ஆய்வு 3 , 4

Nilaprakash

Administrator
Staff member
ஆய்வு மூன்று
மருத்துவர் : நீங்கள் இப்போது உங்கள் உடலை விட்டு வெளியேறுகிறீர்கள். நீங்க இறந்த இடத்தில் இருந்து மேலே செல்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் என்ன அனுபவத்தை பெறுகிறீர்கள் என்பதை எனக்கு சொல்லுங்கள் ?
ஆய்வு நபர் 3: முதலில் இது மிகுந்த வெளிச்சமாக இருக்கிறது. உலகத்துக்கு வெகு அருகில் இருக்கிறது. இப்பொழுது கொஞ்சம் இருள் பரவுகிறது. நான் சுரங்கப்பாதைக்குள் செல்கிறேன்.
மருத்துவர் மைக்கேல் நியூட்டன் : அந்த சுரங்க பாதையை எனக்கு விவரியுங்கள்.
ஆய்வு நபர் 3 : இது உள்ளே ஒன்றும் இல்லாத வெளிச்சமில்லாத பாதை. ஒரு சிறிய வெளிச்சம் இந்த சுரங்கப்பாதையின் முடிவில் தெரிகிறது.
டாக்டர் மைக்கேல் நியூட்டன் : சரி அதன் பிறகு உங்களுக்கு என்ன நடக்கிறது?
ஆய்வு நபர் 3 : என்னை யாரோ இழுப்பது போல் மெதுவாக இழுப்பது போல் உணர்கிறேன். நான் இந்த பாதை வழியாக மிதந்து செல்ல வேண்டும் என நினைக்கிறேன். இப்பொழுது இருள் குறைந்து வெளிச்சம் பரவுகிறது. அந்த வெளிச்சம் எனை நோக்கி பரவுகிறது. அது எப்படி என்றால்..
மருத்துவர் N: ம்..சொல்லுங்கள்
ஆய்வு நபர் 3 : அது என்னை அழைக்கிறது.
மருத்துவர் N : சரி அந்த வெளிச்சத்தை உங்களைச் சுற்றி பரவி இருப்பதை அனுமதியுங்கள். இப்பொழுது தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதை தெரிவியுங்கள். ஆய்வு நபர் 3 : அந்த வெளிச்சம் என்னை சுற்றி பரவி நான் இப்பொழுது சுரங்கப்பாதையில் இருந்து வெளிவந்து விட்டேன். எங்கும் மேகத்தைப் போல வெளிச்சத்திரள் இருக்கிறது. நான் அதை கடந்து செல்கிறேன்.
மருத்துவர் N : இந்த சுரங்கப் பாதையை கடந்து வெளி வருகையில் வேறு எதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரிகிறது?
ஆய்வு நபர் 3 : இது மிகவும் அமைதியான இடமாக இருக்கிறது. நான் ஆன்மாக்களின் இருப்பிடத்தில் இருக்கிறேன்.
மருத்துவர் N : ஒரு ஆன்மாவாக இதைத்தவிர உங்களிடம் வேறு ஏதாவது தாக்கத்தை உண்டாக்குகிறதா?
ஆய்வு நபர் 3 : ஆம்.. எண்ணங்கள் எண்ணங்களின் சக்தியை நான் உணர்கிறேன். என்னை சுற்றி‌ அது நிரம்பி இருக்கிறது.
மருத்துவர் N : சரி சிறிது தளர்வாகுங்கள். உங்களை ஆசிவாசப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை உங்கள் உணர்வுகள் உங்களுக்கு பிரதிபலிக்க அனுமதியுங்கள். இப்போது சொல்லுங்கள்.
ஆய்வு நபர் 3 : இந்த சூழலை வார்த்தைகளில் உருவகப்படுத்துவது கடினம். அன்பு நட்பு புரிதல் இந்த எண்ணங்கள் எல்லாம் சேர்ந்து எனக்காக மற்றவர்கள் எல்லாம் காத்திருப்பது போல் உணர்த்துகிறது
மருத்துவர் N : நீங்கள் பாதுகாப்பாக உணர்கிறீர்களா இல்லை உங்களுக்கு அச்ச உணர்வு இருக்கிறதா?
