓதி விட்டு நமுட்டுச் சிரிப்புடன் கடந்து சென்றனர்.
உன் உதாசீனங்களின் வலியைப்
பெயரிடப்படாத வகையிலேயே எழுதுகிறேன்
சட்டென்று கடந்து விட முடியா
சில யுக ரணங்கள் அவை
ஆற்றிக்கொள்ள அதற்கொரு விதி என்கிறாய்
வடுக்களின் சுவடின்றி காயங்களை ஆற்ற
வகையேதும் உண்டோ அருள்வாய் நெஞ்சே!!!