தனிமை 16

Nilaprakash

Administrator
Staff member
கதிரோளி கண்டு ரசித்துப்

இருள் நேசிக்க கூடுமானால்

உண்ட உணவின் ருசி மிகுந்து

சிறிது பசி புசிக்க தோன்றுமானால்

பூக்களின் வசந்தம் முகர்ந்து

சருகுகள் காண விரும்பினால்



கூடு ஒன்று கட்டிக் கொண்டு

கூட்டத்தில் தனிமை தேடும்

மனம் என்றால்…


யாருமற்ற நடுநிசி நிசப்தம்

பிடிக்குமா உங்களுக்கு

அவ்வாறு எனில்

தனிமை காதலிப்போம் வாருங்கள் ❤️❤️❤️

- நிலா பிரகாஷ்
 
Back
Top