ஆய்வு நபர் 3 : எனக்கு அச்சம் எல்லாம் இல்லை. அந்த சுரங்கப் பாதைக்குள் செல்லும்போது சிறிது இலக்கற்று பயணித்தேன். இப்பொழுது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். என் எண்ணங்கள் என்னை நான் பாதுகாக்கப்பட்டு இருக்கிறேன்… என் மேல் அக்கறை உள்ளவர்கள் அருகில் இருக்கிறார்கள் என்று உணர்த்துகிறது. இது வித்தியாசமாக இருக்கிறது. நான் யார்? நான் ஏன் இங்கு இருக்கிறேன்? என்பதை பற்றிய புரிதலும் எனக்கு இருக்கிறது.
மருத்துவர் N : அதற்கு ஏதாவது ஆதாரம் அங்கு இருக்கிறதா?
ஆய்வு நபர் 3 : இல்லை. அப்படி எல்லாம் இல்லை. நான் அதை உணர்கிறேன்‌ அவ்வளவு தான்.
மருத்துவர் N : நீங்கள் மேகத்தைப் போன்ற ஏதோ ஒன்று உங்களை சுற்றி இருப்பதாக சொன்னீர்கள். அப்படி என்றால் உலகத்திற்கு மேல் இருக்கிற வானத்தில் இருக்கிறீர்களா?
ஆய்வு நபர் 3 : இல்லை அப்படியெல்லாம் இல்லை. நான் அந்த மேகத்தினுள் மிதக்கிறேன். அது உலகத்தில் இருந்து வித்தியாசமாக தெரிகிறது.
மருத்துவர் N : உங்களால் உலகத்தை காண முடிகிறதா? அது உங்களுக்கு கீழ் இருக்கிறதா?
ஆய்வு நபர் 3 : இருக்கலாம். ஆனால் அந்த நீண்ட சுரங்கப் பாதைக்குள் சென்ற பிறகு என்னால் உலகத்தைக் காண முடியவில்லை.
மருத்துவர் N : இன்னும் உலகத்துடன் இணைக்கப்பட்டு இருக்கிறீர்கள் அல்லது வேறொரு உலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற உணர்வு உங்களுக்குள் இருக்கிறதா?
ஆய்வு நபர் 3 : வாய்ப்பிருக்கிறது. என் எண்ணங்களில் உலகம் இன்னும் சமீபமாக தான் இருக்கிறது. நான் இன்னும் உலகத்துடன் தொடர்பில் இருப்பதாகத்தான் உணர்கிறேன். ஆனால் நான் இப்பொழுது இருப்பது வேறு இடம்.
மருத்துவர் N : நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி வேறு என்ன உங்களால் கூற முடியும்?
ஆய்வு நபர் 3 : இங்கே இன்னும் சிறிது இருளாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் இங்கிருந்து நகர்ந்து செல்கிறேன்.
*******
இந்த குறிப்பிட்ட ஆய்வு நபர், இறப்பின் அனுபவம், சுரங்கப்பாதை, அதைத் தொடர்ந்து எழும் அமைதியான மனமாற்றம், தன் உடல் பிரிந்து செல்லும் நிலையை ஏற்றுக் கொள்வது, வேறொரு உலகத்திற்கு இழுத்து செல்லப்படுவது என பல விடயங்களை தெளிவுற வெளிப்படுத்தினார். முதலில் சிறிது உறுதியின்மை தெரிந்தாலும் அவர் முதன்முதலில் வெளிப்படுத்தியது அவர் நன்றாக இருப்பதற்கான தகவலும், தான் அவ்விடத்தில் வரவேற்கப்படுகிறேன் என்ற எண்ணமும் தான். இந்த இரண்டு எண்ணங்களும் நான் சேகரித்த அனைத்து ஆய்வு நபர்களின் பேச்சுக்களிலும் பொதுவாக இருக்கிறது.
அந்த நீண்ட சுரங்கப்பாதையை கடந்த உடனே ஆன்மாக்கள் ஆன்ம உலகின் நுழைவு வாயிலை அடைந்து விடுகிறது. ஆன்மாக்களில் பெரும்பாலானவை அவர்கள் இன்னும் இறக்கவில்லை உலகத்தின் சுமையான உடலை மட்டுமே நீங்கி இருக்கிறோம் என்பதை புரிந்துக் கொள்கிறது. இந்த புரிதலோடு தங்களுக்குள் நிகழும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் நிலை ஆன்மாவுக்கு ஆன்மா வேறுபடுகிறது.
சிகிச்சை அமர்வின் போது சில ஆன்மாக்கள் தங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் ஆச்சரியங்களோடு காண்கையில் சில ஆன்மாக்கள் தங்களைச் சுற்றி இருப்பதை தெளிவாக எனக்கு எடுத்துரைக்கின்றன. இந்த காட்சி விவரிப்பின் போது இவர்கள் அனைவரிடமும் பொதுவாக நான் கண்ட ஒரு சொல்லாடல் “அற்புதம்..நான் என்னுடைய அழகான வீட்டிற்கு வந்து விட்டேன் இது அருமையாக இருக்கிறது” என்பதே.
சில முதிர்ச்சி அடைந்த ஆன்மாக்கள் மிக வேகமாகவே தங்கள் உடலை விட்டு வெளியேறி தங்களுடைய ஆன்ம வீட்டிற்கு சென்று விடுகின்றன. ஆனால் இம்மாதிரியான முதிர்ச்சியடைந்த ஆன்மாக்கள் உலகத்தில் மிக மிக குறைவாகவே காணப்படுகின்றன. ஒரு சராசரி ஆன்மா மிக வேகமாக பயணிப்பதில்லை. சில ஆன்மாக்கள் அந்த சுரங்கப்பாதையில் செல்வதற்கே தயங்குகின்றன. வெகு சில அரிதான பிரச்சனைக்குரிய ஆன்மாக்கள் மட்டுமே உலகத்தில் இன்னும் தான் தங்கியிருக்க வேண்டும் எனப் போராடுகிறது. அவை அனைத்தும் இளம் ஆன்மாக்களாகவும் இந்த உலகத்தோடு இன்னும் தனக்கு தொடர்பிருப்பதாக உணரும் ஆன்மாக்களாகவே இருக்கிறது. என்னிடம் தகவல்களைப் பகிர்ந்துக் கொண்ட பெரும்பாலான ஆய்வு நபர்கள் நீண்ட சுரங்கப்பாதையில் இருந்து வெளிவந்ததும் சிறிது நேரத்திற்கு அங்கு தங்களைச் சுற்றி இருப்பது எதுவும் தெளிவாக இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் செல்வது உலகத்தை தாண்டிய அடர்த்தி மிகுந்த வானியல் மண்டலம். இதுவே இறையியலாளர்களால் காமலோக என்று சொல்லப்படுகிறது. என்னுடைய அடுத்த ஆய்வு நபர் இந்த இடத்தைப் பற்றி விவரிக்கிறார். அவர் இந்த இடத்தின் உருவம் நிறம் அதிர்வு நிலை அனைத்தையும் தெளிவாக தனது பார்வையில் குறிப்பிடுகிறார். பொதுவாக நாம் மனவசிய ஆய்வு செய்வதற்கு உட்படுத்தப்படும் நபர்கள் தங்களை சுற்றியுள்ள சூழலில் மிக பொருந்திப் போன பின்பு இம்மாதிரியான புறத் தோற்றங்களை தெளிவாக விவரிப்பார்கள்.
ஆய்வு நம்பர் 4
மருத்துவர் : அந்த சுரங்க பாதையில் இருந்து வெளிவந்த பின்பு நீங்கள் பார்க்கிற அனைத்தையும் துல்லியமாக என்னிடம் விவரித்து சொல்லுங்கள்.
ஆய்வு நபர் 4 : இங்கிருக்கும் அனைத்து பொருள்களும் அடுக்கடுக்காக இருக்கிறது
மருத்துவர் : அடுக்கடுக்காக என்றால் எந்த வகையில்?
ஆய்வு நபர் 4 : ஒரு கேக்கை போல்..
மருத்துவர் : கேக்கையே ஒரு உருவகமாகக் கொண்டு நீங்கள் காண்பதை தெளிவாக சொல்லுங்கள்.
ஆய்வு நபர் 4 : சில கேக்குகள் மேலே சிறியதாகவும் அடிப்பாகம் பெரியதாகவும் இருப்பது போல இது இருக்கிறது. நான் சுரங்கப் பாதையிலிருந்து வெளிவந்த பிறகு இவ்வாறு இல்லை.. ஆனால் இப்பொழுது அடுக்கடுக்காக ஓளிநிலைகளாகத் தெரிகிறது. இந்த அடுக்குகள் ஒளி ஊடுருவ கூடிய வகையில் உட்புறம் வளைவுகள் உள்ளதாக இருக்கிறது
மருத்துவர் N : நீங்கள் இங்கே காணும் ஆன்ம உலகம் திடப்பொருளால் உருவானதா?
ஆய்வு நபர் 4 : அதைத்தான் கூற வந்தேன். நீங்கள் நினைப்பது போல் இந்த ஆன்ம உலகம் திடப் பொருட்களால் ஆனதல்ல. இது ஒளியின் பல நிலைகளில் அடுக்கடுக்காக நூலிழைகளால் ஆனது. அனைத்தும் சமச்சீரான முறையில் உள்ளது. ஆனால் ஒவ்வொரு அடுக்குகளுக்கும் இடையில் நிறத்திலும் ஒளிவிலகளிலும் வித்தியாசங்கள் உள்ளது. அவை முன்னும் பின்னுமாக மாறிக்கொண்டே இருக்கிறது. நான் உலகத்தில் இருந்து பயணித்தப் போதே இதை கண்டேன்
மருத்துவர் 4 : அது ஏன் அவ்வாறு இருக்கிறது ?
ஆய்வு நபர் 4 : எனக்கு தெரியாது நான் அதை வடிவமைக்கவில்லை.
மருத்துவர் N : உங்கள் விவரிப்பிலிருந்து, ஆன்ம உலகு பல பிரிவுகள் கொண்ட ஒளி அடுக்குகளால் ஆனது என நான் எடுத்துக் கொள்ளலாமா?
ஆய்வு நபர் 4 : ஆம். அப்படித்தான் நான் மிதந்து கடந்துப் போக ஒவ்வொரு அடுக்காக என்னை விட்டு விலகிச் செல்கிறது.
மருத்துவர் N : உங்கள் பார்வையிலிருந்து அந்த அடுக்குகளின் நிறங்களைப் பற்றி கூற முடியுமா?
ஆய்வு நபர் 4 : நான் உங்களிடம் அடுக்குகள் வெவ்வேறு நிறங்களைக் கொண்டதாக சொல்லவில்லை. இங்கே அனைத்துமே வெண்மையின் பல நிறங்களாக இருக்கிறது. சில இடத்தில் வெண்மை நிறம் அதிகமாகவும், நான் சென்ற சில இடங்களில் வெண்மை நிறம் மங்கியும் இருக்கிறது. ஆனால் நான் இப்பொழுது கடக்கும் ஒளி அடுக்கின் நிறம் நான் சுரங்க பாதையில் கண்ட வெளிச்சத்தை விட அதிக வெண்மை நிறத்தில் பிரகாசிக்கிறது.
மருத்துவர் N : நீங்கள் இந்த ஒளி அடுக்குகளை கடந்து செல்கையில் உங்கள் ஆன்மா மேலும் கீழும் எழும்பி பயணிக்கிறதா?
ஆய்வு நபர் 4 : இல்லை நான் அதன் குறுக்கே கடந்து செல்கிறேன்.
மருத்துவர் N : அப்படி என்றால் நீங்கள் இப்பொழுது காணும் ஆன்ம உலகத்தின் பரிணாமம் நீங்கள் கடந்து செல்கையில் நேரான கோடுகளில் கோணங்களில் இருக்கிறதா?
ஆய்வு நபர் 4 : என்னைப் பொறுத்தவரை இது தெளிவான வெண்மையில் வெவ்வேறான அடுக்குகளால் பிரிந்திருக்கும் பொருளற்ற ஆற்றலாகத் தெரிகிறது. ஏதோ ஒன்று என்னை சரியான திசையை நோக்கி ஈர்த்து என்னை ஆறுதல் படுத்த முனைகிறது என நினைக்கிறேன்..
மருத்துவர் N : எந்த வகையில் ?
ஆய்வு நபர் 4 : நான் சத்தங்களை கேட்கிறேன்
மருத்துவர் N : என்ன சத்தங்கள்?
ஆய்வு நபர் 4 : ஒரு இசை.. ஒரு ஃபோர்க் கரண்டியின் ஒலியலை எதிரொலிப்பது போல்‌‌.. காற்று உராய்வது போல்.. என் அசைவுகளோடு பொருந்திய இசையாக அது என்னை மிகவும் ஆற்றுப்ப்படுத்துகிறது.
மருத்துவர் N : மற்ற நபர்கள் இதை ஒரு இசைக்கவையின் அதிர்வுகளோடு பயணிப்பது போல ஒப்பிடுகிறார்கள். நீங்கள் அதை ஒத்துக் கொள்கிறீர்களா? இல்லை மறுக்கிறீர்களா?
ஆய்வு நபர் 4 : அப்படித்தான். (சொல்லும்போது அவர் தலையாட்டுகிறார்) எனக்கு சுவையும் நறுமணமும் நினைவில் இருக்கிறது.
மருத்துவர் 4 : அப்படி என்றால் இறப்பிற்கு பின் நம்முடைய புலன் உணர்வுகள் அப்படியே தான் இருக்குமா?
ஆய்வு நபர் 4 ‌: புலனுணர்வுகளின் நினைவுகள் இன்னுமிருக்கிறது… இந்த இசைக்குறிப்பின் ஒலியலைகள் மிகவும் அழகாக இருக்கிறது. மணி சத்தங்கள்.. மன அமைதி ..
ஆன்ம உலகின் பயணித்த பெரும்பான்மையான ஆய்வு நபர்கள் இசை அதிர்வுகளின் ஆற்றுப்படுத்துதலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். ஒருவர் இறந்த உடனே வெளியேறிய ஆன்மா ஒரு மெல்லிய இசை அதிர்வை உணரத் தொடங்குகிறது. சிலர் அந்த இசையை ரீங்காரமாகவும், சலசலப்பாகவும் இறப்பு நிகழ்ந்த உடனே உணர்கிறார்கள். தொலைபேசி கம்பிகளுக்கு இடையில் ஒருவர் கேட்கும் சத்தத்தை ஒத்திருக்கிறது அது. இந்த உலகத்தை சுற்றியுள்ள மண்டலத்தை விட்டுச் செல்ல செல்ல இதன் அதிர்வுகள் வேறுபடத் தொடங்குகிறது.
ஆன்மாக்கள் அந்த சுரங்கப் பாதையை தாண்டும் போது இந்த ரீங்கார சத்தங்கள் இசை அதிர்வுகளாக தெளிவாகக் கேட்கத் தொடங்குவதாக கூறுகிறார்கள். இந்த இசையை பிரபஞ்சத்தின் சத்தமாக கொள்ளலாம். ஏனென்றால் இது ஆன்மாக்களை புத்துணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. மன வசியத்திற்கு ஆட்படுத்தப்பட்ட ஆய்வு நபர்கள் இந்த இடத்தை ஒளி அடுக்குகள் என்று சொல்லும் போது நான் அதை வானியல் மண்டலங்களாக கருதுகிறேன். ஆன்மீகத்தில் பல இடங்களில் இந்த மண்டலங்கள் குறித்தான குறிப்புகள் உள்ளது.‌ எடுத்துக்காட்டாக பழமையான இந்திய வேதங்கள் , பிற்காலத்தில் கிழக்கு குறிப்புகள், இவற்றில் உலகுக்கு மேல் செல்லும் பரிமாணங்கள் ஒவ்வொன்றையும் மண்டலங்களாக குறிப்பிடுவதை இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே கண்ணுக்கு புலப்படாத இந்த மண்டலங்களுக்குள் தியானங்கள், மனித மன ஆற்றல் வாயிலாக மனிதர்கள் பயணித்து தான் வருகிறார்கள். உலகக் காரியங்களிலிருந்து விடுப்பட்டு தியான நிலையிலிருக்கும் போது இந்த வானியல் மண்டலங்களின் அடர்த்தி வெகுவாகவே குறைகிறது.
என்னுடைய அடுத்த ஆய்வு நேர்வில் ஆன்மீக சுரங்கப்பாதையை தாண்டிய பின்னும் ஆன்மா தெளிவற்று இருக்கிறது. அவர் முப்பத்திரண்டு வயது இளைஞனாக 1902 ல் சிகாகோ நகரில் மாரடைப்பால் இறந்து போனவர். அவர் தனது இளம் மனைவியையும், தனது பிஞ்சு குழந்தைகளையும் ஏழ்மையில் தவிக்க விட்டு இறந்து போயிருக்கிறார். அவரின் ஆன்மா..

தொடரும்..
 

Attachments

  • IMG_20240929_172930.jpg
    IMG_20240929_172930.jpg
    207.7 KB · Views: 0
  • IMG_20240929_172842.jpg
    IMG_20240929_172842.jpg
    319.3 KB · Views: 0
  • IMG_20240929_173235.jpg
    IMG_20240929_173235.jpg
    276 KB · Views: 0
  • IMG_20240929_173141.jpg
    IMG_20240929_173141.jpg
    342.1 KB · Views: 0
Back
Top